என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியின் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், லாத்வியா வீராங்கனை ஜலினா ஒஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 3-6 என இழந்த இகா ஸ்வியாடெக் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 2-6 என ஸ்வியாடெக் இழந்தார். இதன்மூலம் ஸ்டட்கர்ட் தொடரில் இருந்து ஸ்வியாடெக் வெளியேறினார்.

    • அவுட்டானவுடன் வைபவ் கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார்.
    • அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஆட்டம் இழந்தவுடன் வைபவ் திடீரென கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    முனீச்:

    மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஹங்கேரியின் பேபியன் மாரோசான் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 2-6, 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ், பென் ஷெல்டன் ஆகியோர் மோதுகின்றனர்.

    • டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய அப்துல் சமத் 10 பந்தில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதம் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அசத்தினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா 8 ரன்னில் வெளியேறினார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால்- ரியான் பராக் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 39 ரன்னில் அவுட்டானார்.

    ஹெட்மயர் 12 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தானுக்கு கிடைத்த 6வது தோல்வி ஆகும்.

    லக்னோ சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அல்காரஸ், ஹோல்ஜர் ரூனே மோதுகின்றனர்.

    • இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினர்.
    • சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 36-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் விளையாடிய லக்னோ 180 ரன்கள் அடித்தது.

    பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது. வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார்.

    * சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    * பிரியாஸ் ராய் பர்மன் 16 வயது 157 நாட்களில் அறிமுகம் ஆனார்.

    * முஜீப் உர் ரஹ்மான் 17 வயது 11 நாட்களில் அறிமுகம் ஆனார்.

    * ரியான் பராக் 17 வயது 152 நாட்களில் அறிமுகம் ஆனார்.

    * பிரதீப் சங்வான் 17 வயது 179 நாட்களில் அறிமுகம் ஆனார்.

    • மார்ஷ் 4 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • மார்கிராம், ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்தனர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 36ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் மார்ஷ் 3ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 11 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மார்கிராம் 45 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் அப்துல் சமத் 4 சிக்சர்கள் விளாச, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 7 ரன்னுடனும், அப்துல் சமாத் 10 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றிகள் பெற்றுள்ளன.
    • ஆர்சிபி, லக்னோ தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளன.

    ஐபிஎல் 2025 சீசன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி விட்டன. இதன்மூலம் முதல் பாதி சீசன் முடிவடைந்துள்ளது.

    குஜராத் டைட்டன், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியில்ல் குஜராத் அணி முதல் இடம் வகிக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் குஜராத் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்திததுள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 2ஆவது இடம் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4ஆவது இடத்தையும், லக்னோ 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

    கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் தலா 3 வெற்றி பெற்று முறையே 6 மற்றும் 7ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

    தலா இரண்டு வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே 8 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

    • சுப்மன் கில் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • மிட்செல் ஸ்டார்க் ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் விளாசினார் பட்லர்.

    ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் 6 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். அதிகபட்சமாக அக்சர் படேல் 32 பந்தில் 39 ரன்களும், அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களம் இறங்கியது. சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 74 ரன்னாக இருக்கும் போது சாய் சுதர்சன் 21 பந்தில் 36 ர்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. குறிப்பாக பட்லர் பட்டையை கிளப்பினார். 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11.2 ஓவரில் 100 ரன்னையும், 14.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது.

    15ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பட்லர். கடைசி பந்தில் ரன் அடிக்கவில்லை. குஜராத் 17 ஓவரில் முடிவில் 179 ரன்கள் குவித்திருந்தது.

    18ஆவது ஓவரில் குஜராத் 10 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். அவர் 34ஆவது பந்தில் 43 ரன்கள் எடுத்தார். பட்லர்-ரூதர்போர்டு ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் குவித்தது. அடுத்து ராகுல் டெவாட்டியா களம் இறங்கினார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் டெவாட்டியா சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பட்லர் 54 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரியான் பராக் செயல்படுகிறார்.
    • லக்னோ 5ஆவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 8ஆவது இடத்திலும் உள்ளன.

    ஐபிஎல் 2025 சீசனின் 36ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இதனால் ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமாத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாகூர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்:-

    ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரேல், ஹெட்மையர், ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே

    • டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
    • அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் அபிஷேக் பொரேல், கருண் நாயகர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பொரேல் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் களம் இறங்கினார். இவர் 14 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன்கள் விளாசினார். 3ஆவது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார்.

    பவர்பிளேயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன் இதுவாகும். டெல்லி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்கிற்கு குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினர். இதனால் விக்கெட் வீழ்ந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்படவில்லை.

    கருண் நாயர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் ஒவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்தது. 14ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இவர் இந்த ஓவரில் 2 சிக்சருடன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 15ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது.

    5ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் அஷுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார். டெல்லி 15 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    16ஆவது ஓவரில் 13 ரன்களும், 17ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். 18ஆவது ஓவரின் முதல் பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த பந்தில் விப்ராஜ் நிகம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் இதே ஓவரில் அஷுடோஸ் சர்மா 4ஆவது மற்றும் 5ஆவது பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார். இதனால் டெல்லிக்கு இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

    19ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே அடித்தது. 19ஆவது ஓவர் முடிவில் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.

    • தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது.
    • இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது. இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    டி20 மும்பை லீக்கில் மும்பையின் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை வீரர்கள் டி20 மும்பை லீக்கில் பங்கேற்க மும்பை கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது. ரோகித் சர்மா தவிர ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே போன்ற வீரர்கள் லீக்கில் பங்கேற்க வேண்டும்.

    இது கட்டாயமாகும். இந்திய அணியில் விளையாடுபவர்கள் மற்றும் காயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர மற்ற அனைத்து மும்பை அணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×