என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Major DhyanChand"

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • பாரீசில் இருந்து இந்தியா திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 52 ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், பாரீசில் இருந்து இந்தியா திரும்பிய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்துக்கு ஹாக்கி வீரர்கள் சென்றனர். அவர்கள் அங்குள்ள தயான்சந்த் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், ஒலிம்பிக்கில் பெற்ற வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

    ஹாக்கியில் இந்திய அணி 3 தங்கப் பதக்கத்தை வெல்ல காரணமாகத் திகழ்ந்தவர் மேஜர் தயானந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×