என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கடைசி ஓவரில் "CAMEO" செய்த அப்துல் சமத்: ராஜஸ்தானுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது லக்னோ
- மார்ஷ் 4 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- மார்கிராம், ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்தனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 36ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் மார்ஷ் 3ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 11 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மார்கிராம் 45 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் அப்துல் சமத் 4 சிக்சர்கள் விளாச, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 7 ரன்னுடனும், அப்துல் சமாத் 10 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.






