என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    நேற்றுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீரரான சிவராஜன் சோலைமலையின் 'பிளையிங் ரிட்டர்ன்' ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

    ஹாங்காங் வீரர் மான் கை சூவுக்கு எதிரான ஆண்கள் ஒற்றையர் SH6 குரூப் பிளே ஸ்டேஜ் ஆட்டத்தில், சிவராஜன் சோலைமலை சில அற்புதமான ஷாட்களை அடித்துள்ளார். இருப்பினும் இந்த ஆட்டத்தில், 13-21, 21-18, 15-21 என்ற கணக்கில் சோலைமலை தோல்வியடைந்தார்.

    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
    • ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'பாரா ஒலிம்பிக்' என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

    பாரா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் அருகில் அல்லது அடுத்தது என்று பொருள் ஆகும். ஒலிம்பி போட்டிகளுக்கு அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இதனை பாரா ஒலிம்பிக் என்று அழைக்கின்றனர்.

    ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனியர் வீரர்கள் விளையாடிடும் மகாராஜா டி20 லீக்கில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
    • பேட்டிங் செய்வதுடன் மிதவேக பந்து வீச்சாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.

    இதற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன் சுமித் இடம் பிடித்துள்ளார்.

    இரண்டு வகையிலான தொடருக்கான அணியிலும் சமித்திற்கு இடம் கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் மகாராஜா டி20 டிராபியில் மைசூரு வாரியர்ஸ் அணியில் சமித் சீனியர் வீரர்கள் விளையாடும் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் சமித் ஏழு போட்டிகளில் 82 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 114 ஆகும். பேட்டிங் செய்வதுடன் சமித் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தியாவின் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிரடி வீரரான இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். இந்த அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தியா வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என இவர்கள் கருதுகிறார்கள். விரைவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா "சி" அணியில் சூர்யகுமார் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் புச்சிபாபு கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும்போது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

    இதனால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்பும் சூர்யகுமாருக்கு காயம் வழிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு அணிக்கெதிராக மும்பைக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். தமிழ்நாடு லெவன் 379 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 156 ரன்னில் சுருண்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 5,628 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.62 ஆகும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

    • முதல் இரண்டு செட்டுகளை இழந்த ஜோகோவிச், அதன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடிவில்லை.
    • 3-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினாலும் 4-வது செட்டை 6-4 இழந்தார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலேக்சி பாபிரின்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 வயதான அலேக்சி பாபிரின் முதல் செட்டை 6-4, 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி ஷாக் அளித்தார்.

    ஆனால் 3-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான விளையாடி 6-2 இந்த செட்டை கைப்பற்றினார். இதனால் அனுபவ வீரரான ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்டுகளையும் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 4-வது செட்டை 4-6 என இழக்க, 6-4, 6-4, 2-6, 6-4 என தோல்வியடைந்து அதிர்ச்சிகரமாக அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே அல்காரஸ் 2-வது சுற்றில் தரநிலை பெறாத வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    2 மற்றும் 3-ம் நிலை வீரர்களான ஜோகோவி் மற்றும் அல்காரஸ் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 20 சதங்கள் அடித்துள்ளார்.
    • ஜோ ரூட் 32 சதங்கள் அடித்து அலைஸ்டர் குக் சாதனையை சமன் செய்துள்ளார்.

    கிரிக்கெட்டில் இந்த தலைமையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள்.

    இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதம் ரசிகர்களுக்கு இடையில் மட்டுமல்ல, முன்னாள் வீரர்களுக்கு இடையிலும் ஏற்படுவதுண்டு.

    இந்திய அணியின் விராட் கோலி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஜோ ரூட் பெரும்பாலும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறது.

    இந்திய நான்கு பேர்களில் ஒட்டுமொத்தமாக அதிக சதம் அடித்தவர் விராட் கோலி. ஆனால் டெஸ்ட் போட்டியில் அவர் மற்ற மூன்று பேர்களை விட சற்று குறைவாக உள்ளார்.

    நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். இதன்மூலம் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அலைஸ்டர் குக் உடன் பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்தவர் என்பது போல் மைக்கேல் வாகன், இருவர்களுக்கும் இடையிலான ஒப்பிட்டை வெளிப்படுத்தி, "மார்னிங் இந்தியா" என இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார்.

    விராட் கோலியை விட 72 இன்னிங்ஸ்கள் அதிகமாக ஜோ ரூட் விளையாடியுள்ளார் என இந்திய ரசிகர் ஒருவர் பதில் அளித்துள்ளார். மேலும் இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • கமிந்து மெண்டில் மட்டும் தாக்குப்பிடித்து 74 ரன்கள் சேர்த்தார்.
    • ஐந்து பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் 29-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் (143), கஸ் அட்கின்சன் (118) ஆகியோரின் சதத்தால் நேற்றைய 2-வதுநாள் ஆட்டத்தின்போது 427 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. கமந்து மெண்டிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 74 ரன்கள் அடிக்க இலங்கை அணி 196 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கட் 15 ரன்னுடனும், ஒல்லி போப் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது.
    • பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும், பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற மணீஷ் நர்வாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • கனமழையால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

    இதையடுத்து, கனமழை காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    • இந்திய அணி இன்று மொத்தம் 4 பதக்கக்களை வென்றுள்ளது.
    • இதில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி 3 பதக்கங்கள் பெற்றது.

    பாரீஸ்:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா பங்கேற்றார்.

    இதில் சிறப்பாக செயல்பட்ட ராமகிருஷ்ணா, ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டுள்ளார். தேவரட்டி ராமகிருஷ்ணா 6 சுற்றில் மொத்தம் 630.7 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தார்.

    முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே பதக்க வாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள். நியூசிலாந்தின் ஜான்சன் மைக்கேல் 630.8 புள்ளிகள் பெற்று எட்டாவது இடம்பிடித்து பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.

    இதன்மூலம் ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா தவறவிட்டுள்ளார்.

    • துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்திய அணி 2 பதக்கம் பெற்றது.
    • ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இவர் மொத்தம் 234.9 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார்.

    கொரியா தங்கப் பதக்கமும், சீனா வெண்கலமும் வென்றது.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ஏற்கனவே. துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.

    • போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
    • கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.

    இரண்டு ஆண்டுகள் கழித்து நவாமி ஒசாகா அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கினார். ஜெலனா ஒஸ்டாபென்கோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நவாமி இந்த போட்டியில் அணிந்திருந்த ஆடையால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.

    நியான் கிரீன் நிற ஆடை அணிந்து களத்திற்குள் என்ட்ரி கொடுத்த நவாமி போட்டி துவங்குவதற்கு முன்பே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வழக்கமான டென்னிஸ் ஆடையை சற்று மறு வடிவமைப்பு செய்த நவோமா, ஜாக்கெட்-ஐ அலங்கரித்து அணிந்திருந்தார். இத்துடன் கால் சட்டையை சுற்றிலும் அலங்கரிப்பு வேலைகள் செய்யப்பட்டு இருந்தன.

    இவர் அணிந்திருந்த ஆடையை பின்புறம் இருந்து பார்த்தால் பட்டாம்பூச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஜாக்கெட்டில் நீண்ட டை இணைக்கப்பட்டு இருந்தது. இதே போல் கால் சட்டையில் சிறு சிறு மடிப்புகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருந்தன. தனது ஆடை போட்டியில் எந்த இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்ட நவாமி வெற்றி வாகை சூடினார்.



    ×