என் மலர்
விளையாட்டு
- பதக்கப்பட்டியலில் சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.
- ஒலிம்பிக் நிறைவு விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் அமர்க்களமாக அரங்கேறியது. படகுகள் மூலம் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் அணி வகுத்தனர்.
உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன.
போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், மீண்டும் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.
விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, ஆட்டம், பாட்டம் என்று பார்வையாளர்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக மகிழ்விக்க இருக்கின்றனர். வில் போன்று உடம்பை வளைத்து செய்யும் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
முடிவில் அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அப்போது அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அத்துடன் அமெரிக்க நாட்டு குழுவினர் இசை நிகழ்ச்சியும் சில நிமிடங்கள் நடைபெறும். கடைசியாக எறிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. முதலிடத்தை பிடிப்பது யார் என்பதில் இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
- முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.
- கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
புதுடெல்லி:
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், மனு பாக்கர் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கம் வென்ற 22 வயதான சரப்ஜோத் சிங் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

நாடு திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரப்ஜோத் சிங்குக்கு அரியானா மாநில அரசு விளையாட்டு துறையில் துணை இயக்குனர் பதவி கொடுக்க முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க சரப்ஜோத் சிங் மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'வேலை என்பது நல்லது தான். ஆனால் அதனை இப்போது நான் செய்ய மாட்டேன். முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட விரும்புகிறேன். நான் ஏற்கனவே எடுத்த சில முடிவுகளுக்கு எதிராக செல்ல விரும்பவில்லை. எனவே என்னால் தற்போது வேலை செய்ய முடியாது' என்றார்.
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
- தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்தார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.
இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
- பாரீசில் இருந்து இந்தியா திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 52 ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், பாரீசில் இருந்து இந்தியா திரும்பிய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்துக்கு ஹாக்கி வீரர்கள் சென்றனர். அவர்கள் அங்குள்ள தயான்சந்த் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், ஒலிம்பிக்கில் பெற்ற வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
ஹாக்கியில் இந்திய அணி 3 தங்கப் பதக்கத்தை வெல்ல காரணமாகத் திகழ்ந்தவர் மேஜர் தயானந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
- வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.
இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வினேஷ் போகத் குறித்து ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.
அதில், "வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவளுக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கம் வென்றவர்களை மக்கள் சில காலம் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை சாம்பியன்கள் என்று கூறுவார்கள்.
பதக்கம் வெல்லாதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- பேட்மிண்டனை காட்டிலும் கிரிக்கெட் கடினமானது அல்ல என சாய்னா நேவால் தெரிவித்தார்.
- சானியா நேவாலிடம் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரினார்.
பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.
இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என கடந்த மாதம் சாய்னா நேவால் தெரிவித்தார்.
இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இதனையடுத்து அந்த கருத்து தொடர்பாக சாய்னா நேவாலிடம் ரகுவன்ஷி மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் சாய்னா நேவால் பேசியுள்ளார்.
விராட் கோலி, ரோகித் போன்று ஆக வேண்டும் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் சில வீரர்களால் மட்டும் தான் அதை அடைவார்கள். அதை நான் திறமை என்று நெனைக்கிறேன். நான் ஏன் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும்.
பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் என்னுடைய 300 கிமீ வேகத்திலான ஸ்மாஷ்-ஐ எதிர்கொள்ள முடியாது.
நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்.
நம்மிடம் எத்தனை பேட்மிண்டன் அகாடமிகள் உள்ளன? கிரிக்கெட்டில் எத்தனை அகாடமிகள் உள்ளன. பேட்மிண்டன் விளையாட்டுக்கு போதுமான வசதிகள் இருந்தால் தரமான வீரர்கள் உருவாகுவார்கள்" என்று பேசியுள்ளார்.
- இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
- இந்தியாவின் அமன் ஷெராவத் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, கிரிகிஸ்தானின் ஐபெரி கிஜியுடன் மோதினார். இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பாக ஆடினர்.
இறுதியில், ரித்திகா 1-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆனாலும் ரிபிசேஜ் முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைய வாய்ப்புள்ளது.
இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் நேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
- இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.
இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுதிநீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அரியானா சார்பில் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், வினேஷ் போகத் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி 30 வயதாகிறது.
ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். எனவே வினேஷ் போகத்தால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது என்பதால் அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
- இந்திய வீராங்கனை ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
- இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, ஹங்கேரியின் நாகி பெர்னட்டை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இறுதியில், ரித்திகா 12-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
- தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.
இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.
தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.
- குமார சங்ககாரா இங்கிலாந்து ஒயிட்-பால் அணிக்கு பயிற்சியாளராக செல்ல வாய்ப்பு.
- அதனால் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளதாக தகவல்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 2014-ம் ஆண்டு வரை வீரராக விளையாடினார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டரை முதல் மூன்று மாதம் என்பதால் அதை ஏற்பதில் சிரமம் இருக்காது. பெரும்பாலான பயிற்சியாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சங்ககாரா உள்ளார். இவர் இங்கிலாந்து ஒயிட்-பால் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்கராவை நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து சங்கக்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கக்கரா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை சங்ககாரா ஏற்றுக்கொண்டால், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் பாண்ட், டிரேவர் பென்னி இருந்து வருகிறார்கள்.
இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து மேத்யூ மோட் வெளியேற இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு மாற்று பயிற்சியாளரை தேடிவருகிறது.
- ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
- இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.
ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது பதக்க பட்டியலில் 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்திலும், 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளது.
இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 59-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 69-வது இடத்தில் உள்ளது.






