என் மலர்
விளையாட்டு
கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி 9.3 ஓவரில் 125 ரன்கள் விளாச கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா - அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பிஷ்னோய்- ஹர்சல் பட்டேல் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்டேல் 20 பந்தில் 34 ரன்களும், பிஷ்னோய் 35 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.
ஹிமான்ஷு ராணா 34 பந்தில் 61 ரன்கள் அடிக்க அரியானா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி சார்பில் அபிமன்யு மிதுன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் இரண்டு ஓவர்கள் வரை இந்த ஜோடி நிதானமாகவே விளையாடியது. இதனால் 10 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸ் மூன்று பவுண்டரிகள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது.
ஐந்தாவது ஓவரில் கேஎல் ராகுல் இரண்டு சிக்சர்கள் விளாச 19 ரன்கள் கிடைத்தது. 6-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தது. கர்நாடகா பவர்பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.
கேல்எல் ராகுல் 7-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 21 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய கேல்எல் ராகுல் 31 பந்தில் நான்கு பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. இதற்கிடையே மறுமுனையில் விளையாடி தேவ்தத் படிக்கல் 24 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இவர் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 10.5 ஓவர்களில் 183 ரன்கள் குவித்திருந்தது.
அதன்பின் வந்த மணிஷ் பாண்டே 14 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கர்நாடகா 15 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அல்லது ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இந்தத் தொடர்களில் பாதுகாப்பு கருதி முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாம் நிலை வீரர்களை கொண்ட இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்தது. ஆனால் டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை சம்மதம் தெரிவித்தது. முதல் டெஸ்ட் டிசம்பர் 11-ந்தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 19-ந்தேதி கராச்சி தேசிய மைதானத்திலும் நடக்கிறது.
இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் பட்டியலில் முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. திமுத் கருணாரத்னே (கேப்டன்), 2. ஒஷாடா பெர்னாண்டோ, 3. குசால் மெண்டிஸ், 4. மேத்யூஸ், 5. தினேஷ் சண்டிமல், 6. குசால் ஜனித் பெரேரா, 7. லஹிரு திருமானே, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. நிரோஷன் டிக்வெல்லா, 10. தில்ருவான் பெரேரா, 11. லசித் எம்பல்டெனியா, 12. சுரங்கா லக்மலம், 13. லஹிரு குமாரா, 14. விஷ்வா பெர்னாண்டோ, 15. கசுன் ரஜிதா, 16. லக்சன் சண்டகன்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கான சரியான நபர் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடந்த ஆண்டில் இருந்து நான்காவது இடத்திற்கு நிரந்தர வீரரை கண்டு பிடிக்காமல் இருக்கிறது. தேர்வுக்குழு பல்வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஒருவர் கூட அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அய்யர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் அவரை நான்காவது இடத்தில் இந்திய அணி களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ல் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் ஷ்ரேயாஸ் அய்யர். இலங்கை அணிக்கெதிராக விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறக்கப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார். என்றாலும் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நீங்கள் திரும்பி பார்த்தீர்கள் என்றால், 18 மாதங்களுக்கு முன் நாங்கள் விராட் கோலி ஓய்வில் இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர் சிறப்பாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவரை தொடர்ச்சியாக அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது சிறந்த வீரராக வளர்ந்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரால் நான்காவது இடத்தை நிரப்ப முடியும்’’ என்றார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய நிக்கோலஸ் பூரன் இந்தியா தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற 6-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
2-வது 20 ஓவர் ஆட்டம் 8-ந்தேதி திருவனந்தபுரத்திலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 11-ந்தேதி மும்பையிலும் நடக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி 15-ந்தேதி சென்னையிலும், 2-வது போட்டி 18-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி 22-ந்தேதி கட்டாக்கிலும் நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்ட் கேப்டனாக நீடிக்கிறார்.
20 ஓவர் போட்டிக்கான அணியில் ஃபேபியன் ஆலன், ராம்தின் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் இடம் பெறவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக தடைவிதிக்கப்பட்ட நிகோலஸ் பூரன் 2-வது 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி அணியில் ஷாய் ஹோப் துணை கேப்டனாக நீடிக்கிறார்.
அணி தேர்வு குறித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பிலிப் சிம்மன்ஸ் கூறியதாவது:-
20 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதன்பிறகு அடுத்த உலககோப்பை போட்டி (2021-ம்) ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பைக்கான அணியை தயார்ப்படுத்த இந்த தொடரில் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
20 ஓவர் போட்டி: பொல்லார்ட் (கேப்டன்), எவின் லிவிஸ், லென்டில் சிம்மன்ஸ், பிரெண்டன் கிங், ஹெட்மையர், ஃபேபியன் ஆலன், ரூதர்போர்டு, தினேஷ் ராம்தின், கேரி பியர், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், நிகோலஸ் பூரன், ஷெல்டன் காட்ரல், ஹேய்டன் வால்ஷ், கேஷரிக் வில்லியம்ஸ்.
ஒருநாள் போட்டி: பொல்லார்ட் (கேப்டன்), இவின் லிவீஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், கார் பியர், நிகோலஸ் பூரன், கீமோபால், பிரண்டன் கிங், சுனில் அம்ரீஸ், ஜேசன் ஹோல்டர், ஷெல்டன் கோட்ரல், ஜோசப், ரோமரியோ, ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ்.

லக்னோவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 187 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 277 ரன்னும் எடுத்தன.
90 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 31 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 6.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து எடுத்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரஹீம் கார்ன்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இன்று நடந்த 3-வது நாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மேலும் 13 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 120 ரன்னில் சுருண்டது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 31 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 6.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து எடுத்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரஹீம் கார்ன்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜீத் ராவல் 5 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அந்த அணி 39 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் சதம் அடித்தார். இது அவருக்கு 11-வது சதம் (47 டெஸ்ட்) ஆகும். நியூசிலாந்து அணி 54.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. டாம் லாதம் 101 ரன்னுடனும், நிகோல்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளது.
அதன்பிறகு மற்றொரு தொடக்க வீரர் டாம் லாதம் - ராஸ் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடியது. டெய்லர் 53 ரன் எடுத்து அவுட் ஆனார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் சதம் அடித்தார். இது அவருக்கு 11-வது சதம் (47 டெஸ்ட்) ஆகும். நியூசிலாந்து அணி 54.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. டாம் லாதம் 101 ரன்னுடனும், நிகோல்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் இன்றும், நாளையும் நடக்கிறது.
நூர் சுல்தான்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டி முதலில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு சென்று விளையாட முடியாது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் இந்த போட்டி கஜகஸ்தானுக்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இந்த போட்டி இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் அய்சம் உல்-ஹக் குரேஷி, அகீல் கான் ஆகியோர் விலகினார்கள். இதனால் இளம் வீரர்களுடன் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் களம் காணுகிறது.
இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பையும், மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல், பாகிஸ்தான் வீரர் ஹூஜய்பா அப்துல் ரகுமானையும் எதிர்கொள்கிறார்கள். 17 வயதான முகமது சோகைப் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றில் ஒரு வெற்றி கூட பெற்றதில்லை. ஹூஜய்பா அப்துல் ரகுமான் ஜூனியர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்திக்கிறது. ஜீவன் நெடுஞ்செழியன் டேவிஸ் கோப்பை போட்டியில் அறிமுக வீரராக களம் காணுகிறார். சென்னையை சேர்ந்த இடக்கை வீரரான ஜீவன் நெடுஞ்செழியன் டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 75-வது இந்திய வீரர் ஆவார். மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்-முகமது சோகைப், ராம்குமார் -ஹூஜய்பா அப்துல் ரகுமான் ஆகியோர் மோதுகிறார்கள்.
இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று குரோஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் உலக குரூப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கும், 2-வது நாள் ஆட்டம் காலை 11.30 மணிக்கும் தொடங்குகிறது.
இதற்கிடையே கேப்டன் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்ட இந்திய முன்னாள் கேப்டன் மகேஷ் பூபதி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே எப்பொழுதும் பதற்றமான நிலை தான் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அணிகள் எதுவும் அங்கு செல்லவில்லை. ஆனால் இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்லும் என்று தடாலடியாக அறிவித்தனர். இந்த விவகாரத்தில் இந்திய டென்னிஸ் அணி வீரர்கள் எடுத்த முடிவை விமர்சிப்பது நியாயமற்றது. நான் இந்திய அணி வீரர்களுடன் தினசரி தொடர்பில் தான் இருக்கிறேன். அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னை கையாண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் புதிய கேப்டனை இந்திய அணிக்கு கொண்டு வர விரும்புகிறோம் என்று என்னிடம் வெளிப்படையாக தெரிவித்து இருக்கலாம். அவர்கள் அப்படி தெரிவித்து இருந்தால் நான் அதனை மதித்து இருப்பேன். இதுவரை எனக்கு அகில இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகளிடம் இருந்து எந்த டெலிபோன் அழைப்பும் வரவில்லை.
இந்திய அணியில் இருந்து வெளியேற இது சரியான நேரம் என்று நான் நினைக்கவில்லை. அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னை மட்டும் இப்படி நடத்தவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக எல்லா வீரர்களையும் இப்படி தான் நடத்தி வருகிறது. இதனால் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனாலும் இந்த செயல் என்னை காயப்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று மறுத்தபோது அணியினருக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆதரவு அளிக்காததும், மத்திய அரசு எதுவும் சொல்லாததும் நியாயமற்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். எங்கு போட்டி நடந்தாலும் இந்திய அணியால் பாகிஸ்தானை வெல்ல முடியும்’ என்று தெரிவித்தார்.

குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார்.
மும்பை:
இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார். கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடிய சானியா தனது மறுபிரவேசத்தில் இரட்டையர் ஜோடியாக உக்ரைனின் நாடியா கிசெனோக்கை தேர்வு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் ஜோடி சேருகிறார். தான் தற்போது நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும், இந்த போட்டிகளுக்கு முன்பாக மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.டி.எப். போட்டியில் களம் காண திட்டமிட்டுள்ளதாகவும் 33 வயதான சானியா தெரிவித்தார்.

ஆசிய மண்டல தகுதி சுற்று வில்வித்தை பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
பாங்காக்:
21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஆசிய மண்டலத்துக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று பந்தயமும் அங்கு நடைபெற்றது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, அங்கிதா பகத் ஆகியோர் மோதினார்கள். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் சக வீராங்கனை அங்கிதா பகத்தை எளிதில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அங்கிதா பகத் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
முன்னதாக நடந்த அரைஇறுதியில் தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வியட்நாம் வீராங்கனை நுயெத் டு தி அன்க்கையும், அங்கிதா பகத் 6-2 என்ற கணக்கில் பூடான் வீராங்கனை கர்மாவையும் வீழ்த்தினார்கள். அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா ஒரு கோட்டாவை உறுதி செய்தது. பூடான் வீராங்கனை கர்மா, வியட்நாம் வீராங்கனை நுயெத் டு தி அன்க் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பூடான் நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கர்மா பெற்றார்.
தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அளித்த பேட்டியில், ‘நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். ஆனால் தொடக்கத்தில் சற்று பதற்றம் அடைந்து விட்டோம். காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் இன்னும் ஒரு ஒலிம்பிக் கோட்டாவை வெல்ல வேண்டும். குறைந்தது ஒரு ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அடுத்த ஆண்டு பெர்லினில் நடைபெறும் உலக கோப்பை வில்வித்தை போட்டியின் மூலம் அணிக்கான ஒலிம்பிக் வாய்ப்பை பெறுவோம் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை மற்றும் ஒடிசா அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
சென்னை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0-0 என சமனிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் 51 மற்றும் 71வது நிமிடங்களில் நெரிஜஸ் வல்ஸ்கிஸ் சிறப்பாக தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா அணியின் அரிடேன் 54வது நிமிடத்திலும், சிஸ்கோ 82 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 சமன் என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒடிசா அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 சமன் என 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஐபிஎல் அணிகள் உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் சிறப்பாக செயல்பட நேரம் கொடுக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் உள்ளூர் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த பயிற்சியாளர்களை கொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். அவர்கள் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் துறையில், பயிற்சியாளர் துறையிலும் ஏராளமான திறமைகள் உள்ளன.
நாம் அவர்கள் வளர்வதற்கான நம்பிக்கை கொடுப்பது அவசியம். அப்படி செய்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஐபிஎல் தொடரில் ஏராளமானவர்களுக்கு துணைப் பயிற்சியாளர்கள் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.
ஐபிஎல் தொடரில் நிறைய இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் சூழ்நிலைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கும். பயிற்சியாளர்களும் அதேபோல்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்திய பயிற்சியாளர்கள் மூலம் அணிகள் அதிக பயனை அடைந்திருப்பார்கள். இதனால் பயிற்சியாளர்கள் வளர வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இரண்டு தருணங்களை மறக்கவே முடியாது என்று எம்எஸ் டோனி நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இந்தியாவுக்கு மூன்று ஐசிசி டிராபியை வாங்கிக் கொடுத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி, 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.
எம்எஸ் டோனிக்கு இந்திய அணியில் ஏராளமான சிறந்த சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள்தான் மிகமிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘நான் இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லியாக வேண்டும். தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா திரும்பியபோது, மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அந்த பகுதியே ஸ்தம்பித்தது. காரில் இருந்து பொதுமக்கள் காரை விட்டு வெளியில் இறங்கி நின்றனர்.

2-வது நிகழ்வு 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின்போது நடந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 15-20 ரன்கள் தேவையிருக்கும்போது, அனைத்து ரசிகர்களுமம் வந்தே மாதரம் என கோசம் எழுப்பினர்.
இந்த இரண்டு தருணங்கள் மீண்டும் பிரதிபலிப்பது மிகவும் கடினம். இரண்டு எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான தருணங்கள்’’ என்றார்.

ஒவ்வொரு பொதுமக்களின் முகத்திலும் சிரிப்பை பார்த்த நான், அதை மிகவும் சிறந்த தருணமாக உணர்ந்தேன். ஏனென்றால், கூட்டத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள் அவர்களுடைய விமான பயணத்தை தவற விட்டிருக்கலாம், முக்கியமான வேலைகள் கூட தடைபட்டிருக்கலாம். நாங்கள் பெற்ற வரவேற்பு மரைன் டிரைவின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை குறையாமல் அப்படியே குறையாமல் இருந்து.