என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: முன்னாள் சாம்பியனை வெளியேற்றிய ரஷிய வீராங்கனை
    X

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: முன்னாள் சாம்பியனை வெளியேற்றிய ரஷிய வீராங்கனை

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் 3வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் முன்னாள் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ உடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரோ 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னாள் சாம்பியனான எலினா ரிபாகினா அதிர்ச்சி தோல்வ் அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    2023-ம் ஆண்டில் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×