என் மலர்
விளையாட்டு
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன் என்ற குழப்பத்திற்கு சங்கக்கரா விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை:
2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது. இதில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை இந்திய அணி டோனி (91 ரன்), கவுதம் கம்பீர் (97 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. முன்னதாக இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. உலக கோப்பை வரலாற்றில் இரண்டு தடவை ‘டாஸ்’ என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். குழப்பத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த குமார் சங்கக்கரா விளக்கியுள்ளார். இந்திய வீரர் ஆர்.அஸ்வினுடன் நடந்த ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடலில் சங்கக்கரா கூறியதாவது:-
இறுதி ஆட்டம் அரங்கேறிய மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. இவ்வளவு கூட்டத்தை எங்கள் நாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லை. ஒரு முறை கொல்கத்தா ஈடன்கார்டனில் முதல் ஸ்லிப்பில் நின்ற வீரருடன் பேசுவது கூட கேட்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல் தான் வான்கடேயிலும் காணப்பட்டது.
பூவா, தலையா? கேட்பதற்காக இந்திய கேப்டன் டோனி நாணயத்தை மேலே சுண்டி விட்டார். ஆனால் ரசிகர்களின் கரவொலியால் நான் என்ன கேட்டேன் என்பது டோனிக்கு சரியாக கேட்வில்லை. நான் ‘பூ’ என்று சொன்னதாக அவர் கூறினார். ஆனால் நான் ‘தலை’ தான் கேட்டதாக கூறினேன். போட்டி நடுவரும் நான் தான் ‘டாஸ்’ வென்றது போல் கூறினார். ஆனால் டோனி அதை ஏற்கவில்லை. இதனால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இன்னொரு முறை ‘டாஸ்’ போடலாமே என்று டோனி சொன்னார்.
இதனால் 2-வது முறையாக ‘டாஸ்’ போடப்பட்டது. அதில் மறுபடியும் நான் கேட்டபடியே ‘தலை’ விழுந்தது. இது என் அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. நான் டாசில் தோற்று இருந்தால் அனேகமாக இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் அரைஇறுதியின் போது காயமடைந்ததால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அது தான் எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. சரியான கலவையில்அணியை தேர்வு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்திருந்தால் நாங்கள் முதலில் பந்து வீச்சைத் தான் தேர்ந்தெடுத்திருப்போம். அதனால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும் என்று உறுதியாக சொல்லமாட்டேன். இருப்பினும் அணியின் கலவையில் சமநிலை ஏற்பட்டிருக்கும். அவர் 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது எங்களுக்கு கூடுதல் பலமாகும்.
இந்த உலக கோப்பை போட்டியை திரும்பி பார்க்கும் போது நீங்கள் கேட்ச்சுகளை தவற விட்டது குறித்து பேசுவீர்கள். அது விளையாட்டில் ஒரு அங்கம். ஆனால் என்னை பொறுத்தவரை மேத்யூஸ் விலகலால் ஆடும் லெவனில் செய்யப்பட்ட மாற்றமே திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்வேன் என்று சங்கக்கரா கூறினார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐ.சி.சி.யின் போர்டு நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது.
ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த காணொலி கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை 2 ஆண்டுக்கு தள்ளி வைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.
20 ஓவர் உலக கோப்பை மற்றும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.சி.சி.யின் கூட்டத்தில் அதன் ரகசியத் தன்மை மீறப்படுவதாக பல வாரிய உறுப்பினர்கள் கவலை எழுப்பினர். ஐ.சி.சி. வாரிய விவகாரங்களின் புனிதத் தன்மையும், ரகசிய தன்மையும் மிக உயர்ந்த ஆளுமைக்கு ஏற்ப உறுதி செய்வதற்கு உடனடி கவனம் தேவை என்று உணரப்பட்டது.
இது தொடர்பாக ஐ.சி.சி நெறிமுறை அதிகாரி தலைமையில் சுதந்திரமான விசாரணையை தொடங்குவது என்று ஒருமனதாக உடன்பாடு செய்யப்பட்டது. ஜூன் 10-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து விஷயங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் போட்டி பாதிப்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலை, மறு திட்டமிடல் உள்பட அனைத்து விவாதங்களும் இந்தக் கூட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ.-யால் வரிவிலக்கு பெற முடியாத திறமையின்மை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வரிவிலக்கு இல்லை என்றால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை (2021) இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-
இதில் அச்சப்பட எதுவுமில்லை. நான் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஐ.சி.சி. மற்றும் மத்திய அரசிடம் எங்களது குழு தொடர்ந்து இணைப்பில் இருப்பதால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து ஜூன் 17-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி மற்றும் ஐரோப்பிய கால்பந்து ஆகியவை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது.
கால்பந்து போட்டிகளில் கிளப் போட்டி பிரசித்தி பெற்றது. ஐரோப்பா கண்டங்களில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும். கொரோனா தொற்று காரணமாக கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியில் கால்பந்து லீக் போட்டி தொடங்கியது. ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியை அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மீண்டும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்ட்டர்வில்லா - செக் பீல்டன் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி - ஆர்சனல் அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடத்தப்படும்.
இந்த சீசனை முழுமையாக நடத்தி முடிக்க பிரிமீயர் லீக் கிளப் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் மேலும் தாமதம் செய்யப்பட்டுள்ளது.

எம்எஸ் டோனி எப்போதும் கடைசி 2 நிமிடம்தான் டீம் மீட்டிங் நடத்துவார் என கிரிக்கெட் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
டோனியுடனான அனுபவங்கள் குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்தீவ் பட்டேல்,‘‘டோனி கடைசி 2 நிமிடங்களில்தான் அணியின் கூட்டத்தை நடத்துவார். 2008-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட கடைசி இரண்டு நிமிடத்தில்தான் கூட்டத்தை நடத்தினார்.
அவர் 2019-ம் இறுதிப் போட்டியிலும் அப்படித்தான் அணியின் கூட்டத்தை நடத்தியிருப்பார் என உறுதியாகக் கூறுகிறேன். டோனிக்கு தெளிவாகத் தெரியும், எந்த வீரரிடம் இருந்து என்ன வேண்டும் என்று’’ என்றார்.
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 302 ரன்களை குவித்தார். 2010-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பின்னர் கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் தான் டோனி மீது அதே மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால், ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்படுவதால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று முடிவு செய்கிறது.
ஐ.சி.சி.-யின் போர்டு நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகல் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 2 ஆண்டுக்கு இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி காணொலியில் பங்கேற்கிறார். ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைக்க பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைக்க பாகிஸ்தான் ஆதரவு கொடுக்காது. தற்போது மே மாதம் என்பதால் இன்னும் போதுமான காலம் இருக்கிறது. கொரோனா தொற்று குறித்து ஐ.சி.சி. உறுப்பினர்கள் இன்னும் காத்திருக்கலாம்.
இரண்டு மாதத்திற்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கலாம். தற்போது அவசரப்பட தேவையில்லை. 20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைப்பதை பாகிஸ்தான் எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஈஷான் மணி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்கிறார்
இந்தப் போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருக்கிறது. பெரும்பாலான வீரர்களின் மனநிலையும் இதே மாதிரியே இருக்கிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு திட்டமிட்டபடி வரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி விவரங்களை ஆஸ்திரேலியாவின் இரண்டு மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த டெஸ்ட் தொடர் டிசம்பர் 3-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 11-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல் - இரவாக நடத்தப்படுகிறது.
3-வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரபூர்வ போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த வார இறுதிக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவுடன் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்திய அணி ஒரே ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த இந்த இளம் சிவப்பு பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா 7 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை தோற்கடித்து இருந்தது. இதனால் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2015-ம் ஆண்டு இறுதியில் பகலிரவு டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணியினரை ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தி வைக்கலாம் என்று கூறப்பட்டது.
தற்போது தனிமைப்படுத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த மீடியாக்கள் தெரிவித்து உள்ளன.
மீராபாய் சானு பெயரை அர்ஜுனா விருதுக்கு இந்திய பளுதூக்குதல் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான மீராபாய் சானு ஏற்கனவே இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை 2018-ம் ஆண்டு பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவரது பெயரை அர்ஜுனா விருதுக்கு இந்திய பளுதூக்குதல் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. பளுதூக்குதலை சேர்ந்த ரஹலா வெங்கட் ராகுல், பூனம் யாதவ் ஆகியோரது பெயரும் அர்ஜுனா விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25 வயதான மீராபாய் சானு கூறுகையில், ‘கேல்ரத்னா விருது மிக உயரியது என்பதை அறிவேன். அதே நேரத்தில் ஆரம்பத்தில் நான் அர்ஜுனா விருதை தவற விட்டிருக்கிறேன். அதையும் பெற வேண்டும்.
எல்லா வீரர்களுக்கும் அர்ஜுனா விருது வாங்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும்’ என்றார்.
ஏற்கனவே கேல்ரத்னா விருதை பெற்ற ஒருவரது பெயரை பிறகு அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று பளுதூக்குதல் பொதுச்செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறுகையில், ‘இது சாத்தியமே’ என்று பதில் அளித்தார்.

தன்னுடைய கனவு அணிக்கு எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ள இயான் பிஷப், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் எனவும் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் கடந்த 10 ஆண்டில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு அணியை உருவாக்கியுள்ளார். அந்த ஒருநாள் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
இணையதளத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான உரையாடலில், தன்னுடைய தலைசிறந்த ஒருநாள் அணியின் விவரங்களை பகிர்ந்துகொண்டார். அதில் பிஷப் லெவனின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் இருவரும் 2019 உலகக்கோப்பையில் அதிக ரன்களை குவித்தவர்கள். இதற்கடுத்து 3-ம் நிலை வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் பிஷப். அதற்குக்காரணம் கோலியின் சீரான வேகத்தில் ரன் குவிக்கும் திறனே எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கடுத்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் அதிரடிக்கும் அதே சமயம் நிலையான ஆட்டத்துக்கும் சொந்தக்காரர்கள் என விளக்கமளித்துள்ளார்.
இதற்கடுத்தபடியாக ஆல் ரவுண்டர்களில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். பின்பு விக்கெட் கீப்பராக எம்எஸ் டோனியை தேர்வு செய்துள்ள பிஷப் அவரை கேப்டனாகவும் அறிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கேப்டனாக எம்எஸ் இருந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பிஷப் கனவு அணியின் பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், லசித் மலிங்கா, டேல் ஸ்டெயின் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பிஷப் அணியின் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கான் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த ஹர்பஜன் சிங் ‘‘இந்தியா குறித்தும், நம் பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தம் அளிக்கிறது. அதோடு அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும்படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தவிப்பவர்களுக்காகதான் நாங்கள் உதவினோம்.
நம் பிரதமர் கூட எல்லைகள், மதங்கள், சாதியை கடந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காகத்தான் நாங்கள் அவருக்கு உதவினோம். ஆனால் அந்த மனிதர் தற்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி அவதூராக பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை’’ என காட்டமாக தெரிவித்திருந்தார்.
மேலும் யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னாவும் அப்ரிடியின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஷாகித் அப்ரிடி ‘‘நான் எப்போதும் ஹர்பஜன் மற்றும் யுவராஜூக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். அவர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள். எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அவ்வளவுதான். இனிமேலும் இதுகுறித்து பேச விரும்பவில்லை’’ என தெரிவித்திருக்கிறார்.
இந்திய அரசிடம் வரி விலக்கு அனுமதி வாங்காவிடில் 2021 உலக கோப்பையை இந்தியாவில் இருந்து வேறு நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி மிரட்டல் விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
அதன்பின் அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஐசிசி மேற்கொள்ளும். டிக்கெட் விற்பனை, டிவி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஸ் போன்றவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிடத்தொகையை ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுக்கும் பகிர்ந்து அளிக்கும்.
பொதுவாக ஒரு நாடு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தால், அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு அரசிடம் பல்வேறு வரி விலக்கு சலுகைகளை பெறும். இதனால் வரியாக செலுத்தக்கூடிய கோடிக்கணக்கான பணம் ஐசிசி-க்கு மிச்சமாகும்.
இந்த முறை இந்திய அரசு வரி விலக்குக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் வரி விலக்குக்கு அனுமதி வாங்கி தந்தால் மட்டுமே போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்க எடுப்போம். இல்லை என்றால் வேறு நாட்டிற்கும மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பிசிசிஐ-க்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின்போது 2019 டிசம்பர் மாதம் வரை ஐசிசி அவகாசம் அளித்திருந்தது. அதன்பின் ஏப்ரல் 17-ந்தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பொது முடக்கம் அமலில் இருப்பதால் பிசிசிஐ மேலும் அவகாசம் கேட்கிறது. ஒருவேளை இந்த முறையில் அனுமதி வாங்க தவறினால் 2021 டி20 உலக கோப்பை தொடர் வேறு நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பிசிசிஐ ஜூன் 20 அல்லது ஜூன் 30-ந்தேதி வரை அவசாகம் கேட்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் பிரபல வீரர் ரபேல் நடால்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. இதனால் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்தார். தற்போது ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க ஸ்பெயின் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நடால் மல்லோர்காவில் உள்ள ரபேல் நடால் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
தான் பயிற்சிபெறும் வீடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:-
ஒவ்வொருவருக்கும் வணக்கம். தற்போது நான் ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதற்கு மகிழ்ச்சி. எனக்கு எதிராக குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட முடியும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இதுதான் முக்கியமான விஷயம்.
இவ்வாறு ரபேல் நாடல் தெரிவித்துள்ளார்.
ஐசிசி-யின் புதிய வழிகாட்டுதல்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும்போது களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பந்து மீது எச்சிலை தேய்க்கக்கூடாது. கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய போட்டி தொடருக்கு முன்பாக வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜூலை மாதத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு பயணம் செய்து டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது என்பது நம்பத்தகுந்த விஷயமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது போட்டி தொடரை தொடங்க போவதாக பேசுவது சற்று நம்பத்தகுந்த விஷயமாக இல்லை. அவர்களுக்கு வேறு எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாததால் இந்த போட்டி தொடரை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாளும் திறமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு மத்தியில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி மற்ற நாடுகளும் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியம். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு இந்த நிலைமை மாறும் என்று நம்புகிறோம்.
போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எல்லாம் முடித்து தனிமைப்படுத்திய பிறகும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் ஒரு வீரருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்.
தற்போதைய விதிமுறையின்படி பார்த்தால் பொது சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்துவார்கள். அத்துடன் அந்த டெஸ்ட் போட்டி பாதியில் ரத்தாகும். இதனால் அந்த தொடரை நடத்த எடுத்த அனைத்து ஏற்பாடுகளும் வீணாகும். போட்டியின்போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் ரத்து செய்யாமல் இருப்பதற்கான வழிமுறையை சுகாதாரத்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறையினருடன் இணைந்து நாம் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.