என் மலர்

  செய்திகள்

  விராட் கோலி
  X
  விராட் கோலி

  ஐபிஎல் தொடர்தான் சரியான அடித்தளம்: விராட் கோலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 உலக கோப்பைக்கு தயாராக சிறந்த அடித்தளம் நியூசிலாந்து தொடர் அல்ல, ஐபிஎல் தொடர்தான் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
  இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது.

  டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கு முன் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் விளையாட இருக்கிறது.

  நியூசிலாந்து தொடர் நாளை தொடங்குகிறது. டி20 உலக கோப்பைக்கு முன் இந்தியா இந்த ஆறு சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால், உலக கோப்பைக்கு தயாராகுவதற்கு இது ஆறு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர்தான் தயாராகுவதற்கு சரியான அடித்தளம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். இன்னும் அதிகமான டி20 போட்டிகள் இல்லை. ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். அதை சரியான பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால், கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரக்கெட் தொடருக்கு போதுமான அளவு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

  எந்வொரு வகை கிரிக்கெட் என்றாலும் அதற்குரிய மதிப்பை அளிக்க வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட் விளையாடும்போது நான் வேகப்பந்து வீச்சு காம்பினேசன் குறித்து பேசுவேன். வீரர்கள் அவர்களுடைய பணியில் சரியாக அமரவேண்டும்.

  நான் டி20 அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வகை கிரிக்கெட்டில் இந்த மாதிரி விளையாடுகிறேன் என்பது அவர்களுக்கு தெரியும். இதுபோன்ற விஷயங்கள் மாறுபட்ட கிரிக்கெட்டில் சிறந்த பழக்கத்தை உருவாக்கும். அவர்கள் அந்தந்த வகையான போட்டிக்கு மாற முடியும். ஆகையால் இந்த தொடரை நான் உலக கோப்பைக்கான தயார்படுத்துதல் என்று பார்க்கவில்லை. ஐபிஎல் சரியான அடித்தளமாகும்’’ என்றார்.
  Next Story
  ×