என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு பயிற்சி அளிப்பது சற்று வித்தியாசமானது.
- நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன்.
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டின் பெயரும் இடம்பிடித்திருந்தது.
இநிலையில் சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக இருப்பதை விட ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக தொடர விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இப்போது எனக்கு சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக செயல்படுவதற்கு உண்மையில் எனக்கு நேரம் இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருக்க வேண்டும் எனில் அதற்காக அதிக நேரத்தை செலுத்த வேண்டும்.
மேலும் எனது வர்ணனையாளர் வேலைகள் மற்றும் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தினருடன் அதிகம் நேரத்தை செலவிடாதது உள்ளிட்ட காரணங்களினாலும் இதனை என்னால் செய்யமுடியாது. மற்ற சர்வதேச அணிகளுக்கு பயிற்சியளிப்பதை ஒப்பீடுகையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு பயிற்சி அளிப்பது சற்று வித்தியாசமானது.
இப்போது இங்கிலாந்து அணி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பயிற்சியாளரை நியமிக்கும் என்பதால், என்னால் அதில் அதிகளவு ஈடுபடுத்த முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய பட்டியலில் இருந்து எனது பெயரை இப்போதே நீக்கிவிடலாம்.
மேற்கொண்டு நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் இத்தொடரின் ஆரம்ப நாட்களில் ஒரு வீரராக இருந்தாலும் சரி அல்லது மும்பையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சில வருடங்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு வருடமும் நான் எனது சிறந்த செயல்பாட்டை வழங்கி இருக்கிறேன்.
மேலும் டெல்லி அணியில் கடந்த ஏழு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த நிலைலும், துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்தில் எதும் நடக்கவில்லை. அதனால் அவர்கள் இம்முடிவை எடுத்திருக்கலாம்.
என்று பாண்டிங் கூறினார்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.
- நேற்றைய போட்டியுடன் ஹாக்கியில் இருந்து ஸ்ரீஜேஸ் ஓய்வை அறிவித்தார்.
33-வது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 103 பதக்கங்களை கைப்பற்றி அமெரிக்கா பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. சீனா 73 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதே போன்று ஆஸ்திரேலியா 45 பதக்கங்களுடன் 3-வது இடம் பிடித்துள்ளது. இதுவரையில் இந்தியா 4 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 5 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 64-வது இடத்தில் உள்ளது.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இதில், ஹாக்கி இந்தியா அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்தடுத்து 2 கோல் அடிக்கவே இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்று வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.
இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அணியின் கோல் கீப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 1988-ம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிறந்து வளர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷ், 2006-ம் ஆண்டு இந்தியா அணியில் இடம் பெற்றார். எனினும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் கோல் கீப்பராக இடம் பெற்று விளையாடி வந்துள்ளார். 2016 -ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு சில ஆண்டுகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஸ்ரீஜேஷ் உதவியுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.
ஹாக்கி இந்தியா அணியில் சிறந்த பங்களிப்பை அளித்ததன் மூலமாக கேல் ரத்னா விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் இந்திய அணியில் கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஷ் ஹாக்கி போட்டியிலிருந்து நேற்று ஓய்வு அறிவித்தார். இதைத் தொடந்து ஜூனியர் ஹாக்கி இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிஆர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளது.
- நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை.
- ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.55 மணிக்கு பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை லெவரோன் சிட்னி மெக்லாக்லின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 50.37 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அவர் 50.65 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து மெக்லாக்லின் புதிய சாதனை நிகழ்த்தினார்.
மற்றொரு அமெரிக்க வீராங்கனை அனா காக்ரெல் 51.87 வினாடியில் கடந்து வெள்ளியும், நெதர்லாந்தை சேர்ந்த பெமே போல் 52.15 வினாடியில் கடந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.
உலகின் அதிவேக வீரரான அமெரிக்காவை சேர்ந்த நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 19.70 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
போஸ்ட்வானாவை சேர்ந்த டெபேகோ 19.46 வினாடியில் கடந்து தங்கப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் கென்னத் பெட்னரிக் 19.62 வினாடியில் கடந்து வெள்ளியும் பெற்றனர்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேர்லேவே 12.99 வினாடியில் கடந்த தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் டேனியல் ராய்ட்ஸ் (13.09 வினாடி) வெள்ளியும், ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.
பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை தாரா டேவில் 7.10 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜெர்மனி, அமெரிக்காவுக்கு முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.
- ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
- வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இது அர்ஷத் நதீமமுக்கான நாள் என்று தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா ஒரு வெள்ளியும், 4 வெண்கலமும் வென்றுள்ளது. நேற்று நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் ஹாக்கி அணியே 3 முறை தங்கம் வென்றுள்ளது. எனவே தற்போதைய வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இது அர்ஷத் நதீமமுக்கான நாள் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி1984 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்களம் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது பாஸ்கிதான்.
கடைசியாக 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்சில்தான் பாகிஸ்தான் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஈட்டியெறிதலில் முந்திய வீரர்களின் ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்து 92.97 மீட்டர் ரெக்கார்டை பதிவு செய்து தங்கம் வென்றுள்ள அரஷத் நதீம் , 95 மீட்டர்களை தாண்டுவதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

- இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
- பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று மோதின.
இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, வெண்கலம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
- இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கம் ஆகும். முன்னதாக இந்தியா நான்கு வெண்கல பதக்கங்களை வென்று இருந்தது. ஈட்டி எறிதலை பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3-வது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றிருந்தார். தற்போது அவர் தனது சாதனையை முறியடித்த நிலையிலும், தங்க பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டுள்ளார்.
- ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார்.
- அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார்.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராத் அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார்.
அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார்.
- உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம்.
- இந்தியா இறுதிப்போட்டிக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பாரீஸ்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தியது.
இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கூறியதாவது:
இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் மீண்டும் வென்றுள்ளோம். இந்திய ஹாக்கி அணி வளர்ந்துள்ளது. எந்தப் பெரிய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இது முழு நாட்டிற்கும் பெரிய விஷயம், எங்களுக்கும் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.
நிறைய காத்திருக்க வேண்டிய நிலை இது. நீங்கள் பல கட்டங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஹாக்கி வீரராக, இது எளிதானது அல்ல.
நாங்கள் ஒரு அணியாக விளையாடியதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். பயிற்சியாளர்களுக்கு நன்றி.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
பதக்கத்தின் நிறத்தை மேம்படுத்த அணி முயற்சி செய்யும். இங்கு தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் கனவாக இருந்தது. அனைவரும் எங்களை நம்பினர்.
எப்பொழுது மைதானத்திற்கு வந்தாலும் வெற்றி பெறத்தான் வருவோம் என்பதே நமது மனநிலை. சில நேரங்களில் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. இது எங்கள் விதி என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் ஹாக்கியின் வரலாறு மிகப் பெரியது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்லவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஹாக்கிக்கு அன்பைக் கொடுங்கள், எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இதை விட சிறப்பாகச் செய்து நாட்டிற்கு பதக்கங்களை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சண்டிகர்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.
இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
- இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.
கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.
இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.
- இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது.
- இலங்கைக்கு எதிரான தொடரில் பும்ரா இடம் பெறவில்லை.
கொழும்பு:
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது. இந்த தொடரில் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கம்பீருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் இந்த தொடரில் இந்தியா சொதப்பியது என்று சொன்னால் பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. இலங்கை அணி விக்கெட்டுகளை முதலில் அடுத்தடுத்து எடுத்தாலும் கடைசி மூன்று வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவை கிண்டல் அடித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஜீரோவாக இருக்கிறது. மேலும் தாம் சொல்வதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பலரும் நீங்கள் சொல்வது சரிதான் பும்ரா போன்ற ஒரு வீரர் இல்லாமல் இந்தியா தடுமாறி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் விளையாடினர். அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்த விதம்தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் கம்பீரை சாடி வருகின்றனர்.
- இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்கள் அடித்தார்.
- 3-வது பாதியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பாரீஸ்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.
கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் முதல் கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதனையடுத்து நடந்த 2-வது கால் பாதியின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் தனது முதல் கோலை பதிவு செய்தது. 2-வது கால் பாதியின் இறுதி வரை போராடிய இந்திய அணி 30-வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. இதனால் 1-1 என்ற கணக்கில் 2-வது கால் பாதி சமன் நிலையில் இருந்தது.
3-வது கால் பாதியின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. ஸ்பெயின் அணியால் கோல் போடமுடியவில்லை. இதனால் 3-வது கால் பாதியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 4-வது மற்றும் கடைசி கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றனர். இறுதி வரை போராடிய நிலையில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றது.






