என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது
    • இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு சர்ச்சைகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைந்ததாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு பெற உள்ளது.

    அந்த வகையில், பாலின சர்ச்சைக்கு ஆளான அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் நேற்று  நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

     

     

    முன்னதாக 66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதையடுத்து இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையானது.

    இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இமானேவுக்கு ஆதரவாக ஒலிம்பிக் கமிட்டி துணை நின்றது. உலகம் முழுவதிலும் பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • 'அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர்'
    • 'தனது தாய், அர்ஷத் குறித்து கூறியது பற்றி நீரஜ் சோப்ரா மனம் திறந்துள்ளார்'

    பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று முன் தினம் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான் என்று தெரிவித்திருந்தார் 

    பாஸ்கிதானும் இந்தியாவும் எதிரிகள் என்ற பொதுப்படையாக இந்தியர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் மனநிலையில் இருந்து விலகி நீரஜின் தாய் கூறியிருந்த இந்த கருத்து அனைவரையும் கவர்ந்தது.

     

    இந்நிலையில் தனது தாய் அர்ஷத் குறித்து கூறியது பற்றி நீரஜ் சோப்ரா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பாரீசில் வைத்து செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், எனது தாய் கிராமத்தில் வாழ்கிறார், தொலைக்காட்சிகளோ, சமூக வலைதளமோ, செய்திகளோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பின்புலம் கொண்ட கிராமம் அது.

    [பொதுவெளியில் இருக்கும்] இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் குறித்து அவருக்கு தெரியாது. அவர் ஒரு தாயாக மட்டுமே தன்னை உணர்கிறார். எனவே தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக அவர் பேசியுள்ளார். தாயின் ஸ்தானத்தில் இருந்து அவர் இதைப் பேசினார். இது சிலருக்கு விநோதமாகத் தோன்றலாம். சிலர் இதை விரும்பியும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில் உள்ள கந்த்ரா[ Khandra] கிராமத்தைச் சேர்த்தவர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அர்ஷத் நாதீமின் தாயும் நீரஜ் சோப்ராவும் தனது மகன் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

     

    • 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

    அப்போது, ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராத் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து, அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.

    • காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.
    • நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் என காம்ப்ளி கூறினார்.

    சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததையும், அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் வினோத் காம்ப்ளி தனது வைரலான வீடியோ குறித்து அவர்களிடம் பேசுகையில். "நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் கூறுகையில், "நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் குணமடைந்து வருகிறார், அவரது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. வைரலாகி வரும் காணொளி பழையது" என்று தெரிவித்துள்ளார். 

    இதன்மூலம் வினோத் காம்ப்ளி தற்சமயம் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரராக அறியபட்ட வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்காக 1991-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3,500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • காயத்தில் இருந்து மீண்ட சமி பேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்துள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காயத்தால் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் முகமது சமி பங்கேற்காமல் இருந்தார்.


    இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது சமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக ஊள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர் தற்சமயம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இந்தியா 5 பதக்கங்களுடன் 64-வது இடத்தில் உள்ளது.
    • ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    பாரிஸ்:

    2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஒலிம்பிக் தொடர் முடிவடைய உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் சில போட்டிகளே மீதம் உள்ளன. அவற்றிலும் பதக்கம் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

    ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். இதுவரை இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களுடன் 64-வது இடத்தில் உள்ளது.

    அதே சமயம் பாகிஸ்தான் இந்த ஒலிம்பிக் தொடரில் ஒரே ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே வென்று உள்ளது. வேறு எந்த பதக்கமும் வெல்லவில்லை. ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் பாகிஸ்தான் பதக்கப் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ளது.

    மொத்தமாக 5 முதல் 7 பதங்கள் வாங்கிய நாடுகள் கூட ஒரே ஒரு தங்கம் பதக்கம் வாங்கிய பாகிஸ்தானுக்கு பின்னால் தான் இருக்கிறது.

    இந்தியா இனி தங்கப் பதக்கம் வென்றால் மட்டுமே பாகிஸ்தானை முந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு கோல்ஃப், ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ரிலே ரேஸ், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான ஒரு போட்டி மற்றும் மகளிர் மல்யுத்தத்தில் 76 கிலோ எடை பிரிவு போட்டி ஆகியவை மட்டுமே மீதமுள்ளன. இவை எதிலும் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இல்லை.

    தற்போது ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலத்துடன் மொத்தம் 103 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் சீனா 29 தங்கம், 25 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் வென்று உள்ளது. 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் வென்றுள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 113 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஆன டோனி டி ஜோர்ஜி 78 ரன்னும், கேப்டன் பவுமா 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வியான் முல்டர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • ஒலிம்பிக்கில் பங்கேற்ற எகிப்திய மல்யுத்த வீரரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
    • மல்யுத்த வீரர் விடுவிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

    பாரிஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் 11-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற எகிப்திய மல்யுத்த வீரரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

    26 வயதான முகமது எல்சைட், மதுபோதையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளதாக பாரீஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர் விடுவிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

    • இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் 1-1 என சமனிலையில் முடிந்தது.
    • வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து 3-1 என வென்றது.

    பாரீஸ்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.

    இதில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    கடைசி வரை போராடிய ஜெர்மனி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்று வெண்கல பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    • ஈட்டியெறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்தார்.
    • தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    தற்போதைய வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் ஒலிம்பிக் சாதனையை முறியடித்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார். மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் கூறினார்.

    • ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர்.
    • பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    பாரிஸ்:

    2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டு முறை 90 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டியை வீசி மாபெரும் சாதனை படைத்தார்.

    ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர். நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் என்பவர் 90.57 மீட்டர் தூரம் வீசியதே இதுவரை ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த இறுதிப் போட்டியில் இரண்டு முறை அர்ஷத் நதீம் முறியடித்தார். தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனையை உடைத்தார். பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். ஹர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக பாகிஸ்தான் 32 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


    இதனையடுத்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அர்ஷத் நதீம் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை உடம்பில் சுற்றிகொண்டு உலா வந்தார். மேலும் அவரது பயிற்சியாளரை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவரது வெற்றிக்கு இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ×