என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025 சீசன்: 7 போட்டிகளை நிறைவு செய்த அணிகள்- புள்ளிகள் பட்டியல் முழு விவரம்?
- குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றிகள் பெற்றுள்ளன.
- ஆர்சிபி, லக்னோ தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளன.
ஐபிஎல் 2025 சீசன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியுடன் 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி விட்டன. இதன்மூலம் முதல் பாதி சீசன் முடிவடைந்துள்ளது.
குஜராத் டைட்டன், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியில்ல் குஜராத் அணி முதல் இடம் வகிக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் குஜராத் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்திததுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 2ஆவது இடம் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4ஆவது இடத்தையும், லக்னோ 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் தலா 3 வெற்றி பெற்று முறையே 6 மற்றும் 7ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.
தலா இரண்டு வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே 8 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.






