என் மலர்
விளையாட்டு
விராட்கோலி செய்த உடற்பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது கிடையாது என வங்காளதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
வங்காளதேச ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் இணைய தள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், ‘2-3 வருடங்களுக்கு முன்பு விராட்கோலி உடற்பயிற்சி செய்வதை பார்த்து நான் வெட்கமடைந்தேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஏறக்குறைய எனது வயதையொட்டி இருக்கும் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை அதிகமாக மேற்கொண்டார். அவர் செய்த பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது கிடையாது. இந்தியா எங்களது அண்டை நாடு. அவர்கள் என்ன செய்கிறார்களோ, அது வங்காளதேசத்திலும் எதிரொலிக்கும்.
இந்தியாவில் என்ன நடைபெறுகிறதோ? அதனை தான் நாங்களும் பின்பற்றுவோம். உடல் தகுதி குறித்து இந்தியா எப்பொழுது தனது அணுகுமுறையை மாற்றி கொண்டதோ?, அது வங்காளதேசத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் அணியை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரஹிம் உடல் தகுதியை சிறப்பாக வைத்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிங்ஸ்டன்:
அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவரை கடந்த வாரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது நடந்த பிரச்சனையில் வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஒருவர் முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில் அந்த கருப்பு இனத்தவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். போலீஸ் அதிகாரியின் காலுக்கு அடியில் சிக்கியபடி கருப்பு இனத்தவர் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் கொடூர மரணத்துக்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லும் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கருப்பு இன மக்களின் வாழ்க்கையும் மற்றவர்களை போன்றது தான். கருப்பு இனமக்களை முட்டாள்களாக நினைக்க வேண்டாம். இனவெறி பிடித்தவர்களுக்காக வேலை செய்வதை கருப்பு இனமக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். நான் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். நான் சென்ற பல இடங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் கேலி, கிண்டல் என்று இனவெறி தாக்குதலை சந்தித்து இருக்கிறேன். இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் இருக்கிறது. கருப்பு சக்தி வாய்ந்தது. கருப்பு எனது பெருமை’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமியும் இனவெறிக்கு எதிராக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், ‘கருப்பு இன சகோதரனின் கழுத்தில் இனவெறியுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து அழுத்தும் வீடியோவை பார்த்த பிறகும் கிரிக்கெட் உலகம் இந்த அநீதிக்கு எதிராக நிற்கவில்லை என்றால் இனவெறி விஷயத்தில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தான் கருத வேண்டியது இருக்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் என்னை போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லையா?. என்னை போன்றவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் பேசமாட்டீர்களா?. இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. இந்த பிரச்சினை தினந்தோறும் நடக்கிறது. தற்போது அமைதியாக இருக்கும் தருணம் அல்ல. இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகினர் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், கருப்பு இனத்தவரின் மரணத்தை கண்டித்து டுவிட்டரில் கருத்து பகிர்ந்து இருக்கிறார். ‘இதுபோன்ற நேரத்தில் அமைதியாக இருப்பதும் துரோகம் தான். உங்களுக்கு நடக்கவில்லை என்பதற்காக இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது’ என்று அவர் கூறியுள்ளார்.
‘பார்முலா 1’ கார் பந்தய சாம்பியனான லீவிஸ் ஹாமில்டனும் (இங்கிலாந்து) இந்த சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். அத்துடன் அவர் பார்முலா 1 அமைப்பினர் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக இந்த முறை டோனி தயாரான விதமே வேறுவிதமாக இருந்தது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது:-
கொரோனா காரணமாக 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில் பெரும்பாலானோர் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டோம். இதில் கேப்டன் டோனியும் கலந்து கொண்டார். தொடக்கத்தில் மைதானத்தில் சிறிய அளவில் பயிற்சி எடுத்த டோனி, உடற்பயிற்சி கூடத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதன் பிறகு களத்திலும் தீவிரம் காட்டினார்.
தினமும் 2 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது ஷாட்டுகள் மிக நேர்த்தியாக இருந்தது. அவரது உடல்தகுதியும் பிரமாதம். நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி எடுத்தும் அவர் சோர்வடையவில்லை. இந்த முறை அவர் தயாரான விதமே வேறுவிதமாக இருந்தது. பல ஆண்டுகளாக அவருடன் நான் இந்திய அணியிலும், ஐ.பி.எல். அணியிலும் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த முறை எல்லாமே வித்தியாசமாக தெரிந்தது. விரைவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க முடியும் என்று நம்புகிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரும் டோனி எந்த அளவுக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறார் என்பதை களத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு ரெய்னா கூறினார்.

இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான கேல் ரத்னா, அர்ஜுனா ஆகிய விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயரை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும்.
இந்நிலையில், இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஆக்கி சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார்.
2016-ல் அர்ஜூனா விருதும், 2020-ல் பத்மஸ்ரீ விருதும் வென்ற ராணி ராம்பால் தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூலை 8-ந்தேதி தொடங்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது.
வெஸ்ட் இண்டீஸ் கிரக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருந்தது. கொரோனாவால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இந்தத் தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஜூன் 8-ந்தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஜூலை 28-ந்தேதி தொடர் முடிவடைகிறது.
போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் நடக்கிறது. ஜூலை 8-ந்தேதி இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கப்பட்டால் கொரோனா பாதிப்பிற்குப்பின் தொடங்கும் முதல் கிரிக்கெட் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

மத்திய அரசால் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும். அதற்கு அடுத்தபடியாக வீரர்-வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விருதுக்கு பரிந்துரை செய்வதற்கான கடைசி தினம் நாளை ஆகும்.
கேல் ரத்னா விருதுக்கு இதுவரை 6 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், குத்துச்சண்டை வீரர்கள் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 நாட்கள் இருப்பதால் மேலும் சில பெயர்கள் பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி நிலவுவதால் கேல் ரத்னா விருது யாருக்கு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் வீரர்-வீராங்கனைகள் சாதித்த அளவை அடிப்படையாக வைத்து தேர்வு நடைபெறும்.
ரோகித் சர்மா கடந்த ஆண்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இருக்கிறார். இதனால் அவருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நீரஜ் சோப்ரா தொடர்ந்து 3-வது முறையாகவும், வினேஷ் போகத் 2-வது தடவையாகவும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991-1992-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இந்த விருதைப் பெற்றார். கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் பார்த்தவரையில் ஏபி டி வில்லியர்ஸ்-தான் சிறந்த பீல்டர் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ். அவர் உலகின் தலைசிறந்த பீல்டராக ஜொலித்தார். இந்த நிலையில் உலகின் சிறந்த பீல்டர் டி வில்லியர்ஸ் என்று ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் உரையாடலில் அவர் கூறியதாவது:-
உலகின் மிகச்சிறந்த பீல்டர் யார் என்று கேட்கிறீர்கள். டி வில்லியர்ஸ் ஒரு விக்கெட் கீப்பர். ஸ்லிப் பீல்டர். மிட் ஆப், லாங் ஆன் என எல்லா இடங்களிலும் சிறப்பாக பீல்டிங் செய்வார். உலகின் மிக சிறந்த பீல்டர் அவர்தான்.

இவ்வாறு ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு மே 23-ம்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
அவரை தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் இடமபெற வைத்து 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் மைதானத்தின் எல்லா இடங்களிலும் பீல்டிங் செய்பவராக முதலில் நான் பார்த்தது ஆண்ட்ரூ சைமன்ட்சைதான். பலமான புஜம் உள்ளதால் பவுண்டரி எல்லைக் கோட்டின் அருகே நின்றும் பீல்டிங் செய்வார்.

பெரிய மனிதரான சைமண்ட்ஸ் பாய்ந்து பந்தை பிடிப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படும். என் காலத்துக்குப் பிறகு பார்த்த சிறந்த பீல்டராக டி வில்லியர்சை சொல்வேன். ஆட்டத்தை நன்கு கவனிப்பார். பந்தை துரத்தி நன்றாக ஓடுவார். பேட்ஸ்மேனாகவும் உள்ளதால் ஆட்டத்தின் போக்கை அவரால் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு மே 23-ம்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
அவரை தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் இடமபெற வைத்து 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என்று ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.
சிட்னி:
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. வருகிற 10-ந் தேதி டெலிகான்பரன்ஸ் மூலம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போர்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த போட்டியை நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டால், அந்த காலகட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக மார்ம் மாதம் மத்தியில் இருந்து வீட்டிலேயே முடங்கி கிடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவன் சுமித், சிட்னி மைதானத்தில் நேற்று தனது பயிற்சியை தொடங்கினார். இதேபோல் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பூட்டிய மைதானத்தில் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தங்கள் பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள். பயிற்சிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒருநாள் அல்லது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது நாட்டுக்காக எப்பொழுது விளையாடுகிறோமோ? அது தான் உச்சபட்சம் என்று நான் கருதுகிறேன். எனவே நான் உலக கோப்பை போட்டியில் விளையாடவே முன்னுரிமை அளிப்பேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், ஐ.பி.எல். போட்டி நடந்தால் அந்த போட்டியில் விளையாட நான் தயார். உள்ளூர் போட்டிகளில் ஐ.பி.எல். போட்டி சிறப்பானதாகும்.
தற்போதைய சூழ்நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை. வீரர்களான எங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ? அதன்படி செயல்பட்டு வருகிறோம். உலக கோப்பை போட்டி குறித்து தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சிந்திக்கவில்லை. நிபுணர்கள் மற்றும் அரசு சொல்லும் அறிவுரையின் படி நாங்கள் நடப்போம். கிரிக்கெட்டில் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புபவன். பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதித்து எடுக்கப்பட்டு இருக் கும் முடிவு சரியானது கிடையாது. இதனை சமாளிக்க மாற்று வழிகளை கண்டுபிடிப்பது என்பது கடினமானது தான். இருப்பினும் இதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொறுப்பாகும். முதல்முறையாக தொடங்கப்பட்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை தொடர வேண்டும். அடுத்த ஆண்டில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. வருகிற 10-ந் தேதி டெலிகான்பரன்ஸ் மூலம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போர்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த போட்டியை நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டால், அந்த காலகட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக மார்ம் மாதம் மத்தியில் இருந்து வீட்டிலேயே முடங்கி கிடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவன் சுமித், சிட்னி மைதானத்தில் நேற்று தனது பயிற்சியை தொடங்கினார். இதேபோல் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பூட்டிய மைதானத்தில் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தங்கள் பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள். பயிற்சிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை. வீரர்களான எங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ? அதன்படி செயல்பட்டு வருகிறோம். உலக கோப்பை போட்டி குறித்து தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சிந்திக்கவில்லை. நிபுணர்கள் மற்றும் அரசு சொல்லும் அறிவுரையின் படி நாங்கள் நடப்போம். கிரிக்கெட்டில் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புபவன். பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதித்து எடுக்கப்பட்டு இருக் கும் முடிவு சரியானது கிடையாது. இதனை சமாளிக்க மாற்று வழிகளை கண்டுபிடிப்பது என்பது கடினமானது தான். இருப்பினும் இதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொறுப்பாகும். முதல்முறையாக தொடங்கப்பட்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை தொடர வேண்டும். அடுத்த ஆண்டில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
டோனி இந்த வருடம் கிரிக்கெட் விளையாடப்போவதில்லை எனவும் நாங்கள் இனிவரும் நாட்களை எங்களுக்காகத் திட்டமிட்டிருக்கிறோம் எனவும் டோனியின் மனைவி சாக்ஷி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய சாக்ஷி டோனி, அவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான டோனி குறித்தும் அவரின் ஊரடங்கு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது ‘‘டோனி குறித்த விஷயங்கள் எங்கிருந்துதான் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மீது ஊடக வெளிச்சம் இருக்கும்போது நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை முன் வைப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட டோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. எது நடந்தாலும் சரி எனக்கு என் தொலைபேசிக்கு அழைப்பும் மற்றும் குறுஞ்செய்தியும் வந்த வண்ணம் உள்ளன.
நாங்கள் சிஎஸ்கேவை மிகவும் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா எனத் தெரியவில்லை. எனது மகளும் சிஎஸ்கே குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருப்பினும் என்ன நடந்தாலும் இந்த வருடம் கிரிக்கெட் இல்லை. காரணம் நாங்கள் முன்னதாகவே வரும் நாட்களை எங்கே செலவு செய்யப்போகிறோம் என்பது குறித்துத் திட்டமிட்டு விட்டோம்.

இந்த ஊரடங்கு நாட்களில் டோனியின் மன அழுத்தத்தை வீடியோ கேம்கள்தான் பெருமளவு குறைத்தன. குறிப்பாக பப்ஜி. எங்களது படுக்கைகளை பப்ஜிதான் ஆக்கிரமித்துள்ளது’’ என்றார்.
டோனிக்கு இருசக்கர வாகனங்கள் மீது இருக்கும் ஈர்ப்பு பற்றிக் கேட்டபோது ‘‘இருசக்கர வாகன உபகரணங்களை வாங்கி அவரே அதை வடிவமைக்கிறார். அப்போது ஏதாவது ஒரு பகுதியைப் பொருத்த மறந்துவிட்டால், அடுத்த நாள் மொத்த உபகரணங்களையும் கழற்றிவிட்டு மீண்டும் அதனை வடிவமைப்பார்’’ என்றார்.

கிரிக்கெட் இருந்தால் இருக்கும். ஆனால் டோனி வரும் நாட்களை மலையேற்றத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். நாங்கள் உத்தரகாண்ட் செல்ல இருக்கிறோம். அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது மட்டுமன்றி சாலை பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த ஊரடங்கு நாட்களில் டோனியின் மன அழுத்தத்தை வீடியோ கேம்கள்தான் பெருமளவு குறைத்தன. குறிப்பாக பப்ஜி. எங்களது படுக்கைகளை பப்ஜிதான் ஆக்கிரமித்துள்ளது’’ என்றார்.
டோனிக்கு இருசக்கர வாகனங்கள் மீது இருக்கும் ஈர்ப்பு பற்றிக் கேட்டபோது ‘‘இருசக்கர வாகன உபகரணங்களை வாங்கி அவரே அதை வடிவமைக்கிறார். அப்போது ஏதாவது ஒரு பகுதியைப் பொருத்த மறந்துவிட்டால், அடுத்த நாள் மொத்த உபகரணங்களையும் கழற்றிவிட்டு மீண்டும் அதனை வடிவமைப்பார்’’ என்றார்.
ஜேக் கல்லீஸ், சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங்கை ரசித்து பார்ப்பேன் என்று கிரிக்கெட் நடுவர் இயன் குட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் நடுவர் இயன் குட். ஐ.சி.சி.யின் நடுவராக பணியாற்றிய இவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் பார்த்த வகையில் ஜேக் கல்லீஸ் (தென் ஆப்பிரிக்கா) சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), விராட் கோலி (விராட் கோலி) ஆகிய 3 பேர் தான் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஜேக் கல்லீசின் பேட்டிங்கை பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மிக மிக சிறந்த வீரர் ஆவார்.

ரிக்கி பாண்டிங்கின் (ஆஸ்திரேலியா) மிகச்சிறந்த பேட்டிங்கை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச்சிறந்த கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு அவர் பெருமைச் சேர்த்துள்ளார்.
இவ்வாறு இயன் குட் கூறி யுள்ளார்.
இயன்குட் 74 டெஸ்ட், 170 ஒருநாள் போட்டி மற்றும் 37 இருபது ஓவர் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இவரது நடுவர் பணி அனைவராலும் பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நடுவர் பணிக்கு வந்தார். கடந்த ஆண்டு நடுவர் பொறுப்பிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார்.

தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அபாரமாக ஆடுபவர்கள். எனவே இந்த மூன்று பேரின் பேட்டிங் எனக்கு பிடித்தமான ஒன்றாகும்.

விராட் கோலி ஒரு வேடிக்கையான மனிதர். அவர் என்னைபோல் ஓரிரு முறை பேட்டிங் செய்திருக்கிறார். அவர் ஒரு கவர்ச்சிகரமானவர். தெண்டுல்கரின் பேட்டிங் சாயல் அவரிடம் இருக்கிறது. தெண்டுல்கரை போலவே அவருக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

ரிக்கி பாண்டிங்கின் (ஆஸ்திரேலியா) மிகச்சிறந்த பேட்டிங்கை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச்சிறந்த கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு அவர் பெருமைச் சேர்த்துள்ளார்.
இவ்வாறு இயன் குட் கூறி யுள்ளார்.
இயன்குட் 74 டெஸ்ட், 170 ஒருநாள் போட்டி மற்றும் 37 இருபது ஓவர் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இவரது நடுவர் பணி அனைவராலும் பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நடுவர் பணிக்கு வந்தார். கடந்த ஆண்டு நடுவர் பொறுப்பிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார்.
எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் செர்பியாவில் பிறந்த மாடல் அழகி நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு நிச்சய தார்த்தம் நடந்தது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தபோது, ஹர்திங் பாண்ட்யா- நடாஷா ஜோடி மும்பையில் உள்ள வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா விரைவில் தந்தையாகிறார். இதை அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நானும், நடாஷவும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது இன்னும் சிறப்பாக அமையவுள்ளது. எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் புதிய பரிணாமத்திற்கு செல்ல காத்திருக்கிறோம்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
விரைவில் தந்தையாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி, சாஹல், மயங்க் அகர்வால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த மங்கை வினேஷ் போகத், தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு கேல்ரத்னா விருது வழங்கக்கோரி விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரை செய்துள்ளன.
புதுடெல்லி:
விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான ராஜீவ்காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கின்றன. இதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும்.இந்த நிலையில் இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பது என்று தேசிய மல்யுத்த சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ‘மல்யுத்தத்தில் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கு எங்களது ஒருமித்த தேர்வு வினேஷ் போகத் தான். அவரது பெயரை விளையாட்டு அமைச்சத்துக்கு இன்று அனுப்பி வைப்போம். அர்ஜூனா விருதுக்குரியவர்களின் பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு நிறைய விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதில் தகுதியான விண்ணப்பத்தை சம்மேளன தலைவர் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புவார்’ என்று தேசிய மல்யுத்த சம்மேளன செயலாளர் வினோத் தோமர் தெரிவித்தார்.
வினேஷ் போகத் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறார். அரியானாவைச் சேர்ந்த 25 வயதான வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவுக்கான தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆண்டின் தொடக்கத்தில் ரோம் ரேங்கிங் சீரிஸ் தொடரில் தங்க மகுடம் சூடினார். அதன் பிறகு டெல்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். மல்யுத்தத்தில் தொடர்ந்து அசத்தி வரும் அவருக்கு இந்த தடவை கேல்ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் ருசித்தவரான மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஏற்கனவே 2016-ம் ஆண்டு கேல்ரத்னா விருதை பெற்றிருக்கிறார். சமீப காலமாக அவர் வெகுவாக தடுமாறி வரும் நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கும்படி விண்ணப்பம் அனுப்பி உள்ளார். ஆனால் அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது சந்தேகம் தான்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை தொடர்ந்து 3-வது ஆண்டாக கேல்ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனான 22 வயதான நீரஜ் சோப்ரா முழங்கை காயம் காரணமாக 2019-ம் ஆண்டு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் ஆகியோரது பெயரும் கேல்ரத்னா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.