என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    ராஜ்கோட்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு  செய்தார்.

    அதன்படி, வங்காளதேச அணியின் லிட்டன் தாஸ், முகமது நைம் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ஆடினர். இதனால் பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது.

    லிட்டன் தாஸ் 29 ரன்னிலும், முகமது நைம் 36 ரன்னிலும் வெளியேறினார். முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    சவுமியா சர்கார் 30 ரன்னும், மெஹ்முதுல்லா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் குவித்தது.

    அதன்பின், 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஷிகர் தவான்

    தொடக்கம் முதலே ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார், கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் ரன்வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவருக்கு ஷிகர் தவான் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. தவான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் களமிறங்கினார். 

    அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.

    அவரை தொடர்ந்து ஷிரேயஸ் அய்யர் இறங்கினார். இருவரும் கடைசி வரை நின்று இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 1-1 சமன் செய்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நாக்பூரில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு  செய்தார்.

    அதன்படி வங்காளதேச அணியின் லிட்டோன் தாஸ், முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் ஜெட் வேகத்தில் வங்காள தேச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

    பவர் பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது. அதன்பின் வங்காளதேச அணியின் ஸ்கோர் உயர்வில் மந்த நிலை ஏற்பட்டது.

    லிட்டோன் தாஸ் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். முகமது நைம் 31 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    லிட்டோன் தாஸை ரன்அவுட் ஆக்கிய ரிஷப் பந்த்

    சவுமியா சர்கார் 20 பந்தில் 30 ரன்களும், மெஹ்முதுல்லா 21 பந்தில் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவர்களின் ஆட்டத்தால் வங்காளதேசம் 150 ரன்னை நெருங்கியது. வங்காளதேசம் 19 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் வங்காளதேசம் 9 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சாஹல் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அதேபோல் ஐபிஎல் தொடரில் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ-க்கு நெஸ் வாடியா எழுதியுள்ள கடிதத்தில் ‘‘இது மிகவும் சிறப்பு வாய்ந்த நகர்வு. தொடக்க விழா தற்போது நடைபெறாததால், இது சரியான நேரம். ஒரு போட்டியின் தொடக்க விழாவின் அவசியம் மற்றும் மதிப்பை நான் எப்போதும் வியந்ததுண்டு. இந்திய பிரிமீயர் லீக்கில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.

    சினிமா திரை அரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் கால்பந்து லீக் (பிஎஸ்எல்), புரோ கபடி ஆகியவற்றிலும் இசைக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.
    இந்திய அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகையை சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

    இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்திய அணியின் தலைசிறந்த வீரரான சுனில் கவாஸ்கர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்திய அணிக்கு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தற்போது ஜாம்பவான்களுடன் ஹிட்மேன் ரோகித் சர்மா அரிய வகை சாதனையுடன்  இணைந்துள்ளார்.
    ராஜ்கோட்டில் நடைபெறும் வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இரண்டு அணிகளிலும் மாற்றம் ஏதுமில்லை. டெல்லியில் விளையாடிய அதே அணிகளுடன் விளையாடுகிறது.
    டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது எதிர்பார்க்காதது என வங்காளதேச வீரர் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
    வங்காளதேச அணியின் கேப்டனாக இருந்தவர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டக்காரர்கள் அவரை அணுகிய சம்பவத்தை ஐசிசி-யிடம் தெரிவிக்காததால் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அவர் இந்திய தொடரில் இடம் பெறவில்லை. ஆகவே, வங்காளதேச டி20 அணியின் கேப்டனாக மெஹ்முதுல்லாவும், டெஸ்ட் அணி கேப்டனாக மொமினுல் ஹக்யூ-வும் நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்த பதவி ஏதிர்பார்க்காதது என டெஸ்ட் அணி கேப்டன் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் கேப்டன் பதவிக்கு தயாராகவில்லை. இது முற்றிலும் எதிர்பார்க்காதது. வங்காளதே அணியின் கேப்டனாகவோ அல்லது டெஸ்ட் அணி கேப்டனாகவோ நியமிக்கப்படுவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது.

    விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் சிறந்தவர். இதைப் பற்றி நினைக்கும்போது எனக்கு சிறந்த உணர்வாக இருக்கிறது’’ என்றார்.
    நார்த் சவுண்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி.
    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள நார்த் சவுண்டில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் டெய்லர் 79 ரன்கள் அடித்தார். மற்ற வீரராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் சரியாக 50 ஓவரில் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அதன்பின் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோட்ரிக்ஸ் 69 ரன்னிலும், மந்தனா 74 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பூனம் ரவத் 24 ரன்னும், மிதலி ராஜ் 20 ரன்னும் அடிக்க இந்தியா 42.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
    இந்தியாவின் முக்கியமான உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன் படுத்தப்படுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியாது என புஜாரா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்ட் ஆக ‘பிங்க்’ பந்தில் நடக்கிறது. இந்திய அணி இதற்கு முன் ‘பிங்க்’ பந்தில் விளையாடியதில்லை. முதன்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. அதற்கு முன் பெரிய அளவில் விளையாடிய அனுபவம் இல்லை.

    இந்த போட்டிக்குப்பின் இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘ரஞ்சி டிராபி போட்டிகள் பகல்-இரவாக நடைபெறுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடிய பிறகு, நமக்கு சிறப்பான ஐடியா கிடைக்கும். அதன் பிறகு அதை எப்படி முன்னோக்கி எடுத்த செல்ல முடியும் என்பதை நம்மால் கண்டறிய முடியும்’’ என்றார்.
    ஸ்மித்திடம் பேட்டிங் இல்லை, நான் அவருக்கு பந்து வீசியிந்தால், அவரை கட்டாயம் தாக்கியிருப்பேன் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இவர் ஆஷஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் தொழில்முறை கிரிக்கெட் வீரருக்கான ஸ்டைலை ஒத்திருக்கவில்லை. அவர் டெக்னிக்கலாக விளையாடாவிட்டாலும் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

    அவரது பேட்டிங் ஸ்டைலை பார்த்தால் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங் செய்தது போல் இருக்காது. இந்த நிலையில் ஸ்மித்திடம் பேட்டிங் டெக்னிக் இல்லை என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘ஸ்மித் இவ்வளவு சிறப்பாக விளையாடுவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவரிடம் எந்த டெக்னிக்கும், ஸ்டைலும் இல்லை. ஆனால், இன்னும் அவருக்கு பயனளிக்கும் வகையாக உள்ளது.

    அவர் எப்படி சிறப்பாக விளையாடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய காலக்கட்டத்தில் அவர் விளையாடியிருந்தால், அவரை பந்து வீச்சால் தாக்கியிருப்பேன். அவரை காயப்படுத்த முயற்சி செய்திருப்பேன்’’ என்றார்.
    தோல்வியடைந்தாலும், 11 பேரைத்தவிர வெளியில் இருக்கும் வீரர்களை பரிசோதிப்பதில் கவனம் செலுத்துகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

    இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருகிறது. அடுத்த வருடம் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து திறமையை கண்காணிக்க விரும்புகிறது.

    தொடர்ந்து ஒரே லெவன் அணியுடன் விளையாடாமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கும் (bench strength) வாய்ப்பு கொடுக்கிறது. இதனால் நாங்கள் தோல்வியை பற்றி கவலைப்படவில்லை என்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தாலும், 11 பேரைத்தவிர வெளியில் இருக்கும் வீரர்களின் பலத்தை அறிய பரிசோதனை செய்யப்படும்’’ என்றார்.
    அமெரிக்காவில் புதுமணத் தம்பதியர் திருமணமான கையோடு பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் ஆர்வமுடன் பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    நியூயார்க்:

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அந்நாட்டு அணியுடன் 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.

    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி 20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று முன்தினம் (நவம்பர் 5) கான்பெர்ராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 

    கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களையும், இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி  ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 62 ரன்கள் விளாசியதால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. 

    அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் சுமித்

    இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது திருமண விழா நடந்து கொண்டிருந்த போதும் மணப்பெண்ணுடன் இணைந்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டி20 போட்டியை டி.வி.யில் கண்ணிமைக்காமல் கண்டுகளித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.



    பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹசன் தஸ்லிம் அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்துவருகிறார். அவருக்கு கடந்த 5-ம் தேதி திருமணம் நடந்தது. 

    தங்கள் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை சுவாரசியமாக கண்டுகளித்தனர். 

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பதியர் கிரிக்கெட் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘தம்பதியரின் இலக்கு’ என்ற ஹேஷ்டேக்குடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது.
    கொல்கத்தாவில் நடைபெறும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

    இந்த டெஸ்ட் போட்டி பகல் - இரவாக நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக கங்குலி சமீபத்தில் பொறுப்பேற்றார். அவரது தீவிர முயற்சியால்தான் இந்திய அணி முதல் முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது.

    இதனால் இந்த டெஸ்ட்டை மிகவும் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பிரபலங்கள் அனைவரையும் இந்த போட்டிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை பெற்றுக்கொடுத்த டோனியை பகல் - இரவு டெஸ்ட்டில் சிறப்பு வர்ணனையாளராக செயல்பட வைக்க ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டது.

    இதற்காக அந்த நிறுவனம் பி.சி.சி.ஐ.யிடம் அனுமதி கேட்டது. ஆனால், பி.சி.சி.ஐ. இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் டோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறாமல் அணியில் இருந்து ஓதுங்கி இருக்கிறார்.

    டோனி ஓய்வு பெறாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஓப்பந்த வீரராகவே இருக்கிறார். வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு டோனி மீது கூறப்படும். இதன் காரணமாக அவர் வர்ணனையாளராக பணியாற்ற மாட்டார் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.
    ×