என் மலர்
விளையாட்டு
மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் நேர்செட்டில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
புனே:
3-வது மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை சந்தித்தார்.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் காதே 2-6, 4-6 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 6-2, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் திவிஜ் சரண் (இந்தியா)-அர்டெம் யூரிவிச் சிடாக் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.
கொல்கத்தா:
தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 25 வயதான மணிப்பூர் வீராங்கனை ‘ஸ்னாட்ச்’ முறையில் 88 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 201 கிலோ எடை தூக்கியதே தேசிய சாதனையாக இருந்தது. மீராபாய் சானு தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்து புதிய சாதனை படைத்தார். அவர் 2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். 203 கிலோ எடை தூக்கியதன் மூலம் மீராபாய் சானு உலக தரவரிசையில் 4-வது இடத்தை பிடித்தார்.
வெற்றிக்கு பிறகு மீராபாய் சானு அளித்த பேட்டியில், ‘எங்களது திட்டத்தின் படி எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 206-207 கிலோ எடை தூக்க வேண்டும் என்பதே இலக்காகும். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 210 கிலோ எடையை தூக்க முடியும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 21 வயதான தமிழக வீரர் அஜித் ‘ஸ்னாட்ச்’ முறையில் 140 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 170 கிலோவும் என மொத்தம் 310 கிலோ எடை தூக்கி தேசிய சாதனை படைத்ததுடன், நடப்பு சாம்பியனும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான மேற்கு வங்காளத்தின் அசிந்தா ஷீலியை (306 கிலோ) பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

வதோதராவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணியின் முகமது பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பரோடா 174 ரன்னில் சுருண்டது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 7-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பரோடா முதலில் பேட்டிங் செய்தது.
தமிழ்நாடு அணியின் எம். முகமதுவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பரோடா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பரோடா 174 ரன்னில் சுருண்டது. முகமது 7 விக்கெட்டும், அபிஷேக் தன்வர் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், எல் சூர்யபிரகாஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது. அபிநவ் முகுந்த் 73 ரன்னுடனும், சூர்யபிரகாஷ் 61 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னில் சுருண்டது.

ஜெய்ஸ்வால், சக்சேனா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 36-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தியா விக்கெட் இழப்பின்றி 35.2 ஓவரில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 105 ரன்களுடனும், சக்சேனா 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரது விக்கெட்டையும் வீழ்த்த பாகிஸ்தான் இளைஞர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் பலன் அளிக்கவில்லை.

ஜெய்ஸ்வால், சக்சேனா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 36-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தியா விக்கெட் இழப்பின்றி 35.2 ஓவரில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 105 ரன்களுடனும், சக்சேனா 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரஞ்சி டிராபியில் பாட்டியாலாவில் நடைபெற்று வரும் ஆந்திரா - பஞ்சாப் இடையிலான ஆட்டத்தின் முதல் நாளில் 24 விகெட்டுக்கள் வீழ்ந்தன.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று 7-வது சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பஞ்சாப் - ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆந்திரா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்திரா முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆந்திரா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட்டில் வெளியேறினர். சித்தார்த் கவுல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த ஆந்திரா 97 ரன்னில் சுருண்டது. சித்தார்த் கவுல் ஐந்து விக்கெட்டுகளும், சவுத்ரி 3 விக்கட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆந்திராவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சாப் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். சோயிப் முகமது கான், ஆஷிஷ் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த பஞ்சாப் அணி 108 ரன்னில் சுருண்டது.
பின்னர் 11 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆந்திரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஒரே நாளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்திய அணி எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பந்து வீசும் திறமையை பெற்றுள்ளது என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த இரண்டு போட்டிகளிலும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியாவின் பந்து வீச்சு எப்போதும் இல்லாத வகையில் உலகின் எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்ப சிறப்பாக உள்ளது என நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக் ஹெசன் கூறுகையில் ‘‘இந்திய அணி தற்போது மிகமிக சிறந்த அணியாக திகழ்கிறது. அவர்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். உலகின் எந்தவொரு சூழ்நிலைகளுக்கும் (Conditions) ஒத்துப்போகும் வகையில் அவர்களது பந்து வீச்சு இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் வேகப்பந்து வீச்சு யுனிட், சுழற்பந்து வீச்சு யுனிட் சிறப்பாக உள்ளது. இதுபோன்று இந்திய அணி இதற்கு முன்பு இருந்ததில்லை.
வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடும் திறன் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது. ஆகவே இது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி. இந்த தொடர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்’’என்றார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் வெற்றிக்கு 173 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் ஹைதர் அலி, முகமது ஹரைரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரைரா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஹத் முனிர் 16 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் 32 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஹைதர் அலி உடன் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரோஹைல் நசீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பான விளையாடிய ஹைதர் அலி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 77 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த குவாசிம் அக்ரம் 9 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த முகமது ஹாரிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றாலும் 15 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அரைசதம் அடித்த ரோஹல் நசீர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 43.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 172 ரன்னில் சுருண்டது. இந்திய அணி சார்பில் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட்டும் கார்த்திக் தியாகி மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இலக்குடன் இந்தியா களம் இறங்கியுள்ளது.

டி20 உலக கோப்பைக்கு தயாராக சிறந்த அடித்தளம் நியூசிலாந்து தொடர் அல்ல, ஐபிஎல் தொடர்தான் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது.
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கு முன் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் விளையாட இருக்கிறது.
நியூசிலாந்து தொடர் நாளை தொடங்குகிறது. டி20 உலக கோப்பைக்கு முன் இந்தியா இந்த ஆறு சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால், உலக கோப்பைக்கு தயாராகுவதற்கு இது ஆறு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர்தான் தயாராகுவதற்கு சரியான அடித்தளம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். இன்னும் அதிகமான டி20 போட்டிகள் இல்லை. ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். அதை சரியான பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால், கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரக்கெட் தொடருக்கு போதுமான அளவு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
எந்வொரு வகை கிரிக்கெட் என்றாலும் அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட் விளையாடும்போது நான் வேகப்பந்து வீச்சு காம்பினேசன் குறித்து பேசுவேன். வீரர்கள் அவர்களுடைய பணியில் சரியாக அமரவேண்டும்.
நான் டி20 அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வகை கிரிக்கெட்டில் இந்த மாதிரி விளையாடுகிறேன் என்பது அவர்களுக்கு தெரியும். இதுபோன்ற விஷயங்கள் மாறுபட்ட கிரிக்கெட்டில் சிறந்த பழக்கத்தை உருவாக்கும். அவர்கள் அந்தந்த வகையான போட்டிக்கு மாற முடியும். ஆகையால் இந்த தொடரை நான் உலக கோப்பைக்கான தயார்படுத்துதல் என்று பார்க்கவில்லை. ஐபிஎல் சரியான அடித்தளமாகும்’’ என்றார்.

கேப்டன் பதவி சுமையில்லை, பேட்டிங் மற்றும் அணியை வழிநடத்துவதற்கு கிப்பிங் உதவியாக இருக்கிறது என் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டான் டி காக். தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வரும் டி காக், பேட்டிங்கில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவற்றுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்பது அவருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் விக்கெட் கீப்பர் பணி எனது கேப்டன் பதவிக்கும், பேட்டிங்கிக்கும் உதவுகிறது என்று குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குயிண்டான் டி காக் கூறுகையில் ‘‘விக்கெட் கீப்பராக பணியாற்றுவது என்னுடைய கேப்டன் பதவிக்கும், பேட்டிங்கிக்கும் உதவியாக இருக்கிறது. என்னால் எவ்வளவு முடியுமோ அதுவரை கீப்பராக பணியாற்றுவது எனக்கு முக்கியமானது.
எனக்கு ஏராளமான வேலைப்பளு என்று கூறுகிறார்கள். தற்போது வரை நான் சிறப்பாக இந்த வேலையை செய்து வருகிறேன். தற்போது கேப்டனாக பணியாற்றுவது சற்று கூடுதல் பொறுப்பாகும். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுடன் இந்த பணியை செய்ய இருக்கிறேன்’’ என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையிலும் களம் இறங்குவார்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. தவான் காயத்தால் விலகியதால் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவும் அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் இரண்டு தொடக்க இடங்களும் காலியாக உள்ளன. ரோகித் சர்மாவுககு பதில் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். அவருடன் களம் இறங்கும் மற்றொரு வீரர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.
கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினால் பிரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் அவருடன் தொடக்க வீரராக களம் இறங்கப்படலாம், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களம் இறங்குவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ரிஷப் பண்டுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்பது கேள்வி எழுந்துள்ளது.
ஒருநாள் தொடர் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா இடம் பெறாதது துரதிருஷ்டவசமானது. அவர் இல்லாதது அணிக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.
முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அவர் அந்த இடத்தில் நன்றாக பழக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.
இதனால் பிரித்வி ஷா உடன் மயங்க் அகர்வால்தான் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. அப்படி என்றால் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் ஷ்ரேயாஸ் அய்யரும் களம் இறங்குவார்கள். ஐந்தாவது இடத்தில் கேஎல் ராகுல் களம் இறங்குவார் என்று விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.
மணிஷ் பாண்டேவை ஆடும் லெவன் அணியில் சேர்க்க விரும்பினால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும். அப்படி என்றால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார் என்று விராட் கோலி கூறவில்லை. ஆகையால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டால் மணிஷ் பாண்டே அணியில் இடம் பெற முடியாது.
ஆல்-ரவுண்டரான ஷிவம் டுபே உடன் இந்தியா விளையாட விரும்பினால் ரிஷப் பண்ட், மணிஷ் பாண்டே ஆகியோருக்கு இடம் இருக்காது. எப்படி பார்த்தாலும் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடிப்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.

டி20 தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டு வந்த கேன் வில்லியம்சன் முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 , 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நாளை (புதன்கிழமை) இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது கேன் வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
இந்த நிலையில், தோள்பட்டை காயம் குணமாகாததால், இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
ஏற்கனவே நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், கேன் வில்லியம்சன் விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நியூஸிலாந்து அணிக்கு கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சேப்மேன் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை நடக்கவுள்ள நிலையில் இந்தியாவின் அதிரடி தொடருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஹேமில்டன்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து புதிய சாதனை படைத்தது.
3 ஒருநாள் போட்டித்தொடரில் முதல் ஆட்டம் ஹேமில்டனில் நாளை (5-ந் தேதி) நடக்கிறது.
20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய 3 தொடரையும் கைப்பற்றி இந்தியா முத்திரை பதித்தது. 2016-ல் 3-2 என்ற கணக்கிலும் (இந்தியா), 2017-ல் 2-1 என்ற கணக்கிலும் (இந்தியா), 2019-ல் 4-1 என்ற கணக்கிலும் (நியூசிலாந்து) தொடரை வென்றது. தற்போது தொடர்ச்சியாக 4-வது தொடரை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
அதிரடி தொடக்க வீரர் ரோகித்சர்மா காயத்தால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்டில் விலகி இருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. இதனால் லோகேஷ் ராகுலும், அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ்பாண்டே ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பவுன்சர் பந்து ஹெல்மட்டில் தாக்கியதால் ரிஷப்பண்ட் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். அவர் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரிஷப்பண்ட் நீக்கப்பட்டார்.
ஒரு நாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது உறுதியில்லை. ரோகித்சர்மா இல்லாததால் ராகுல் தொடக்க வரிசைக்கு செல்வார். இதனால் மிடில் ஆர்டர் வரிசையில் ஒரு வேளை வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதே நேரத்தில் கேதர் ஜாதவும் மிடில் ஆர்டர் வாய்ப்பில் இருக்கிறார்.
பந்து வீச்சில் பும்ரா, முகமதுஷமி, ஷர்துல் தாக்கூர், குல்தீப்யாதவ் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர்.
கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், மார்ட்டின் குப்தில், ஜேம்ஸ் நீசம், டாம்லாதம், பென்னட் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இந்திய அணி கடைசியாக ஆடிய 3 ஒரு நாள் தொடர்களிலும் (வெஸ்ட் இண்டீஸ்-2, ஆஸ்திரேலியா) வென்று இருந்தது. இரு அணிகளும் கடைசியாக உலக கோப்பை அரை இறுதியில் மோதி இருந்தன. இதில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா நாளை பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
நியூசிலாந்து அணி உலக கோப்பைக்கு பிறகு தற்போதுதான் ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.