என் மலர்
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஐலெட்டில் இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களே எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளில் மேத்யூஸ் 23 ரன்களும், நேஷன் 32 ரன்களும், மெக்லி்ன் 17 ரன்களும் அடித்த்னர்.
பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி் வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கும் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 10.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 35 பந்தில் 69 ரன்களும், மந்தனா 28 பந்தில் 30 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 51 பந்தில் 103 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் தாவித் மலன்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த 8-ந்தேதி நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தாவித் மலன் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் விளாசினார்.
டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரரின் அதிரடி சதம் இதுவாகும். இந்த சதம் மூலம் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தாவித் மலன் 782 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 876 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆரோன் பிஞ்ச் இரண்டு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 7-வது இடத்திலும், கேஎல் ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் இளம் வீரரான சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள லூசாய்ல் ஷுட்டிங் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் 17 வயதான சவுரப் சவுத்ரி கலந்து கொண்டார்.
தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். வடகொரியாவின் கிம் சாங் குக் 246.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
ஈரான் வீரர் பொரௌகி ஜாவித் வெண்கலப்பதக்கம் வென்றார். அடுத்த வருடம் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீர் ஏபி டி வில்லியர்ஸ் வீரர்கள் ஏல பட்டியலில் இருந்து விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது ஐபிஎல் உள்பட ஒன்றிரண்டு டி20 லீக்கில்தான் விளையாடினார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு டி20 லீக்கில் விளையாட முடிவு செய்தார். அதன்படிதான் இந்த ஆண்டு முடிவடைந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடினார்.
7 போட்டிகளில் விளையாடிய பின் காயத்தால் வெளியேறினார். 7 போட்டியில் ஒரு அரைசதத்துடன் 218 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த ஏல பட்டியலில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலக முடிவு செய்துள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏபி டி வில்லியர்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வங்காளதேச அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய தீபக் சாஹர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 174 ரன்கள் குவித்தது.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12.5 ஓவரில் 110 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 43 பந்தில் 65 ரன்களே தேவைப்பட்டது.
தீபக் சாஹர் வீசிய 13-வது ஓவரில் கடைசி பந்தில் முகமது மிதுன் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வங்காளதேசம் அணியை 144 ரன்னில் ஆல்அவுட் ஆக்கினார்.
மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை கொடுத்தாலும் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3.2 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.
இதற்கு முன் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது சாஹர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஜந்தா மெண்டிஸ் 3-வது இடத்தில் உள்ளனார். சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், இர்பான் பாதான் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சேத்தன் சர்மா, கபில் தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவி ஏற்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி மும்பையில் நடக்கிறது. கூட்டம் தொடர்பான தகவல் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவற்றில் ஒன்று, மாநில சங்கம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் ஒரே நேரத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்தால் அடுத்த 3 ஆண்டு இடைவெளி விட வேண்டும் என்பதாகும். இதில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதாவது தலைவர் மற்றும் செயலாளர் மட்டும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் வகையில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமை செயல் அதிகாரிக்கு அதிகாரத்தை குறைத்து, செயலாளருக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது. 4-ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் இவற்றை நிறைவேற்ற முடியும்.

வங்காள தேச அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் 19 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
லோகேஷ் ராகுல் 35 பந்தில் 52 எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 62 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்துள்ளது.
இதனையடுத்து வங்காள தேச அணி களமிறங்கியது. முதலில் 2 விக்கெட்டுகளை இழந்த போதும் 3-வது விக்கெட்டுக்கு மிதுன் நெய்ம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெய்ம் அரை சதம் அடித்து அசத்தினார். மிதுன் 27 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த ரகீம் டக் அவுட் முறையில் வெளியேறினார்கள்.
ஒரு கட்டத்தில் வங்காள தேச அணி வெற்றி பெரும் என்று இருந்த நிலையில் துபே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய நெய்ம் 81 ரன்களில் அவர் பந்தில் வெளியேறினார்.

இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்காள தேச அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணியில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாக்பூரில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் வங்காளதேச அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் குருணால் பாண்டியாவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். வங்காளதேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக முகமது மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் 19 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
லோகேஷ் ராகுல் 35 பந்தில் 7 பவுண்டரியுடன் 52 எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15-வது ஓவரை அஃபிஃப் ஹொசைன் வீசினார். முதல் மூன்று பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஷ்ரேயாஸ் அய்யர். 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்க 27 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். மணிஷ் பாண்டே அதிரடி காட்ட இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்துள்ளது. மணிஷ் பாண்டே 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என வாகன் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில், டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த பேசு்சு அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியா சமீபத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை சொந்த மண்ணில் துவம்சம் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு இணையான சீதோஷ்ண நிலை கொண்ட நியூசிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா ஆகியவற்றில் ஒன்றுதான் கோப்பையை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘முன்கூட்டியே டி20 உலகக்கோப்பையின் கணிப்பு.. இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடக்கும் வங்காளதேச அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.
ரோகித் சர்மா டாஸ் சுண்ட, வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா ‘ஹெட்’ என அழைத்தார். அவர் அழைத்தபடி ‘ஹெட்’ விழ பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் குருணால் பாண்டியாவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக முகமது மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கால்பந்துக்கு மாறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன். இந்திய தொடருக்கு முன்பாக ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது.
சூதாட்டக்காரர்கள் அவரை அணுகிய செய்தியை ஐசிசி ஊழல் தடுப்புக்குழுவிற்கு தெரிவிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்த ஷாகிப் அல் ஹசன், கால்பந்து விளையாட்டுக்கு மாறியுள்ளார்.
ஷாகிப் ஃபூட்டி ஹேக்ஸ் அணிக்காக விளையாடினார். ஷாகிப் இடம் பிடித்திருந்த ஃபூட்டி ஹேக்ஸ் கொரியன் எக்ஸ்பாட் அணியை 3-2 வீழ்த்தியது.
வீட்டில் விளையாடும்போது வார்னர் பந்தை வீச, அதை எதிர் கொண்ட அவரது மகள் இவி மே, நான் விராட் கோலி என கெத்தாக பந்தை விளாசினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டேவிட் வார்னர் இன்று தனது வீட்டில் 3 வயது மகளுடன் கிரிக்கெட் விளையாடினார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் டேவிட் வார்னரின் மகள் இவி மே, ‘‘நான் விராட் கோலி’’ என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும் போல் காட்சி பதிவாகியுள்ளது. அதேபோல தனது தந்தை டேவிட் வார்னரை போல் விளையாடியும் காட்டுகிறார்.
இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘‘எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. இன்டி விராட் கோலி போல் ஆக விரும்புகிறாள்’’ என எழுதியுள்ளார்.
அதேபோல் வார்னின் மனைவி கேண்டிஸ் ‘‘இந்த சிறுமி இந்தியாவில் நீண்ட நாட்கள் தனது நேரத்தை செலவிட்டுள்ளர். இதனால் அவர் விராட் கோலியை விரும்புகிறாள்’’ என்று பதிவிட்டுள்ளார்.