என் மலர்
விளையாட்டு
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
- பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் முன்னாள் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ உடன் மோதினார்.
இதில் அலெக்சாண்ட்ரோ 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னாள் சாம்பியனான எலினா ரிபாகினா அதிர்ச்சி தோல்வ் அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
2023-ம் ஆண்டில் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் கிம்முடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-19 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கின் அடுத்த இரு செட்களை 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் 2வது போட்டி இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, பிரிட்டனின் ஹென்றி பேட்டன்-பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய யூகி பாம்ப்ரி ஜோடி, 2வது செட்டை 7-5 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை யூகி பாம்ப்ரி 10-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- கே.எல். ராகுல் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
- ஐபிஎல் போட்டி தொடங்கும்போது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
தற்போது அவரது மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. வெற்றி சந்தோகத்தில் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Oh, Baby! எனப் பதிவிட்டுள்ளார்.
குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், கேப்டன் பதவியை நிராகரித்து ஒரு வீரராக விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.
வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மெஹ்முதுல்லா கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது.
மெஹ்முதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டியில் 5 சதங்களுடன் 2914 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 5689 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 2444 ரன்களும் அடித்துள்ளார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43, ஒருநாள் கிரிக்கெட்டில் 82, டி20 கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
- நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம்.
- எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது.
ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.
எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர் மற்றும் என்னுடன் ஆறு பேரை தக்கவைத்தது. இதனால் அவர் அணியில் இருந்து வெளியிடுவது கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து தொடரின்போது அவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பட்லரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராாக இல்லை என்று முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை எனத் தெரிவித்தேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு விசயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால், ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் வீரர்களை வெளியிட வேண்டும் என்ற விதியை மாற்றுவேன்.
ஐபிஎல் விதிக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக உருவாக்கிய அந்த இணைப்பை, உறவை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நான் வேறு என்ன சொல்ல முடியும்?.
இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
- மெத்வதேவ் 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ஹோல்கர் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீரர் மேட்தேவ் மற்றும் அமெரிக்க வீரர் டாமி பால் மோதினர்.
இந்த போட்டியில் மெத்வதேவ் 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் டென்மார்க் வீரரான ஹோல்கர் மோதினர். இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ஹோல்கர் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது உள்ள வீரர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்தியா எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் விளையாடுவதால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற்றதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது. சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும்.
இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது. தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது.
கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது. நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைடு எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள்.
என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறினார்.
- மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெர்ரி 49 ரன்கள் குவித்தார்.
- பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.
இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.
அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.






