என் மலர்
விளையாட்டு
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீராங்கனையை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதுகிறார்.
- தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.
- இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
மும்பை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10-ம் தேதி யுஏஇ, 14-ம் தேதி பாகிஸ்தான், 19-ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூகா நார்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வரேவ் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, கச்சனாவ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
- இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.
துபாய்:
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?
இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது.
நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை.
எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது.
இந்தப் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது
ரத்தமும் நீரும் ஒன்றாக ஓடமுடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரொமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப்6-2, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன.
- டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார்
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் கில்லை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய யுவராஜ் சிங், "இந்திய அணி வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு இளம் அணி என்பதால், தொடர் சமநிலையில் முடிந்தாலும், இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். இங்கிலாந்தில் சென்று நன்றாக விளையாடி உங்களை நிரூபிப்பது எளிதல்ல
அயல்நாட்டில் சுப்மன் கில் எப்படி விளையாடுவார் என பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான கில், இங்கிலாந்தில் 4 சதங்களை விளாசினார். உங்களிடத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதனை எப்படி கையாள வேண்டும் என கில் நிரூபித்து விட்டார்" என்று தெரிவித்தார்.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா மற்றும் ஜெசிகா பௌசாஸ் மனிரோ மோதினார்.
- இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனை மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மற்றும் எலினா ரிபாகினா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் மேடிசன் கீஸ் கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா ரிபாகினா அடுத்த 2 செட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் எலினா ரிபாகினா 6-7 (3-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெசிகா பௌசாஸ் மனிரோ (ஸ்பானிஷ்) மோதினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதி சபலென்கா மற்றும் ரிபாக்கினா நாளை மோதவுள்ளனர்.
- 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
- பல்வேறு அணிகளுக்கு மெடிக்கல் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரராக திகழ்ந்தவர் லியாண்டர் பயஸ். இவரது தந்தை வெஸ் பயஸ். முன்னாள் ஹாக்கி வீரரான இவர், இன்று காலமானார். இவருக்கு 80 வயது.
வெஸ் பயஸ் 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்திருந்தார்.
பார்கின்சன் நோய் முற்றிய நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இந்திய ஹாக்கி அணியில் மிட்பீல்டர் வீரராக விளையாடி வந்தவர். மேலும் கால்பந்து, கிரிக்கெட், ரக்ஃபி போன்றவற்றில் விளையாடியுள்ளார். இந்திய ரக்ஃபி கால்பந்து சங்கத்தின் தலைவராக 1996-ல் இருந்து 2002 வரை தலைவராக பணியாற்றினார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ, இந்திய டேவிஸ் கோப்பை அணி மெடிக்கல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
- ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது.
- சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட ராஜஸ்தான் அணி ஆலோசனை நடந்தி வருகிறது.
மும்பை:
2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக எதிர் அணிகளில் இருந்து டிரேட் செய்து சில வீரர்களை வாங்க முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே தங்களது அணியை கட்டமைக்க முடிவு எடுத்திருக்கிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்ப ராஜஸ்தான் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சனும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட வேண்டும் என்று ராஜஸ்தான் அணி ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேச்சுவார்த்தைக்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜிடம் இருந்து பதில் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டுமென்றால், சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தரப்பில் எந்த வீரரையும் கொடுக்க முன் வரவில்லை.
- அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
- இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டனர்.
மும்பை:
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் ஆகியவற்றின் உரிமையாளர்.
சானியா சந்தோக், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான 'மிஸ்டர் பாவ்ஸ்' (Mr Paws) என்ற சலூனை நிறுவி நடத்தி வருகிறார்.
அர்ஜுன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழா, இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






