என் மலர்
விளையாட்டு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
நூர் சுல்தான்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று தொடங்கியது.
இதில் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை பந்தாடினார்.
மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் (இந்தியா), பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். இதில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்தித்தது. இதில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வென்றது.
மாற்று ஒற்றையர் ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் பாகிஸ்தானின் யூசுப் கலீல் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற கணக்கில் சுமித் நாகல் அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகத் தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
அடிலெய்டு நகரில் நடந்துவரும் பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அபாரமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் லாபஸ்சாக்னே 162 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஸ்டீவ் சுமித் களமிறங்கினார். 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை ருசித்தார். இதையடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டேவிட் வார்னர் 335 ரன்களுடனும், மேத்திவ் வேட் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுக்கள் விழ பாபர் அசாம் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறிது சமாளித்து ஆடினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 42 ரன்களுடனும், யாசிர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி 493 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 375 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
ஹேமில்டன்:
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நேற்று தொடங்கியது.
இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக ஜீட் ரவல் மற்றும் டாம் லாதம் ஆகியோர் களமிறங்கினர். ஜீட் ரவல் 5 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த ராஸ் டெய்லர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். 53 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி டாம் லாதம் சதம் அடித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தது. டாம்லாதம் 101 ரன்னும் நிக்கோலஸ் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. டாம்லாதம் 105 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. விக்கெட் கீப்பர் வாட்லிங் 55 ரன்கள், மிட்செல் 73 ரன்களும் குவித்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி 129.1 ஓவர்களில் 375 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், டாம் கரன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடியது. 7-வது ஓவரில் அந்த அணியின் தொடக்க வீரர் டாம்சிப்லே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை சவுத்தி கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் விளாசி அசத்தினார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், லாபுசாக்னே 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. 80-வது ஓவரில் ஆஸ்திரேலியா 350-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷகீன்சா அப்ரிடி பிரித்தார். அணியின் ஸ்கோர் 369 ஆக இருந்தபோது மார்கஸ் லாபுசாக்னே 162 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 361 ரன் குவித்தது.
அடுத்து ஸ்டீவ் சுமித் களம் வந்தார். 36 ரன்களில் ஆட்டமிழந்த ஸ்டீவ் சுமித் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை ருசித்தார். அவர் 389 பந்துகளை சந்தித்து 37 பவுண்டரியுடன் 300 ரன்களை தொட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய 7வது வீரர் வார்னர் ஆவார். பாகிஸ்தான் அணிக்கெதிராக முச்சதம் விளாசிய 4வது வீரர், மேலும் அந்த அணிக்கெதிராக முச்சதம் விளாசிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் வார்னரைச் சாரும்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 253 ரன் குவித்து இருந்ததே வார்னரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். இந்த ஆட்டத்தில் 300 ரன்கள் கடந்த வார்னர், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், 73 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
அடிலெய்டு:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதன்பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் இரட்டைச் சதம் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவின் 162 ரன்களால் வலுவான நிலையில் உள்ளது. மார்னஸ் லாபுசாக்னேவின் ஆட்டமிழந்த பின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கிறங்கினார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் எடுத்து 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 126 இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகள் ரன்களையும் (6,996 ரன்கள்) முந்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முறையே தங்களது 134வது மற்றும் 136வது இன்னிங்ஸ்களில் 7,000 ரன்கள் கடந்தனர். விராட் கோலி மற்றும் இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா ஆகியோர் தங்களது 138 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்தனர். சுனில் கவாஸ்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவியன் ரிச்சார்ட்ஸ் தனது 140 வது இன்னிங்சில் 7,000 ரன்கள் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நூர் சுல்தான்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நேற்று தொடங்கியது.
இதில் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், அனுபவம் இல்லாத 17 வயதான பாகிஸ்தான் வீரர் முகமது சோகைப்பை சந்தித்தார். 42 நிமிடம் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் ராம்குமார் எதிராளிக்கு ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் முகமது சோகைப்பை பந்தாடினார்.
மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல் (இந்தியா), பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். 64 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஹூஜைய்பா அபதுல் ரகுமானை வீழ்த்தினார். டேவிஸ் கோப்பை போட்டியில் சுமித் நாகல் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வெற்றிக்கு பிறகு சென்னையைச் சேர்ந்த ராம்குமார் அளித்த பேட்டியில், ‘எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். முதல் நாளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை (இன்று) நடைபெறும் ஆட்டத்தில் ஜீவன்-லியாண்டர் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் எங்கள் பணி முடிவுக்கு வரும். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறினார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் ஹூஜைய்பா அப்துல் ரகுமான்-முகமது சோகைப் இணையை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்-முகமது சோகைப், ராம்குமார்- ஹூஜைய்பா அப்துல் ரகுமான் ஆகியோர் மோதுகிறார்கள்.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழகம் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அலகாபாத்:
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தமிழக அணி ராஜஸ்தானை எதிர்கொண்டது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் தீபக் சஹார் மற்றும் அங்கித் களமிறங்கினர். ஆனால் அணியின் ஸ்கோர் 23 ஆக இருந்தபோது கேப்டன் திபக் சஹார் 7 ரன்களில் சாய் கிஷோரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அங்கித்தும் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் தமிழக வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் ராஜேஷ் 23 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தமிழக அணி சார்பில் விஜய் சங்கர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 113 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் களமிறங்கினர்.
ஹரி நிஷாந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தருடன் கைகோர்த்த அஸ்வின் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அஸ்வின் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் தமிழக அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 116 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக அணியின் வீரர் வாஷிங்டன் சுந்தர் 54 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் இறுதி போட்டிக்கு தமிழக அணி முன்னேறியது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது தமிழகம்.
ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் செயல்பாடுகளை பார்த்து எம்எஸ் டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார் என விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி அரை இறுதியில் தோற்று வெளியேறிய பிறகு முன்னாள் கேப்டன் டோனி 3 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக கூறி போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதனால் அவர் ஓய்வு முடிவை எடுப்பாரா? என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே டோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுபற்றி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகுதான் 20 ஓவர் அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனி கூறும்போது ‘‘ஓய்வு குறித்து ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறியதாவது:-
இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் செயல்பாடுகளை டோனி அடுத்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணிப்பார் என்று நம்புகிறேன். அவர்களது ஆட்டத்திறனை பார்த்து டோனி தனது முடிவை எடுக்கலாம்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எப்பொழுதெல்லாம் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டத்தை பார்த்து டோனி பொறுமையுடன் காத்து இருப்பார் என்று கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார். ஏனென்றால் டோனி ஐ.பி.எல். போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எப்பொழுதெல்லாம் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரியானா அணிக்கெதிராக கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஒவரில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா - கர்நாடகா அணிகள் மோதின.
அரியானா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் எளிதாக 200 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை அபிமன்யு மிதுன் அபாரமாக வீச இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
முதல் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதற்கு இலங்கை வீரர் லசித் மலிங்கா நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் சாதனைப் படைத்திருந்தார்.
மிதுன் ஐந்தாவது பந்தை வைடாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார். முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 37 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர், லாபஸ்சாக்னே மீண்டும் சதம் விளாச அடிலெய்டு பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது. பிங்க்-பால் டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார்.

ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 73 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், லாபஸ்சாக்னே 126 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்து வீச்சால் அவுட்டாக்க முடியாமல் திணறியது சோகமாக அமைந்தது. இருவரும் பிரிஸ்பேன் டெஸ்டிலும் சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 150 ரன்னைக் கடந்தார். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 73 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், லாபஸ்சாக்னே 126 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்து வீச்சால் அவுட்டாக்க முடியாமல் திணறியது சோகமாக அமைந்தது. இருவரும் பிரிஸ்பேன் டெஸ்டிலும் சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி 9.3 ஓவரில் 125 ரன்கள் விளாச கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா - அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பிஷ்னோய்- ஹர்சல் பட்டேல் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்டேல் 20 பந்தில் 34 ரன்களும், பிஷ்னோய் 35 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.
ஹிமான்ஷு ராணா 34 பந்தில் 61 ரன்கள் அடிக்க அரியானா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி சார்பில் அபிமன்யு மிதுன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் இரண்டு ஓவர்கள் வரை இந்த ஜோடி நிதானமாகவே விளையாடியது. இதனால் 10 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸ் மூன்று பவுண்டரிகள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது.
ஐந்தாவது ஓவரில் கேஎல் ராகுல் இரண்டு சிக்சர்கள் விளாச 19 ரன்கள் கிடைத்தது. 6-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தது. கர்நாடகா பவர்பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.
கேல்எல் ராகுல் 7-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 21 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய கேல்எல் ராகுல் 31 பந்தில் நான்கு பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. இதற்கிடையே மறுமுனையில் விளையாடி தேவ்தத் படிக்கல் 24 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இவர் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 10.5 ஓவர்களில் 183 ரன்கள் குவித்திருந்தது.
அதன்பின் வந்த மணிஷ் பாண்டே 14 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கர்நாடகா 15 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அல்லது ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இந்தத் தொடர்களில் பாதுகாப்பு கருதி முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாம் நிலை வீரர்களை கொண்ட இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்தது. ஆனால் டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை சம்மதம் தெரிவித்தது. முதல் டெஸ்ட் டிசம்பர் 11-ந்தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 19-ந்தேதி கராச்சி தேசிய மைதானத்திலும் நடக்கிறது.
இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் பட்டியலில் முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. திமுத் கருணாரத்னே (கேப்டன்), 2. ஒஷாடா பெர்னாண்டோ, 3. குசால் மெண்டிஸ், 4. மேத்யூஸ், 5. தினேஷ் சண்டிமல், 6. குசால் ஜனித் பெரேரா, 7. லஹிரு திருமானே, 8. தனஞ்ஜெயா டி சில்வா, 9. நிரோஷன் டிக்வெல்லா, 10. தில்ருவான் பெரேரா, 11. லசித் எம்பல்டெனியா, 12. சுரங்கா லக்மலம், 13. லஹிரு குமாரா, 14. விஷ்வா பெர்னாண்டோ, 15. கசுன் ரஜிதா, 16. லக்சன் சண்டகன்.