search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபக் சாஹர்
    X
    தீபக் சாஹர்

    தீபக் சாஹரின் சிறப்பான பந்து வீச்சில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    வங்காள தேச அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் 19 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    லோகேஷ் ராகுல் 35 பந்தில் 52 எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 62 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்துள்ளது.

    இதனையடுத்து வங்காள தேச அணி களமிறங்கியது. முதலில் 2 விக்கெட்டுகளை இழந்த போதும் 3-வது விக்கெட்டுக்கு மிதுன் நெய்ம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெய்ம் அரை சதம் அடித்து அசத்தினார். மிதுன் 27 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த ரகீம் டக் அவுட் முறையில் வெளியேறினார்கள்.

    ஒரு கட்டத்தில் வங்காள தேச அணி வெற்றி பெரும் என்று இருந்த நிலையில் துபே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய நெய்ம் 81 ரன்களில் அவர் பந்தில் வெளியேறினார்.

    துபே


    இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்காள தேச அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்திய அணியில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Next Story
    ×