என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழு விக்கெட் வீழ்த்திய எம் முகமது
    X
    ஏழு விக்கெட் வீழ்த்திய எம் முகமது

    முகமது ஏழு விக்கெட்: பரோடாவை 174 ரன்னில் சுருட்டி தமிழ்நாடு அணி ஆதிக்கம்

    வதோதராவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணியின் முகமது பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பரோடா 174 ரன்னில் சுருண்டது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 7-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பரோடா முதலில் பேட்டிங் செய்தது.

    தமிழ்நாடு அணியின் எம். முகமதுவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பரோடா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பரோடா 174 ரன்னில் சுருண்டது. முகமது 7 விக்கெட்டும், அபிஷேக் தன்வர் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், எல் சூர்யபிரகாஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்துள்ளது. அபிநவ் முகுந்த் 73 ரன்னுடனும், சூர்யபிரகாஷ் 61 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×