search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளின்டாஃப், வாசிம் அக்ரம்
    X
    பிளின்டாஃப், வாசிம் அக்ரம்

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வாசிம் அக்ரம் பங்கு மிகப்பெரியது: பிளின்டாப் சொல்கிறார்

    பாகிஸ்தானின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் பங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரியது என என பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆண்ட்ரூ பிளின்டாஃ.ப் பெயரும் இடம்பெற்றிருக்கும். அவர்கள் விளையாடிய காலத்தில் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகப்பெரிய தூணாக இருந்தார்.

    ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வாசிம் அக்ரம் மிகப்பெரிய அளவில் பங்காற்றினார் என பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிளின்டாஃப் கூறுகையில் ‘‘எனக்கு 16 வயது இருக்கும்போது லங்காஷையர் அணிக்காக வாசிம் அக்ரமுடன் இணைந்து விளையாடியுள்ளேன். நான் விரும்பிய ஹீரோக்களில் அவரும் ஒருவர். அவரது கைக்குள் வைத்து என்னை ஆதரித்தார்.

    பந்தை எப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்வது, பெருவிரலைக் கொண்டு பந்தை எப்படி பிடிப்பது போன்ற டிப்ஸ்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னுடைய பந்து வீச்சு ஆக்சனை ரிவர்ஸ் ஸ்விங் ஆவது போன்றுதான் இருக்கும் என நினைக்கிறேன். வாசிம் அக்ரம் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்காற்றினார்’’ என்றார்.

    1998 முதல் 2009 வரை இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட், 141 ஒருநாள் மற்றும் ஏழு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 3845 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3394 ரன்களும் அடித்துள்ள பிளின்டாஃப் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×