search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்
    X
    டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்

    3-வது டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை 10 விக்கெட்டில் வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

    3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு, தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது.

    முதல் ஆட்டம் மழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம் உலக் ஹக் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    க்ளீன் போல்டாகிய ரிஸ்வான்

    இதனால் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இப்திகார் அகமது மட்டும் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் சேர்த்தார். கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இப்திகார் அகமது, இமாம் உல் ஹக் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடித்தனர்.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் அப்போட், மிட்செல் ஸ்டார்க் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2-வது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே ஆஸ்திரேலியா விக்கெட் ஏதுமின்றி 109 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலிய வீரர்கள்

    ஆரோன் பிஞ்ச் 36 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 ரன்களும் அவரது ஸ்கோரில் அடங்கும். டேவிட் வார்னர் 35 பந்தில் 44 ரன்கள் அடித்து களத்தில் நின்றனர்.

    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியது.
    Next Story
    ×