search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல்
    X
    கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல்

    கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ருத்ர தாண்டவம்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா

    கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி 9.3 ஓவரில் 125 ரன்கள் விளாச கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா - அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பிஷ்னோய்- ஹர்சல் பட்டேல் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்டேல் 20 பந்தில் 34 ரன்களும், பிஷ்னோய் 35 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.

    ஹிமான்ஷு ராணா 34 பந்தில் 61 ரன்கள் அடிக்க அரியானா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி சார்பில் அபிமன்யு மிதுன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    முதல் இரண்டு ஓவர்கள் வரை இந்த ஜோடி நிதானமாகவே விளையாடியது. இதனால் 10 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸ் மூன்று பவுண்டரிகள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது.

    ஐந்தாவது ஓவரில் கேஎல் ராகுல் இரண்டு சிக்சர்கள் விளாச 19 ரன்கள் கிடைத்தது. 6-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தது. கர்நாடகா பவர்பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.

    கேல்எல் ராகுல் 7-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 21 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய கேல்எல் ராகுல் 31 பந்தில் நான்கு பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. இதற்கிடையே மறுமுனையில் விளையாடி தேவ்தத் படிக்கல் 24 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இவர் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 10.5 ஓவர்களில் 183 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் வந்த மணிஷ் பாண்டே 14 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கர்நாடகா 15 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அல்லது ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×