search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண் ரிஜிஜு
    X
    கிரண் ரிஜிஜு

    ஐபிஎல் 2020 சீசன் குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும்: கிரண் ரிஜிஜு சொல்கிறார்

    ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால் ஏப்ரல் 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 14-ந்தேதிக்குப் பிறகும் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மற்ற இடங்களில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளன. பொது போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவை, ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    இதனால் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால். அந்த காலக்கட்டத்தில் பிசிசிஐ போட்டியை நடத்தும் முடிவில் இருக்கிறது.

    இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    ‘‘இந்தியாவில், மத்திய அரசுதான் முடிவு எடுக்கும். கொரோனா தொற்று வைரஸ் தாக்கம் சூழ்நிலையில், ஒரு தேசமாக நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதை வைத்துதான் அந்த முடிவு இருக்கும்.

    நாம் விளையாட்டு போட்டிகளை நடத்த விரும்புவதால், நாட்டின் ஆரோக்கியத்தை ஆபத்தான நிலைக்கு தள்ளிவிட முடியாது. நம்முடைய கவனம் கொரோனாவை எதிர்த்து போரிடுவதுதான்’’ என்றார்.

    ஒருவேளை ஐபிஎல் தொடர் நடைபெறாமல் போனால் சுமார் 3800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×