என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் பிரபல வீரர் ரபேல் நடால்.
    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. இதனால் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்தார். தற்போது ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க ஸ்பெயின் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நடால் மல்லோர்காவில் உள்ள ரபேல் நடால் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

    தான் பயிற்சிபெறும் வீடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் வணக்கம். தற்போது நான் ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதற்கு மகிழ்ச்சி. எனக்கு எதிராக குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட முடியும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இதுதான் முக்கியமான விஷயம்.

    இவ்வாறு ரபேல் நாடல் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி-யின் புதிய வழிகாட்டுதல்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும்போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பந்து மீது எச்சிலை தேய்க்கக்கூடாது. கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டி தொடருக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மாதத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது என்பது நம்பத்தகுந்த விஷயமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது போட்டி தொடரை தொடங்க போவதாக பேசுவது சற்று நம்பத்தகுந்த விஷயமாக இல்லை. அவர்களுக்கு வேறு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் இந்த போட்டி தொடரை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு மத்தியில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி மற்ற நாடுகளும் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியம். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.

    போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எல்லாம் முடித்து தனிமைப்படுத்திய பிறகும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்.

    தற்போதைய விதிமுறையின்படி பார்த்தால் பொது சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்துவார்கள். அத்துடன் அந்த டெஸ்ட் போட்டி பாதியில் ரத்தாகும். இதனால் அந்த தொடரை நடத்த எடுத்த அனைத்து ஏற்பாடுகளும் வீணாகும். போட்டியின்போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் ரத்து செய்யாமல் இருப்பதற்கான வழிமுறையை சுகாதாரத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறையினருடன் இணைந்து நாம் கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை தேவையில்லை என்றும் அந்த விஷயம் குறித்த தெளிவுதான் தேவை என்றும் தன்னுடன் கலந்துரையாடிய பி.வி.சிந்துவிடம் சத்குரு தெரிவித்தார்.
    கோவை:

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து. அவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார். அப்போது, விளையாட்டு, வெற்றி, தன்னம்பிக்கை, கூச்ச சுபாவம், அதிர்ஷ்டம், புறத்தோற்றம், நல்ல நாள் – கெட்ட நாள், ஆன்லைனில் பாடம் நடத்தும் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு விஷயங்களை மிகுந்த ஆர்வத்துடன் கேள்விகளாக முன் வைத்தார்.

    அதற்கு சத்குரு அவர்கள் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

    பல வருடங்களுக்கு, முன்னர் ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் வந்து, ‘சத்குரு நம் இந்திய ஹாக்கி அணியினர் சாம்பியன் டிராப்பிக்காக ஜெர்மனி செல்கின்றனர். நீங்கள் வந்து அவர்களுடன் சற்று உரையாட முடியுமா?’ என கேட்டார்.

    நான் அவர்களை பார்க்க சென்ற போது, ஒரு உளவியல் நிபுணர் ஒருவர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தார். அவர், “உங்கள் பெற்றோரின் கெளரவம் உங்கள் தோள்களில் உள்ளது, தேசத்தின் கெளரவம் உங்கள் தலை மீது உள்ளது” என்பது போன்ற அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தார்.

    நான் இந்த சித்ரவதையை பார்த்துவிட்டு, பின்னர் அவர்களிடம் பேசும் போது சொன்னேன். “உங்களுக்கு உண்மையிலேயே சிறப்பாக ஹாக்கி விளையாட தெரிந்தால், பந்தை கோல் அடிப்பது எப்படி என்று மட்டும் சிந்தியுங்கள். உங்கள் தேசம் பற்றியோ, பெற்றோர் பற்றியோ எல்லாம் கவலைபடாதீர்கள்” என்றேன்.

    இதேபோல், இன்னொரு உரையாடலில் “கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எப்படி வீழ்த்துவது?” என கேட்டார்கள்.  அப்போது நான் சொன்னேன்.  “பாகிஸ்தானை வீழ்த்துவதை இந்திய ராணுவம் பார்த்து கொள்ளும். நீங்கள் பந்தை மட்டும் அடித்தால் போதும்” என்றேன்.

    இது போன்ற உணர்ச்சிகளால் தான் பல முட்டாள்தனங்கள் நிகழ்கின்றன. பல விளையாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினால் வென்று விடலாம் என நினைக்கின்றனர். உண்மையில் அது சாத்தியமில்லை.

    நீங்கள் ஆனந்தமான, மகிழ்ச்சியான நிலையில் இருக்கும் போது தான் உங்களின் உடல் மனம், உணர்ச்சி, மூளை என அனைத்தும் அதன் உச்சபட்ச திறனுடன் செயல்படும். இதற்கு ஏராளமான அறிவியல்பூர்வ சான்றுகள் உள்ளன.

    வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. எப்போது உங்களுக்குள் தெளிவு இல்லையோ அப்போது நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். ஒரு விஷயத்தை உங்களால் முழுமையாக அது இருக்கும் விதத்திலேயே பார்க்க முடிந்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை தேவையில்லை. அந்த விஷயம் குறித்த தெளிவுதான் தேவை. அத்தகைய தெளிவு இருந்தால் நீங்கள் உங்களால் முடிந்த சிறந்ததை கட்டாயம் தானாகவே செய்வீர்கள்.

    என்றோ ஒரு நாள் நல்ல விஷயம் செய்பவர்கள் தான் நல்ல நாள், கெட்ட நாள் பற்றி பேசுவார்கள். ஒவ்வொரு நாளும் நல்ல விஷயங்களை செய்பவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான். நிறைய பேர் வாய்ப்பினால் தான் வெற்றிகரமான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்களின் சொந்த திறனால் அல்ல. தந்தையின் பணம் செல்வாக்கால் வெற்றிகரமாக இருக்கிறார்கள். தங்கள் திறமையால் வெற்றிகரமாக இருப்பவர்கள் இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை.

    இவ்வாறு சத்குரு பேசினார்.

    அந்த கலந்துரையாடல் வீடியோவை பார்க்க https://www.youtube.com/watch?v=rqWIsOK8Iz0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

    விளையாட்டு துறையைச் சேர்ந்த பி.வி.சிந்து மட்டுமின்றி, காவல்துறையைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் ரவி, அண்ணாமலை, சி.ஐ.ஐ, ஃபிக்கி, TiE, கிரெடாய் போன்ற தொழில் துறை அமைப்புகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள், டி.ஆர்.டி.ஓ உயர் அதிகாரிகள், ஹார்வர்டு, கொலம்பியா, ஸ்டான்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களின் புகழ்பெற்ற மருத்துவர்கள், மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி, தமிழ் திரைப்பட நடிகர் சந்தானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடன் சத்குரு லாக் டவுன் காலத்தில் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
    ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும் போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பந்து மீது எச்சிலை தேய்க்கக்கூடாது. கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டி தொடருக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மாதத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது என்பது நம்பத்தகுந்த விஷயமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது போட்டி தொடரை தொடங்க போவதாக பேசுவது சற்று நம்பத்தகுந்த விஷயமாக இல்லை. அவர்களுக்கு வேறு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் இந்த போட்டி தொடரை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு மத்தியில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி மற்ற நாடுகளும் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியம். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.

    போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எல்லாம் முடித்து தனிமைப்படுத்திய பிறகும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்து என்ன நடக்கும். தற்போதைய விதிமுறையின் படி பார்த்தால் பொது சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்துவார்கள். அத்துடன் அந்த டெஸ்ட் போட்டி பாதியில் ரத்தாகும். இதனால் அந்த தொடரை நடத்த எடுத்த அனைத்து ஏற்பாடுகளும் வீணாகும். போட்டியின் போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் ரத்து செய்யாமல் இருப்பதற்கான வழிமுறையை சுகாதாரத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறையினருடன் இணைந்து நாம் கண்டறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கோர உள்ளார்.
    வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்குவதில்லை. உள்ளூர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றபின் சில வீரர்கள் பிசிசிஐ-யின் அனுமதியோடு விளையாடி வருகின்றனர்.

    வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோர் டி10 லீக்கில் விளையாடியுள்ளனர். யுவராஜ் சிங் குளோபல் டி20 தொடரில் விளையாடிள்ளனர்.

    இந்நிலையில் பிரக்யான் ஓஜா டி20 மற்றும் தி ஹண்ட்ரெட் தொடர்களில் விளையாட அனுமதி கேட்க இருக்கிறார். 
    ‘‘இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் சில லீக்குகளில் விளையாட முயற்சி செய்து வருகிறேன். மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆனால் பிசிசிஐ-யின் அனுதியை பொருத்துதான் எல்லாம் உள்ளது. அதற்கான நேரம் வரும்போது பிசிசிஐ-யிடம் பேசுவேன். என்ன நடக்கும் என்பது தற்போது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிசிசிஐ-க்கு வேபண்டுகோள் வைப்பேன்’’ என்றார்.
    பந்து வீசும் ஆக்சனை துல்லியமாக கணிக்கும் இன்சமாம் உல் ஹக்கை என்னால் ஒருமுறை கூட அவுட்டாக்க முடியவில்லை என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் உலகில் யார் வேகமாக பந்து வீசக்கூடியவர் என்ற போட்டி சோயிப் அக்தர், பிரெட் லீ இடையே நடைபெற்றது. சோயிப் அக்தர் மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனைப் படத்தார். பிரெட் லீயும் 100 மைல் வேகத்தில் பந்து வீசினார்.

    இவர்கள் இருவரும் விளையாடிய காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவர்களது பந்தை எதிர்கொள்ள பயப்படுவார்கள். ஆனால், பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் மற்ற பேட்ஸ்மேன்களை விட விரைவாக பந்து வீசும் ஆக்சனை கணித்து விடுவார். அவரை என்னால் ஒருமுறை கூட அவுட்டாக்க முடியவில்லை என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்சமாம் உல் ஹக்தான். பிரெட் லீயை காட்டிலும் என்னுடைய பந்து வீச்சுமுறை சிக்கலானது. ஆனால், 10 ஆண்டுகளில் வலைப்பயிற்சியின் போது கூட இன்சமாம் உல் ஹக்கை என்னால் அவுட்டாக்க முடியவில்லை. மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சு ஆக்சனை அவரால் துல்லியமாக கணித்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

    சோயிப் அக்தர், இன்சமாம் உல் ஹக்

    மார்ட்டின் குரோவ் என்னுடைய பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி இருப்பார். அவர் ஒரு மேஜிக் பேட்ஸ்மேன். மிகவும் நேர்த்தியானவர். இந்திய பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட் மிகவும் ஸ்டைலான பேட்ஸ்மேன். அவர் ஒரு பந்தை அடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுக்கவில்லை என்றால், அவரது தடுப்பாட்டத்தை என்னுடைய பந்தால் ஊடுருவ முடியாது. கல்லீஸ் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். அவரை போன்ற ஸ்லிப் பீல்டரை கிரிக்கெட் உருவாக்கவில்’’ என்றார்.
    ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால் ஏப்ரல் 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 14-ந்தேதிக்குப் பிறகும் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மற்ற இடங்களில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளன. பொது போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவை, ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    இதனால் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால். அந்த காலக்கட்டத்தில் பிசிசிஐ போட்டியை நடத்தும் முடிவில் இருக்கிறது.

    இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    ‘‘இந்தியாவில், மத்திய அரசுதான் முடிவு எடுக்கும். கொரோனா தொற்று வைரஸ் தாக்கம் சூழ்நிலையில், ஒரு தேசமாக நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதை வைத்துதான் அந்த முடிவு இருக்கும்.

    நாம் விளையாட்டு போட்டிகளை நடத்த விரும்புவதால், நாட்டின் ஆரோக்கியத்தை ஆபத்தான நிலைக்கு தள்ளிவிட முடியாது. நம்முடைய கவனம் கொரோனாவை எதிர்த்து போரிடுவதுதான்’’ என்றார்.

    ஒருவேளை ஐபிஎல் தொடர் நடைபெறாமல் போனால் சுமார் 3800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை கிரிக்கெட் அணியின் ஷெஹன் மதுஷங்கா ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷெஹன் மதுஷங்கா. 25 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். வங்காளதேசத்திற்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

    நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஷெஹன் மதுஷங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தீவிர விசாரணைக்குப்பின் நேற்று வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஷெஹன் மதுஷங்காவை இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷெஹன் மதுஷங்கா வங்காளதேசத்திற்கு எதிராக 2018-ல் இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் காயத்தால் விளையாடாமல் உள்ளார். ஷெஹன் மதுஷங்கா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் இருந்து அவரை நீக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தாடியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கிண்டலடித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா ஊரடங்கால் இந்தியாவே கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தங்களது முடி மற்றும் தாடியை திருத்திக் கொள்ள முடியவில்லை.

    அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

    அதில் ‘நாம் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். இந்த நேரத்தில் மனதிற்கு பிடித்த வி‌ஷயங்களை செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனக்கு தாடி நன்றாக வளரக்கூடியது. எனவே அதை வீட்டிலே டிரிம் செய்து கொள்ள நினைத்தேன். இதுதான் எனது புதிய தோற்றம்.’ என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கிண்டலடிக்கும் வகையில் பதிலளித்திருந்தார். ‘இப்போது உங்களது தாடியின் நரை போய் விட்டதா? நீங்கள் ஷேவ் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.’

    பீட்டர்சன்னின் கிண்டலுக்கு விராட் கோலி நகைச்சுவையாக பதிலளித்தார். ‘உங்கள் டிக்டாக் வீடியோவை விட இது மேல்’ என்று தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் 8-ந்தேதி புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 4 முதல் 29-ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்கு தடை விதித்துள்ளதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த இந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்த சீசனில் போட்டிகள் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் ரூ. 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி டாம் ஹாரிசன் கூறியிருந்தார்.

    இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகிற 1-ந்தேதி முதல் விளையாட்டு போட்டிகளுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில், போட்டியை நடத்தலாம், கொரோனா வைரஸ் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, சில அறிவிப்புகள் இங்கிலாந்து கிரிக்கெட் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பயிற்சியை இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் தொடங்கினர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வருகிற 8-ந்தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணி 3 டெஸ்டில் விளையாடுகிறது. இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேயு கூறியதாவது:-

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் தங்களுடைய திட்டங்களின் இறுதி வடிவத்தில் உள்ளார்கள். இதனால் இங்கிலாந்து அரசின் ஒத்துழைப்பை அவர்களால் பெற முடியும்.

    இந்த மாத இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கும். இதன் மூலம் எங்களுடைய கிரிக்கெட் வாரியம் அனுமதி பெற்று ஜூன் தொடக்கத்தில் வீரர்கள் இங்கிலாந்து செல்வார்கள்.

    முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு 4 வார காலம் எங்களுக்குத் தேவைப்படும். எனவே, அடுத்த மாதம் ஜூன் 8-ந்தேதி எங்களுடைய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஜூலை 8, ஜூலை 16, ஜூலை 24 ஆகிய தேதிகளில் டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் நம்பர்-1 வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, சென்னையைச் சேர்ந்த இவர் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில், வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

    அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்காக அவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலா ஜனோடியிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

    கொரோனா வைரஸ் காரணமாக சென்னை திரும்பிய அவர் வீட்டில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டார். 4-வது கட்ட ஊரடங்கில் கிடைத்த தளர்வு நம்பிக்கை அளிக்க அவர் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

    இந்த நிலையில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு பவானி தேவியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா வாள்வீச்சு சம்மேளனம் இதை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கூறும் போது:-

    அர்ஜூனா விருதுக்கு பவானி தேவி பெயரை பரிந்துரை செய்துள்ளது. இதற்கான தகுதி அவருக்கு உள்ளது. இந்த விருது பவானி தேவிக்கு கிடைக்கும் பட்சத்தில் 2024, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது உத்தேசத் திட்டத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் பரவ காரணமாக அமையும் என்றார். பவானி தேவி உலக தரவரிசையில் சபரே பிரிவில் 45-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக சீனியர் சுழற்பந்து வீச்சாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் 2016-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் 39 வயதான ஹர்பஜன்சிங் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணிக்காக மீண்டும் விளையாட நான் தயாராக இருக்கிறேன். ஐ.பி.எல். போட்டி பவுலர்களுக்கு மிகவும் கடினமானதாகும். ஏனெனில் இந்த போட்டிக்கான மைதானம் சிறியதாகும். உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது என்பது மிகவும் சவாலானதாகும். ஐ.பி.எல். போட்டியில் அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால், சர்வதேச போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் தானே?. ஐ.பி.எல். போட்டியில் பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் நான் நன்றாக பந்து வீசுவதுடன் விக்கெட்டும் வீழ்த்துகிறேன். எனக்கு வயதாகி விட்டது என்பதால் தேர்வாளர்கள் என்னை அணித்தேர்வில் கருத்தில் கொள்வதில்லை.

    நான் உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. கடந்த 4-5 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து வருகிறேன். இருப்பினும் அவர்கள் என்னை கண்டு கொள்வதில்லை. சர்வதேச போட்டியில் எல்லா அணிகளிலும், ஐ.பி.எல், அணிகளை போல் தரமான வீரர்கள் கிடையாது. அனைத்து ஐ.பி.எல். அணிகளிலும் ‘டாப்-6’ வீரர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகளின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பேர்ஸ்டோ, வார்னர் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடிகிறது என்றால் சர்வதேச போட்டியிலும் அவர்களது விக்கெட்டை கைப்பற்ற முடியுமல்லவா?. இந்திய அணியில் விளையாடுவது என் கையில் இல்லை. தற்போதைய இந்திய கிரிக்கெட் அமைப்பில் ஒருவரும் உங்களிடம் இது பற்றி பேசமாட்டார்கள்’ என்று தெரிவித்தார். 
    ×