
ஆஸ்திரேலியா சமீபத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை சொந்த மண்ணில் துவம்சம் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு இணையான சீதோஷ்ண நிலை கொண்ட நியூசிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா ஆகியவற்றில் ஒன்றுதான் கோப்பையை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘முன்கூட்டியே டி20 உலகக்கோப்பையின் கணிப்பு.. இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.