search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U19 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி
    X
    U19 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி

    U19 உலக கோப்பை: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு- பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறுமா?

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் வெற்றிக்கு 173 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
    தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் ஹைதர் அலி, முகமது ஹரைரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரைரா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஹத் முனிர் 16 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    இதனால் 32 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஹைதர் அலி உடன் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ரோஹைல் நசீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பான விளையாடிய ஹைதர் அலி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 77 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த குவாசிம் அக்ரம் 9 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த முகமது ஹாரிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றாலும் 15 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அரைசதம் அடித்த ரோஹல் நசீர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 43.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 172 ரன்னில் சுருண்டது. இந்திய அணி சார்பில் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட்டும் கார்த்திக் தியாகி மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இலக்குடன் இந்தியா களம் இறங்கியுள்ளது.
    Next Story
    ×