என் மலர்
விளையாட்டு
இந்தியா 2003-04-ல் பாகிஸ்தான் சென்றிருந்தபோது என்னைப் பற்றி மியான்தத் கூறியது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை என்று இர்பான் பதான் விவரித்துள்ளார்.
கார்கில் போருக்குப்பின் இந்தியா 2003-04-ல் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா டெஸ்ட் தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 3-2 எனவும் வென்றது.
இந்தத் தொடரின்போது பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த வீரர்கள் இருந்தனர். இந்தியாவில் இளம் வீரரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இடம் பிடித்திருந்தார். புதுப்பந்தை ஸ்விங் செய்வதில் திறமை பெற்றிருந்தார்.
இருந்தாலும் பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் என்னைப் பற்றி பாகிஸ்தான் நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும் இர்பான் பதான் போன்று ஒவ்வொரு பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த கருத்தை எனது தந்தை விரும்பவில்லை என்று இர்பான் பதான் தற்போது விவரித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘ஜாவித் மியான்தத் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் பதான் போன்ற பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த செய்தியை எனது அப்பா படித்தார். அவர் இந்த கருத்தை விரும்பவில்லை.
கடைசி போட்டியின்போது எனது அப்பா பாகிஸ்தான் வந்திருந்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்று மியான்தத்தை சந்திக்க இருக்கிறேன் என்றார். நீங்கள் அங்கே செல்வதை நான் விரும்பவில்லை என்றேன்.
ஆனால் மியான்தத் எனது தந்தையை பார்த்துள்ளார். நிலைமை புரிந்துகொண்ட மியான்தத், உங்களது மகனை மனதில் வைத்து நான் அப்படி கூறவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போது எனது தந்தை, நான் இங்கே வந்தது உங்களிடம் ஏதும் கூறவதற்காக இல்லை. உங்களை பார்க்க வேண்டும். நீங்கள் தலைசிறந்த வீரர் என்று தெரிவித்தார்’’ என்றார்.
நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தில் நானும் சட்டையை கழற்றினேன், ஆனால் தப்பித்து விட்டேன் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது என்ற விமர்சனம் எப்பொழுதுமே உண்டு. 2002-ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா சேஸிங் செய்ய களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா 146 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் கைப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 121 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. யுவராஜ் சிங் 69 ரன்களும், முகமது கைப் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் அடித்தனர்.
இந்தியா வெற்றி பெற்ற பிறகு கேப்டன் கங்குலி டிரெஸ்சிங் ரூமில் இருந்து சட்டையை கழற்றி கையில் வைத்து சுற்றினார். அதேபோல் யுவராஜ் சிங்கும் சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடினார்.
சட்டையை கழற்றியதால் கங்குலி விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் நான் அதில் இருந்து தப்பினேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘வெளிநாட்டு தொடர்களில் நாம் இதற்கு முன் 9 அல்லது 10 இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம். வெளிநாட்டு மண்ணில் சாதனைகள் படைத்தது கிடையாது. நாங்கள் அப்போது புதிய அணி. சவுரங் கங்குலி எங்களுக்கு அதிக அளவில் ஆதரவு கொடுத்தார்.
இங்கிலாந்து 325 ரன்கள் அடித்த பின்னர் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தோம். இதுபோன்ற டார்கெட்டை சேஸிங் செய்வது மிகவும் எளிதானது அல்ல. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது, ஆனால் சச்சின் தெண்டுல்கர் ஆட்டமிழந்த பின், இங்கிலாந்து வீரர்கள் கோப்பையை வென்று விட்டதாகவே சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது.
நாங்கள் 146 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஏறக்குறைய 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் இருந்து சென்று விட்டனர். அடுத்து கைப் களம் இறங்கினார். அவரிடம் நான் விளையாடுவோம் என்றேன். நாங்கள் ஏற்கனவே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் இணைந்து விளையாடியதால் விக்கெட்டுகளுக்கு இடையில் சிறப்பாக ஓடினோம். பந்தை சிறப்பாக அடித்தோம். நான் சற்று அதிரடியாக விளையாடினேன்.
நான் ஆட்டமிழந்த பின்னர் கைப் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் விளையாடியது கைப்-பின் சிறந்த ஆட்டமாக இருக்கும். நான் கொஞ்சம் யோசித்திருந்தால் என்னால் சதம் அடித்திருக்க முடியும்.
நான் என்னுடைய சட்டையை கழற்றி சந்தோசத்தை வெளிப்படுத்தினேன். இங்கிலாந்தில் குளிர் அடிக்கும் என்பதால் நான் உள்ளே டி-சர்ட் அணிந்திருந்தேன். இதனால் என்னை யாரும் கவனிக்கவில்லை. டி-சர்ட் என்னைக் காப்பாற்றியது’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாதம் நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் உள்ளது. இங்கிலாந்து - இலங்கை, இந்தியா- தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்கள் இடையில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
இதனால் ஜூன் மாதம் கிரிக்கெட் தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு விம்பிள்டன் சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ரூமேனியா) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லண்டன்:
ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவது குறித்து சமீபத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) விவாதித்தனர். இதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு விம்பிள்டன் சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ரூமேனியா) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
‘ரசிகர்கள் இன்றி டென்னிஸ் ஆடுவது சரியாக இருக்காது. மிகப்பெரிய போட்டிகளில் நாங்கள் மிகவும் உற்சாகமாக, ரசித்து விளையாடுகிறோம் என்றால், அதற்கு ரசிகர்கள் அளிக்கும் உத்வேகமும், கரவொலியும் தான் காரணம். இல்லாவிட்டால் டென்னிஸ் வேறு விளையாட்டாகி விடும்‘ என்றார். செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா கூறும் போது, ‘ரசிகர்கள் தான் மிகவும் முக்கியம். இது ஒரு தனிநபர் விளையாட்டு. அதனால் தான் ரசிகர்கள் எங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ என்றார்.
ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு விம்பிள்டன் சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லண்டன்:
ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவது குறித்து சமீபத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) விவாதித்தனர். இதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர்.
ஆனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு விம்பிள்டன் சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ரூமேனியா) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் இன்றி டென்னிஸ் ஆடுவது சரியாக இருக்காது.
மிகப்பெரிய போட்டிகளில் நாங்கள் மிகவும் உற்சாகமாக, ரசித்து விளையாடுகிறோம் என்றால், அதற்கு ரசிகர்கள் அளிக்கும் உத்வேகமும், கரவொலியும் தான் காரணம். இல்லாவிட்டால் டென்னிஸ் வேறு விளையாட்டாகி விடும்‘ என்றார்.
செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா கூறும் போது, ‘ரசிகர்கள் தான் மிகவும் முக்கியம். இது ஒரு தனிநபர் விளையாட்டு. அதனால் தான் ரசிகர்கள் எங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ என்றார்.
வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புரோக்கர்கள் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்று ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
லண்டன்:
உலகையே ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் விளையாட்டு உலகம் முற்றிலும் நிலைகுலைந்து போய் விட்டது. கடந்த மார்ச் 13-ந்தேதிக்கு பிறகு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. உள்ளூர் போட்டிகளும் காலவரையின்றி நிறுத்தப்பட்டு விட்டன. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கருத்துகளை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள். முன்னாள் வீரர்களுடன் ருசிகர விவாதங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சூதாட்ட புரோக்கர்கள் கிரிக்கெட் வீரர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மார்ஷல் கூறுகையில், ‘சூதாட்ட புரோக் கர்கள் தற்போதைய சூழலை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை அறிகிறோம். கிரிக்கெட் வீரர்கள் முன்பு எப்போதையும் விட இப்போது சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் சூதாட்டக்காரர்கள், வீரர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, நட்பு வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள். இந்த வகையில் சிக்கும் வீரர்களை பிற்காலத்தில் அவர்கள் ‘மேட்ச் பிக் சிங்’சில் ஈடுபடுத்த முடியும்.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் சூதாட்ட புரோக் கர்கள் இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் எங்களது உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் இது பற்றி கூறியுள்ளோம். சூதாட்டக்காரர்கள் அணுகும் ஆபத்து உள்ளதால், வீரர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றார்.
கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 2 மாதங்களுக்கு தொடங்க வாய்ப்பில்லை. போட்டிகள் ரத்தானதால் வீரர்களின் வருமானம் வெகுவாக சரிந்துள்ளது. குறைவான ஊதியம் பெறும் வீரர்கள் சூதாட்ட பேர்வழிகள் வீசும் ஆசைவலையில் எளிதில் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் கூறுகையில், ‘எந்த வழிகளில் எல்லாம் சூதாட்ட புரோக்கர்கள் தொடர்பு கொள்வார்கள் என்பதை எங்களது வீரர்களுக்கு தெரிவித்து இருக்கிறோம். ரசிகர் போன்று நடந்து கொண்டு, பிறகு வேறு நபர் மூலம் உங்களை நேரில் சந்திக்க முயற்சிக்கலாம். எது எப்படியோ, இந்திய வீரர்கள் சந்தேகப்படும் யார் தொடர்பு கொண்டாலும் உடனடியாக எங்களது கவனத்துக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளது. வீரர்களும், நாங்களும் ஒரே அணியாக செயல்படுகிறோம்’ என்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை தலைமை நிர்வாகி ஜேம்ஸ் பைமன்ட் கூறுகையில், ‘எங்களது வீரர்கள் சரியான விஷயங்களையே செய்வார்கள் என்று நம்புகிறேன். நாம் மனஉறுதியுடன் வலுவாக இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கு இதுவே சரியான நேரம்’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார் என்றால் அது ரோகித் சர்மா தான். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கோப்பையை வெல்வதில் தான் கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது. இறுதியில் அவரே ஐ.பி.எல். போட்டியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருப்பார். ஏற்கனவே 4 கோப்பைகளை வென்று இருக்கிறார். ஐ.பி.எல். வாழ்க்கையை நிறைவு செய்யும் போது தனது கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா 6 அல்லது 7 பட்டங்கள் வென்று இருக்கக்கூடும்.
இவ்வாறு கம்பீர் கூறினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை மகுடம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
மும்பை:
2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றியவர், யுவராஜ்சிங். 362 ரன்கள், 15 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த அவரே தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த உலக கோப்பை தொடரின் போது கேப்டனாக இருந்த டோனி, அணித்தேர்வில் சுரேஷ் ரெய்னாவுக்கு முக்கியத்துவம் அளித்ததாக யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

‘இந்திய கேப்டன்களிலேயே என்னை கவர்ந்தவர் சவுரவ் கங்குலி தான். மற்ற கேப்டன்களை காட்டிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்’ என்றும் யுவராஜ்சிங் கூறினார்.
2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கி யுவராஜ்சிங் உலக சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதை நினைவு கூர்ந்த யுவராஜ்சிங், ‘ஆஸ்திரேலிய பயிற்சியாளர் என்னிடம் வந்து பேட்டில் ஏதாவது பைபர் உள்ளதா என்று கேட்டார். இந்த பேட் விதிமுறைக்குட்பட்டு தான் இருக்கிறதா? போட்டி நடுவருக்கு தெரியுமா என்றும் கேட்டார். ஏன் நீங்களே பேட்டை பரிசோதித்து பாருங்கள் என்று அவரிடம் கூறினேன். பிறகு நடுவர் எனது பேட்டை வாங்கிப் பார்த்தார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூட என்னிடம் பேட் குறித்து கேட்டறிந்தார்.
உண்மையிலேயே அந்த பேட் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதே போல் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் பயன்படுத்திய பேட்டும் எனக்கு ஸ்பெஷல் தான்’ என்றார்.
இதற்கிடையே டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 15 ஆயிரம் முககவசங்களை தனது அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்கிய யுவராஜ்சிங்குக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

டி.வி. சேனலுக்கு யுவராஜ் அளித்த பேட்டியில், ‘சுரேஷ் ரெய்னாவுக்கு அப்போது நிறைய ஆதரவு இருந்தது. ஏனெனில் டோனி அவருக்கு பக்கபலமாக இருந்தார். ஒவ்வொரு கேப்டனுக்கும் அணியில் பிடித்தமான வீரர் யாராவது ஒருவர் இருப்பார். அந்த சமயத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக ரெய்னா இருந்தார். அந்த நேரத்தில் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான் நன்றாக செயல்பட்டார். நானும் சிறப்பாக விளை யாடி விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அப்போது இந்திய அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கிடையாது. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான நான் விக்கெட்டும் வீழ்த்தியதால் வேறு வழியின்றி என்னை வைத்திருந்தனர்’ என்றார்.

‘இந்திய கேப்டன்களிலேயே என்னை கவர்ந்தவர் சவுரவ் கங்குலி தான். மற்ற கேப்டன்களை காட்டிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்’ என்றும் யுவராஜ்சிங் கூறினார்.
2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கி யுவராஜ்சிங் உலக சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதை நினைவு கூர்ந்த யுவராஜ்சிங், ‘ஆஸ்திரேலிய பயிற்சியாளர் என்னிடம் வந்து பேட்டில் ஏதாவது பைபர் உள்ளதா என்று கேட்டார். இந்த பேட் விதிமுறைக்குட்பட்டு தான் இருக்கிறதா? போட்டி நடுவருக்கு தெரியுமா என்றும் கேட்டார். ஏன் நீங்களே பேட்டை பரிசோதித்து பாருங்கள் என்று அவரிடம் கூறினேன். பிறகு நடுவர் எனது பேட்டை வாங்கிப் பார்த்தார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூட என்னிடம் பேட் குறித்து கேட்டறிந்தார்.
உண்மையிலேயே அந்த பேட் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதே போல் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் பயன்படுத்திய பேட்டும் எனக்கு ஸ்பெஷல் தான்’ என்றார்.
இதற்கிடையே டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 15 ஆயிரம் முககவசங்களை தனது அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்கிய யுவராஜ்சிங்குக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னதாகவே அந்த்ரே ரஸலை ஏலத்தில் எடுத்திருந்தால் ஐபிஎல்-லில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டில்களை வென்றிருப்போம் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. இரண்டு முறையும் கவுதம் கம்பிர் தலைமையில் இந்த அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
அந்த அணி 2014 ஏலத்தில்தான் அந்த்ரே ரஸல்-ஐ 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. நான் விளையாடிய காலத்தில் முன்னதாகவே அவரை கொல்கத்தா அணி எடுத்திருந்தால் கூடுதலாக சில டைட்டிலை வென்றிருப்போம் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த்ரே ரஸலை 50 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுத்தது, பவன் நெஹியை டெல்லி அணி 8 கோடி ரூபாய்ப்பு ஏலம் எடுத்தது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் விளையாடிய ஏழு வருடங்களாக அவர் கொல்கத்தா அணியில் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயமாக கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டிலை வென்றிருக்க முடியும்’’ என்றார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 192 ஸ்டிரைக் ரேட் உடன், 14 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் பிரபலம் அடைந்தார். கடந்த சீசனில் 500-க்கு மேல் ரன்கள் குவித்த நிலையில் 11 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.
பாகிஸ்தானின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் பங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரியது என என பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆண்ட்ரூ பிளின்டாஃ.ப் பெயரும் இடம்பெற்றிருக்கும். அவர்கள் விளையாடிய காலத்தில் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகப்பெரிய தூணாக இருந்தார்.
ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வாசிம் அக்ரம் மிகப்பெரிய அளவில் பங்காற்றினார் என பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிளின்டாஃப் கூறுகையில் ‘‘எனக்கு 16 வயது இருக்கும்போது லங்காஷையர் அணிக்காக வாசிம் அக்ரமுடன் இணைந்து விளையாடியுள்ளேன். நான் விரும்பிய ஹீரோக்களில் அவரும் ஒருவர். அவரது கைக்குள் வைத்து என்னை ஆதரித்தார்.
பந்தை எப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்வது, பெருவிரலைக் கொண்டு பந்தை எப்படி பிடிப்பது போன்ற டிப்ஸ்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னுடைய பந்து வீச்சு ஆக்சனை ரிவர்ஸ் ஸ்விங் ஆவது போன்றுதான் இருக்கும் என நினைக்கிறேன். வாசிம் அக்ரம் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்காற்றினார்’’ என்றார்.
1998 முதல் 2009 வரை இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட், 141 ஒருநாள் மற்றும் ஏழு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 3845 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3394 ரன்களும் அடித்துள்ள பிளின்டாஃப் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆறுமாத காலத்திற்கு சர்வதேச எல்லையை மூடியுள்ளது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கிரிக்கெட் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் வேலை செய்யும் ஸ்டாஃப்களுக்கு ஜூன் மாதம் வரை சம்பளத்தில் பெருமளவு பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 20 சதவீதம் மட்டுமே சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் வீரர்களுக்கான சம்பளமும் பிடித்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘ஸ்டாஃப்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்களின் சம்பளமும் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.
இரண்டு அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை எட்டப்படும் என்று நம்புகிறேன். ஆறு மாதம் என்பது மிகவும் நீண்ட காலம். கொரோனா தொற்று அதுவரை தொடராது என்று நினைக்கிறேன். ஒருவேளை நீண்ட காலம் தொடர்ந்து அக்டோபர் மாதம் கிரிக்கெட் தொடர்ந்தால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை காப்பாற்ற வீரர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் பிடித்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மோகன் பகான் அணி ஐ-லீக் சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.லீக் கால்பந்து போட்டியில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்றன. இன்னும் 28 லீக் ஆட்டங்கள் எஞ்சி உள்ள நிலையில் அதற்குள் கொரோனா அரக்கன் ஊடுருவி விட்டதால் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த மோகன் பகான் அணி (16 ஆட்டத்தில், 12 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன், 39 புள்ளி) ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த நிலையில், அந்த பட்டத்தை கைப்பற்றியதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐ-லீக் கமிட்டி, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக கமிட்டியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.