search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் டி20 அணி
    X
    பாகிஸ்தான் டி20 அணி

    டி20-யில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானுக்கு வந்த சோதனை

    டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாக விளங்கும் பாகிஸ்தான், 2019-ல் 10 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் பெருமைப்படும் அளவிற்கு இல்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்து வருகிறது.

    துபாயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் வரை பாகிஸ்தான் உச்சத்தில் இருந்தது. அதன்பின் 2019-ல் இருந்து அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் தோல்வியடைந்ததன் மூலம் 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. தொடரை இழந்த பிறகு 3-வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.

    இன்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் 10-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×