என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் லின் ஜூன் ஹூய்-லின் யூ சென் இணையை விரட்டியடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

    இன்று நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை, நம்பர் ஒன் ஜோடியான மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை (இந்தோனேஷியா) எதிர்கொள்கிறது.
    இந்தியாவின் முன்னணி உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளாவை வீழ்த்தியது தமிழ்நாடு.
    இந்தியாவில் நடைபெறும் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தும்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின. கேரளா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் 8 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த அபரஜித் 35 ரன்களும், தினேஷ் கார்த்திக் 33 ரன்களும், விஜய் சங்கர் 25 ரன்களும், ஷாருக் கான் 28 ரன்களும், முகமது 11 பந்தில் 34 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களம் இறங்கியது. டி. நடராஜன், பெரியசாமி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்த கேரளா அணியால் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாக விளங்கும் பாகிஸ்தான், 2019-ல் 10 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் பெருமைப்படும் அளவிற்கு இல்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்து வருகிறது.

    துபாயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் வரை பாகிஸ்தான் உச்சத்தில் இருந்தது. அதன்பின் 2019-ல் இருந்து அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் தோல்வியடைந்ததன் மூலம் 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. தொடரை இழந்த பிறகு 3-வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.

    இன்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் 10-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    ராஜ்கோட் போட்டியில் அறு பந்தில் 6 சிக்சர்கள் விளாச விரும்பினேன் என்று ஹிட்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 43 பந்தில் 85 ரன்கள் விளாசினார்.

    அவரது ஸ்கோரில் ஆறு சிக்சர்கள் அடங்கும். மொசாடெக் ஹொசைன் பந்தில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்தார். மூன்று சிக்சர்கள் அடித்தபோது மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்தபோது, மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க முயற்சி செய்தேன். நான்காவது பந்தை நான் மிஸ் செய்யும்போது, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆஃப்-ஸ்பின்னர் பந்து வீசும்போது பந்து மிகப்பெரிய அளவில் திரும்பாது என்பது எனக்குத் தெரியும். அதனால் பந்து வரும்வரை க்ரீஸ் பகுதியில் நின்று பந்து விளாச முயற்சி செய்தேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி டென்னிஸ் தொடரில் களம் இறங்க இருக்கிறார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி, தற்போது ஓய்வில் இருக்கிறார். ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய பின், ஜார்க்கண்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார்.

    கிரிக்கெட்டை தவிர்த்து கால்பந்து மீது அதிக நாட்டம் கொண்ட எம்எஸ் டோனி டென்னிஸ் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவாராம். கடந்த முறை நடைபெற்ற கிரிக்கெட் கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இந்த முறையும் டென்னிஸ் விளையாட இருக்கிறாராம். இதற்காக அவர் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    கடந்த முறை நடைபெற்ற தொடரில், இரட்டையர் பிரிவில் உள்ளூர் வீரரான சுமித் குமார் உடன் இணைந்து 6-3, 6-3 என வெற்றி பெற்றிருந்தார்.
    2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நடத்தும் வாய்பை இந்தியா பெற்றுள்ளது.
    உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரை நடத்த ஏராளமான நாடுகள் விருப்பம் தெரிவித்தது.

    இந்நிலையில் சர்வதேச ஹாக்கி பெடரேசன் நிர்வாகக்குழு  கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கு உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்தத் தொடர் 2023 ஜனவரி மாதம் 13-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. போட்டி நடக்கும் இடத்தை இந்தியாவே முடிவு செய்து கொள்ளலாம்.

    பெண்களுக்கான உலகக்கோப்பை தொடர் 2022-ம் ஆண்டு ஜூலை 1-ல் இருந்து 17 வரை நடக்கிறது. இந்தத் தொடரை இந்தியாவுடன் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளும் இணைந்து நடத்துக்கிறது.
    14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்.
    14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார். இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 588 புள்ளிகள் பெற்றார். இது ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி நிர்ணயம் புள்ளியை விட அதிகம் என்பதால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.

    ஆனால், 8 பேர் கலந்து கொண்ட இறுதிப் போட்டியில் 6-வது இடமே பிடித்து ஏமாற்றம் அளித்தார். இந்த பிரிவில் ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ராஹி சர்னோபாட், அன்னு ராஜ் சிங், நீரஜ் கவுர் ஆகியோர் ஒலிம்பிக் 2020 தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
    3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு, தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது.

    முதல் ஆட்டம் மழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம் உலக் ஹக் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    க்ளீன் போல்டாகிய ரிஸ்வான்

    இதனால் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இப்திகார் அகமது மட்டும் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் சேர்த்தார். கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இப்திகார் அகமது, இமாம் உல் ஹக் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடித்தனர்.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் அப்போட், மிட்செல் ஸ்டார்க் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2-வது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே ஆஸ்திரேலியா விக்கெட் ஏதுமின்றி 109 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய வீரர்கள்

    ஆரோன் பிஞ்ச் 36 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 ரன்களும் அவரது ஸ்கோரில் அடங்கும். டேவிட் வார்னர் 35 பந்தில் 44 ரன்கள் அடித்து களத்தில் நின்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியது.
    நேப்பியரில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
    • தாவித் மலன் 103 ரன்களும், மோர்கன் 91 ரன்களும் குவிப்பு
    • இங்கிலாந்து 241 ரன்கள் சேர்த்தது, நியூசிலாந்து 165 ரன்னில் சுருண்டது
    • ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலை

    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 4-வது போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைக்க முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து களம் இறங்கியது.

    நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்தின் பான்டன், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 8 ரன்னிலும், பான்டன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து தாவித் மலன் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் ஸ்கோர் 200-ஐ எளிதாக தாண்டியது.

    அணியின் ஸ்கோர் 19.4 ஓவரில் 240 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 41 பந்தில் 91 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். தாவித் மலன் - மோர்கன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 74 பந்தில் 182 ரன்கள் குவித்தது.

    மறுமுனையில் தாவித் மலன் 51 பந்தில் 9 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 103 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நிற்க இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து வீரர்கள்

    பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 16.5 ஓவர்களில் 165 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கர்நாடக பிரிமீயர் ‘லீக்’கின் பெலகாவி பாந்தர்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
    கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 8-வது சீசன் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் முடிந்தது. இந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுகுறித்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னணி வீரர்களான கவுதம், அப்ரார் காஜி ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். முதல்தர வீரரான கவுதம் ஐ.பி.எல். போட்டியில் 3 அணிகளில் விளையாடி இருக்கிறார். இறுதிப்போட்டியின் போது இருவரும் மெதுவாக பேட்டிங் செய்வதற்காக தலா ரூ.20 லட்சம் வாங்கியது தெரியவந்தது.

    இந்த நிலையில் கே.பி.எல். போட்டியில் விளையாடும் அணியில் ஒன்றான பெலாகவி பாந்தர்ஸ் அணியை கர்நாடக கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்டு செய்துள்ளது. அந்த அணியின் உரிமையாளர் அலிப் அஷ் பாக் தாரா ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அந்த அணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது.

    எந்த ஒரு அணியின் உரிமையாளரோ, நிர்வாகிகளோ சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.
    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதால் சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ராஜ்கோட்:

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்காளதேசம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்னே எடுக்க முடிந்தது.

    முகமது நயிம் 31 பந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி), சவுமியா சர்க்கார் 20 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மகமதுல்லா 21 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    யசுவேந்தர சாஹல் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    154 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி ஆடியது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்த இலக்கை 26 பந்து எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா 43 பந்தில் 85 ரன் எடுத்தார். இதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். தவான் 27 பந்தில் 31 ரன்னும் ( 4 பவுண்டரி), ஷிரேயாஸ் அய்யர் 13 பந்தில் 24 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். எப்படி வீச வேண்டும் என்பதை புரிந்து வீசியதுதான் முக்கியமானது. சாஹல் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் நேர்த்தியுடன் பந்து வீசி வருகிறார். நெருக்கடி நிலையில் எங்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்.

    வாஷிங்டன் சுந்தர் எங்கள் அணியின் தொடக்க பவுலர் ஆவார். ஆனால் இந்த ஆட்டத்தில் 3 ஓவருக்கு பிறகுதான் அவரை கொண்டு வந்தேன்.

    பீல்டிங்கில் சொதப்பியதால் தான் சற்று உணர்ச்சி வசப்பட்டேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனது பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் எப்போதுமே கவனமாக இருப்பேன்.

    ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருப்பதை அறிந்து இருந்தேன். மேலும் 2-வது இன்னிங்சில் ஈரப்பதம் இருந்ததால் பந்து வீசுவது கடினமானது. இந்த சாதகங்களை அறிந்து நான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். பவர்பிளேயை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

    அதே நேரத்தில் வங்காளதேச பந்து வீச்சாளர்களை குறைத்து மதிப்பிடவில்லை. இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறினார்.

    தோல்வி குறித்து வங்காள தேச கேப்டன் மகமதுல்லா கூறியதாவது:-

    பேட்டிங்குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் நாங்கள் 25 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இந்திய அணியின் சுழற்பந்து வீரர்கள் நேர்த்தியாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர்.

    ரோகித்சர்மா- தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டது. அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 10-ந் தேதி நாக்பூரில் நடக்கிறது.

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப், மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரனீத் போராடி தோல்வியை தழுவினர்.
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் 13-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான விக்டர் ஆக்சல்சென்னிடம் (டென்மார்க்) தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 20-22, 22-20, 16-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்செனிடம் போராடி தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-18, 21-23, 21-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹிரோய்கி என்டோ-யுதா வதனாபி ஜோடியை வீழ்த்தி காலிறுதியை எட்டியது.
    ×