என் மலர்
விளையாட்டு
- கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
- தமிழ்நாடு டிராகன்ஸ் அரைஇறுதியில் பெங்கால் டைகர்சை சந்திக்கிறது.
ரூர்கேலா:
8 அணிகள் பங்கேற்ற ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் தனது 10-வது போட்டியில் உ.பி. ருத்ரா அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது. டிராகன்ஸ் அணிக்காக ஜின் ஜான்சென் (32-வது நிமிடம்) , தாமஸ் சோர்ஸ்பி (53-வது நிமிடம்) ஆகியோரும் உ.பி. அணிக்காக சுதீப் சிர்மாகோ (8-வது நிமிடம்), லலித் குமார் (15-வது நிமிடம்) ஆகியோரும் கோல் அடித்தனர். பின்னர் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. மயிரிழையில் வெளியேற்றப்படுவதில் இருந்து தப்பியது.
தமிழ்நாடு டிராகன்ஸ் 6 வெற்றி (பெனால்டி ஷூட் 2) , 4 தோல்வியுடன், (பெனால்டி ஷூட் 2) 18 புள்ளிகள் பெற்று 4- வது இடத்தை பிடித்தது. பெங்கால் டைகர்ஸ், சூர்மா ஹாக்கி கிளப் (தலா 19 புள்ளிகள்), ஐதராபாத் டூபான்ஸ், 18 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து முன்னேறின. உ.பி. ( 17 புள்ளி), கலிங்கா லான்செர்ஸ், கோனசிகா (தலா 12 புள்ளி), டெல்லி பைபர்ஸ் 5 புள்ளி) ஆகிய அணிகள் 5 முதல் 8- வது இடங்களை பிடித்து வெளியேறின.
இன்று ஓய்வு நாளாகும். அரைஇறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. தமிழ்நாடு டிராகன்ஸ் அரைஇறுதியில் பெங்கால் டைகர்சை சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் சூர்மா ஹாக்கி கிளப் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.
- கடந்த 2021-ம் ஆண்டில் தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தனர்.
- இதனால் தற்போது அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிட்னி:
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் விளையாட்டும் அடங்கும். விளையாட்டை உயிர் மூச்சாகக் கருதிய வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் அங்குள்ள பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வீராங்கனைகள் நேற்று பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக எங்கள் அணி இந்தப் போட்டியில் களம் காண்கிறது.
சொந்த நாட்டில் அனைத்தையும் இழந்த நாங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த முயற்சியில் எங்களோடு துணை நிற்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களுக்கு நன்றி. இது வெறும் அணி அல்ல. இது மாற்றத்தை முன்னோக்கியுள்ள ஒரு இயக்கம்.
இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு முக்கியமானது. கல்வி, வேலை, விளையாட்டு என மறுக்கப்பட்ட பல்வேறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் கிடைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இது இருக்கும். எங்களில் பலர் தலிபான் ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டவர்கள்.
கடந்த 2021-ம் ஆண்டில் தலிபான்கள் வீடுகளில் புகுந்து எங்கள் ஜெர்சிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை எரித்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையான மெல் ஜோன்ஸ் உதவியால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்று, அதன்பின் ஆஸ்திரேலியாவை அடைந்தோம் என நினைவு கூர்ந்தனர்.
ஆப்கானிஸ்தான் மகளிர் லெவன் அணி, கிரிக்கெட் வித் அவுட் பார்டர்ஸ் லெவன் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவு அளித்துள்ளது.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ஹாங்காங் வீரர் ஜேசன் குணவான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.
- கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்துள்ளனர்.
காலே:
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா, டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரைசதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று ஆடி சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்னும், ஸ்மித் 104 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், 2வது நாள் இன்று நடந்து வருகிறது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 141 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 266 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- விஜய் ஹசாரே தொடரில் 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
விஜய் ஹசாரே தொடரில் மிக அற்புதமாக விளையாடிய கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அஜித் அகர்கர் கூறியது தொடர்பாக பேசிய கருண் நாயர், "சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் எனது பெயர் பரிசீலிக்கப்படும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்காக நான் நன்றி கூறி கொள்கிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அது மட்டும் தான் என் மனதில் உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்காக 2027 ஆம் ஆண்டில் கருண் நாயர் தனது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை அவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.33 என்ற சராசரியுடன் 374 ரன்கள் அடித்துள்ளார். அதில் 303 நாட் அவுட் என்ற ஒரு முச்சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அருண் ஜெட்லி மைதானத்தில் இளம் வீரர்களுடன் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
- ரெயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
புதுடெல்லி:
விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.
இந்நிலையில், ரஞ்சி டிராபி போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி நேற்று ஈடுபட்டார். 36 வயதான அவர் டெல்லி அணி வீரர்களுடன் அருண் ஜெட்லி மைதானத்தில் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
விராட் கோலி பயிற்சி தொடங்கும் முன்னர் தனது கிட் பையை இழுப்பதைக் கண்ட டெல்லி அணி மேலாளர், அவருக்கு உதவுமாறு சில இளம் வீரர்களிடம் சைகை செய்தார். ஆனால் இந்த வாய்ப்பை கோலி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
கோலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சியாளராக இருந்த பதி, விராட் அவர்கள் உங்களுக்கு உதவட்டும் என கூறியதற்கு, கோலி, என்ன சொல்கிறீர்கள்? இது என்னுடைய கிட், நானே அதை எடுத்துச் செல்கிறேன் என தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 10-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளூரைச் சேர்ந்த மேக்ஸ் வார்மெர்டமை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சுலோவெனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசிவை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, மென் டோன்கா ஆகியோர் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர்.
உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் செர்பிய வீரர் அலெக்சி ஷாரனாவை வீழ்த்தினார்.
10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 5 சுற்றுகளில் டிரா செய்தார். இன்னும் 3 ரவுண்டு எஞ்சியுள்ளது.
நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளியும், எரிகேசி , மெண்டோன்கா தலா 3 புள்ளியும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி ஆர்.வைஷாலி 10-வது சுற்றில் செக் குடியரசுவைச் சேர்ந்த வான் நூயனிடம் தோற்றார். அவர் 5 புள்ளியுடன் 10-வது இடத்தில் உள்ளார்.
- டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியது.
- டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
புதுடெல்லி:
விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி-ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.
ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்தினுள் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார். உடனே பதறிய கோலி அவரை தூக்கி விட்டார். அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
விராட் கோலி ஆடும் இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
விராட் கோலி பயிற்சி செய்யும்போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜ்கோட்டில் நடந்த 3- வது ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 3- வது ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நாளை ( 31 -ந்தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும். ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடிய வேகப்பந்து வீரர் முகமது ஷமி முதல் ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் அர்ஷ் தீப்சிங் அணிக்கு திரும்புவார். கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எடுபடவில்லை. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டுமே தொடர்ந்து நிலையாக பந்து வீசி வருகிறார். பேட்டிங்கில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜ்கோட்டில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து தொடரை இழக்காமல் இருந்தது. நாளைய போட்டியும் அந்த அணிக்கு முக்கியமானது. வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் பட்லர், டக்கெட், லிவிங்ஸ்டன் ஆகியோரும் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 27 ஆட்டத்தில் இந்தியா 15 -ல், இங்கிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இதுபற்றி இருதரப்பும் எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தனர்.
- மஹிரா ஷர்மாவின் தாய் விளக்கம்.
பிரபல பாலிவுட் நடிகை மஹிரா ஷர்மா. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 13-ல் பங்கேற்ற இவர் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டேட்டிங் செய்வதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுபற்றி இருதரப்பும் எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், முகமது சிராஜுடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல்களுக்கு மஹிரா ஷர்மாவின் தாய் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மஹிரா ஷர்மா மற்றும் முகமது சிராஜ் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. என் மகள் பிரபலமாக இருப்பதால், அவள் பெயரை இப்படி தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆஷா போஸ்லேவின் பேத்தி சனாய் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த தகவல்களை பொய் என்று சனாய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்குகிறது.
- டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.
டெல்லி:
12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
கடந்த வாரம் வரை டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தற்போது விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது. ஜியோ சினிமா விராட் கோலி ஆடும் போட்டியை ஒளிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.
டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் ஆடும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் போனால் விராட் கோலியை பார்க்க வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் மைதானத்திற்கு வர முயல்வார்கள். எனவே, மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விராட் கோலி பயிற்சி செய்யும் போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
என்று ஜெப் அலர்டிஸ் கூறினார்.






