என் மலர்
விளையாட்டு
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 6-3 என வென்றாலும், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்து, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நாம்பர் 2 வீராங்கனையும், போலந்தைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக். பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 2-6, 5-7 என அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் 19 வயதான பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்போல்-ஜூலியன் காஷ் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டை 6-3 என வென்றது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரிட்டன் ஜோடி 10-8 என கைப்பற்றியது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
- டி காக் அதிரடியில் கொல்கத்தா 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ரன்னும், ரியான் பராக் 25 ரன்னும், சஞ்சு சாம்சன் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் ரகானே 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
3வது விக்கெட்டுக்கு டி காக், ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தது. டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டி காக் 97 ரன்னும், ரகுவன்ஷி 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் பல்கேரியாவின் டிமித்ரோவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-2, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
- சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஜுரெல் 33 ரன்களும், ஜெய்ஸ்வால் 29 ரன்களும் சேர்த்தனர்.
- வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் சிறப்பாக பந்து வீச ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
ரியான் பராக் 25 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்னிலும், ஹசரங்கா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷுபம் துபே 9 ரன்னிலும், ஹெட்மையர் 7 ரன்னிலும் வெளியேறினர்.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஃப்ரா ஆர்ச்சர் அதரடியாக இரண்டு சிக்சர்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ச்சர் 7 பந்தில் 16 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் இடம் பெறவில்லை.
- மொயீன் அலி முதன்முறையாக கொல்கத்தா அணிக்காக களம் இறங்க உள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா முதல் போட்டியில் ஆர்சிபி-யிடம் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அண விவரம்:-
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர், வணிந்து ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா, தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-
டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், மொயீன் அலி, ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
- 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 14 சீசன்களாக 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் 15-வது சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.
2022-ம் ஆண்டில் குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வென்றது. லக்னோ அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 2023-ம் ஆண்டு குஜராத் 2-வது இடத்தையும் லக்னோ அதே 3-ம் இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டு லக்னோ 7-வது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெற்றி பெற்ற டாப் 5 அணிகளில் லக்னோ அணி 4-வது இடத்தில் உள்ளது.
2022ல் அறிமுகமான லக்னோ, தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2022, 2023) பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. 2024-ல் சற்று பின்தங்கினாலும், 44 போட்டிகளில் 24 வெற்றிகளுடன் 55.81% வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன்களாக களமிறங்கிய அனைவரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். அதன்படி 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதேபோல் 2023-ம் ஆண்டு மற்றொரு கேப்டனான குர்ணால் பாண்ட்யாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். இது புதுவிதமான சாதனையாக உள்ளது.
- வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சுனில் குமாருடன் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங் மோதினார்.
- ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக சுனில் குமார் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி ஜோர்டன் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடந்து வருகிறது. இதில் 87 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
87 கிலோ பிரிவில் காலிறுதியில் தஜிகிஸ்தானின் சுக்ரோப் அப்துல்கயேவை 10-1 என்ற கணக்கில் சுனில் குமார் வீழ்த்தினார். அரையிறுதியில் ஈரானின் யாசின் யாஸ்டியிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை எதிர் கொண்டார். இதில் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை வீழ்த்தி சுனில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக சுனில் குமார் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த சீசனில் 5 போட்டிகள் முடிந்த நிலையில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
- போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டி கடைசி ஓவர் வரை வாணவேடிக்கையாக இருந்தது.
முதலில் பேடிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப்பின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவானது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி வரை போராடி 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் தற்போது வரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதிலாக பேட்டிங் என்று சொல்லலாம் என தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரும் குஜராத் அணியின் வீரருமான ரபாடா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக உள்ளது. போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று சொல்லுங்கள் அது தான் சரியாக இருக்கும்.
சில சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது பரவாயில்லை. அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் நல்லது. ஆனால் குறைந்த ஸ்கோரிங் ஆட்டங்களும் அப்படித்தான். பேட்டிங் மற்றும் பந்துக்கு இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று ரபாடா ஆதங்கத்துடன் கூறினார்.
- ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது அதிரடியாக விளையாடி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி ஓவரை முழுவதும் ஷஷாங்க் சிங் விளையாடி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பந்து கூட கொடுக்காமல் 5 பவுண்டர்கள் விளாசினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
யாராக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் ஒரு ரன் எடுத்து கொடுத்து அவரை சதம் அடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் மத்தியில் இவர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரைக் மாற்றதது குறித்து ஷஷாங்க் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், உங்களுக்கு ஸ்ட்ரைக் வேண்டுமா என ஸ்ரேயஸிடம் நான் கேட்பதற்கு முன்பாகவே "எனது சதத்தை பற்றி நீ கவலைப்படாதே. எல்லா பந்துகளையும் அடித்து விளையாடு. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒரு அணியை சார்ந்த விளையாட்டு என ஷ்ரேயஸ் கூறிவிட்டார். ஆனால் அதுபோன்ற தருணங்களில் சுயநலமின்றி செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல்-ல் சதம் விளாசுவது எளிதான விஷயம் அல்ல என ஷஷாங்க் கூறினார்.






