என் மலர்
விளையாட்டு
கேப்டன் பதவி தொடர்பாக கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக உள்ளார். விராட் கோலியின் சுமையை குறைக்கும் வகையில் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் அதுல் வாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் உசேன் கூறும்போது, கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க கோலி விரும்பமாட்டார் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் கேப்டன் பதவி தொடர்பாக விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே போட்டியில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலின்போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவருமே மிகவும் சிறப்பான வீரர்கள். போட்டி அன்று நன்றாக அமைந்துவிட்டால் இருவருமே அபாரமாக ஆடி அணியை வெற்றிபெற வைப்பவர்கள்.
எனக்குத் தெரிந்தவரை இருவருக்கும் இடையே எந்தவிதமான போட்டியும் இல்லை. அவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளில் கவனமாகவும், சிறப்பாகவும் தெளிவுடனும் பணியாற்றி வருகிறார்கள்.
தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு தாமதமாகவே கிடைத்தது. 2013-க்கு பிறகே அவர் தொடக்க வரிசையில் ஆடினார். அதற்கு முன்பு வரை 5,6, 7-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார்.
வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டார். பந்தை யூகிப்பதில் தடுமாறினார். ஆனால் தற்போது மிகச்சிறந்த வீரராக உருவாகி இருக்கிறார்.
இவ்வாறு சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.

‘மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது’ என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருப்பவருமான கர்நாடகாவை சேர்ந்த 34 வயதான ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இணையதள உரையாடலின் போது கூறியதாவது:-
2009 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நான் தினசரி மனஅழுத்த பிரச்சனையை எதிர்கொண்டேன். அத்துடன் தற்கொலை எண்ணமும் தொடர்ச்சியாக தோன்றியது. அந்த மாதிரியான நேரங்களில் நான் கிரிக்கெட் பற்றி கூட சிந்திப்பது கிடையாது. அப்போது எனது மனதில் கிரிக்கெட் தொலைதூரத்துக்கு போய் விடும். இன்றைய நாளை எப்படி சமாளித்து அடுத்த நாளுக்கு எப்படி செல்லப் போகிறேன் என்பதையும், என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்பதையும் யோசித்து கொண்டே இருப்பேன். ஆனால் கிரிக்கெட் இது போன்ற எண்ணங்களை எனது மனதில் இருந்து விலக்கி வைத்தது. கிரிக்கெட் விளையாடாத நேரங்களில் மனரீதியிலான குடைச்சல்களை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
சில நாட்களில் எனக்கு நானே சிந்தித்து கொண்டு இருக்கும் போது, மூன்று வரை எண்ணி முடித்தவுடன் ஓடி சென்று பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விடலாம் என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால் அவ்வாறு செய்யவிடாமல் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்தியது. அந்த சமயத்தில் என்னை நானே ஒரு மனிதனாக புரிந்து கொண்டு செயல்படுவதற்கான முயற்சியை தொடங்கினேன்.
அடுத்து வாழ்க்கையில் எனக்கு தேவையான மாற்றங்களை கொண்டுவர வெளிநபர்களின் உதவியை நாடினேன். ஏதோ ஒரு காரணத்தால் எனது மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரமுடியவில்லை. அதனால் வலைப்பயிற்சியில் கடினமாக பயிற்சி மேற்கொண்டாலும், போட்டிகளில் ஜொலிக்க இயலவில்லை.
எனக்குள் இருக்கும் பிரச்சனையை என்னால் முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் நமக்குள் இருக்கும் தவறை நாம் ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டியது உண்மையிலேயே முக்கியமானதாகும். தவறை ஏற்க மறுக்கும் உணர்வு எல்லோருக்கும் இருக்கும். அதிலும் குறிப்பாக தங்களுடைய மனரீதியான பிரச்சனைகளை ஒத்துக்கொள்ள கஷ்டப்படும் ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம் இருக்கும். சில சமயங்களில் எதிர்மறையான எண்ணங்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்று நான் நினைக்கிறேன். அது வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை சந்தித்து நாம் மேலும் வளர உதவிகரமானதாக இருக்கும். எனது எதிர்மறையான எண்ணங்கள் குறித்து நான் வருத்தப்பட்டது கிடையாது. ஏனெனில் அவை என்னை நேர்மறையாக மேம்பட உதவி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் டி20 தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் இதுவரை தொடங்கவில்லை. தொடங்கும் தேதியும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தற்போது வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டில் ஐபிஎல் நடப்பது ஒன்றும் புதிதல்ல எனவும், ஏற்கெனவே 2009-ம் தென்னாப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் நடத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தவரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக பேட்மிண்டன் பெடரேசன் முக்கியமான தொடர்களின் போட்டி ஆட்டவணையை மாற்றி அமைத்தது. அதன்படி ஐதராபாத் ஓபன் பேட்மிண்டன் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் பேட்மிண்டன் தொடரை நடத்த சாத்தியமில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தியுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம் என டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் தேதி கூடி ஆலோசித்தது. அதில் டி20 உலகக் கோப்பையை எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. உலகக் கோப்பைத் தொடர் 2022-ல்தான் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானது. இதற்கு ஐசிசி தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஸ்போர்ட் ஸ்கீரின் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசுகையில், ‘‘நியூசிலாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. நியூசிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா எச்சரிக்கை வழிமுறை 1-க்கு மாறலாம் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.
இதன்மூலம் சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்தில் நடத்தலாமே? இது ஒரு யோசனைதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி வேண்டுமென்றே தோல்வி அடைந்ததாக பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்த அப்துல் ரசாக், ‘‘நாங்கள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தோம், எங்கள் அனைவருக்கும் அதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் அவரது நிலைப்பாட்டில் பந்து வீசவில்லை. ரன்களை அதிகம் கொடுக்கிறார்.
எங்களுக்கு சந்தேகமே இல்லை. பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே, இங்கிலாந்துடன் இந்தியா வேண்டுமென்றே தோற்றது எனவும் இதற்காக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் எனவும்’’ வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அரையிறுதியில் பாகிஸ்தான் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை என சில மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் தன்னிடம் கூறியதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹ்மது தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை பயணம் குறித்து தான் எழுதிய புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். அதில், இங்கிலாந்து உடனான போட்டியில் இந்திய வீரர் தோனியின் விளையாட்டு இலக்கில்லாமல் இருந்ததாகவும், ரோகித்- கோலியின் பார்ட்னர்ஷிப் மர்மமாக இருந்ததாகவும் அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கில் விளையாடிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கிய ஹர்திக் பாண்ட்யா, எம்எஸ் டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 12 சீசன் நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளை வைத்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறந்த லெவனை (11 பேர்) தேர்வு செய்துள்ளார்.
டெலிவிஷன் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் நடந்த உரையாடலின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ஹர்திக் பாண்ட்யா தனது சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனியை தனது ஐ.பி.எல். சிறந்த லெவனின் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஏனென்றால் அவர் விளையாடும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா ஐ.பி.எல். கோப்பையை 4 முறை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் அவரை கேப்டனாக தேர்வு செய்யாமல், டோனியை கேப்டனாக செய்து இருக்கிறார்.
ஹர்திக் பாண்ட்யாவின் அணியில் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக உள்ளனர்.
பஞ்சாப் அணிக்காக விளையாடும் கெய்ல் 326 சிக்சர்கள் அடித்து, ஐ.பி.எல்.லில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக உள்ளார். ரோகித் சர்மா 4,898 ரன்கள் (188 ஆட்டம்) எடுத்து ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 3-வது இடத்தில் உள்ளார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சஸ் அணியின் கேப்டனான விராட் கோலி 3-வது வரிசைக்கும், அதே அணியில் ஆடும் டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 4-வது வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விராட் கோலி 177 ஆட்டத்தில் 5,412 ரன்கள் எடுத்து ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டி வில்லியர்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
5-வது வரிசைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். அவர் ஐ.பி.எல்.லில் 5,368 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களில் 2-வது இடத்தில் உள்ளார்.
அதற்கு அடுத்த வரிசையில் விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டோனி 209 சிக்ஸர்கள் அடித்து 3-வது இடத்தில் இருக்கிறார். 7-வது வரிசைக்கு ஹர்திக் பாண்ட்யா அவரையே தேர்வு செய்து இருக்கிறார்.
சுழற்பந்து வீரர்களில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரீன் (கொல்கத்தா அணி), ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் (ஐதராபாத்) ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும், மலிங்கா (இலங்கை) பும்ரா ஆகியோரை அவர் வேகப்பந்து வீச்சுக்கு தேர்வு செய்துள்ளார்.
இதில் மலிங்கா ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் ஆவார். அவர் 172 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்த ஐ.பி.எல். சிறந்த லெவன் வருமாறு:-
கிறிஸ் கெய்ல், ரோகித் சர்மா, வீராட் கோலி, டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, டோனி, (கேப்டன், விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்ட்யா சுனில் நரீன், ரஷித் கான், பும்ரா, மலிங்கா.

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கு பங்களிப்பு அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருது வழங்கப்படுவது வாடிக்கையாகும்.
தேசிய விளையாட்டு விருதுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆனால் கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான பணிகள் காலதாமதமாக கடந்த மாதம் (மே) முதலாவது வாரத்தில் தான் தொடங்கியது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்புகள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், அரசு விளையாட்டு ஆணையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் பரிந்துரையுடன் கூடிய தங்களது நகல் விண்ணப்ப படிவத்தை நேற்றுக்குள் (ஜூன் 3-ந்தேதி) தங்களுக்கு கிடைக்கும் வகையில் இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தங்களது வீரர், வீராங்கனைகளின் பெயரை விருதுக்கு பரிந்துரை செய்துள்ளன.
இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த சமயத்தில் வீரர்கள் விளையாட்டு அமைப்புகளிடம் பரிந்துரை கடிதம் பெற்று விண்ணப்பத்தை அனுப்புவதில் சிரமம் இருப்பதால், வீரர்களே தங்களது சாதனை விவரத்தை குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் விருதுக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வீரர், வீராங்கனைகள் செய்த சாதனைகள் இந்த ஆண்டுக்கான விருது தேர்வில் கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் இங்கிலாந்து சென்று விளையாட மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. கொரோனாவால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொண்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்தது.
இந்நிலையில் 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மையர், கீமோ பால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். மூன்று பேரும் உயிர் பாதுகாப்பு சூழலை காரணம் காட்டி இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
‘‘மூன்று பேரும் இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ள அவர்களிடம் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. கொரோனாவால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொண்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்தது.
இதனால் நேற்று இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது. ஜூன் 8-ந்தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி, ஜூலை 28-ந்தேதி வரை மூன்று போட்டிகள் நடைபெறும் என இங்கிலாந்து அறிவித்தது. போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
‘‘மூன்று பேரும் இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ள அவர்களிடம் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
பொது முடக்கக் காலத்தில் தனது மகனிடம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் முடிவெட்டிக்கொண்டார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முடி திருத்தும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடி திருத்தம் செய்வதை பொது முடக்கக் காலத்தில் ஊக்குவித்து வருகின்றனர்.
அண்மையில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தானே வீட்டில் தாடியைத் திருத்தம் செய்துகொண்டதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், தன் மகனிடம் முடிவெட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தவான், ‘‘நீங்களும் என் மகன் போல உங்கள் வீட்டில் இருக்கும் செல்லக் குழந்தைகளுடன் முடித்திருத்தும் செய்துகொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷிகர் தவான் தனது மகனுடன் டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் லாரா நகைச்சுவை எமோஜி போட்டிருந்தார். அதை ஷிகர் தவானும் லைக் செய்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி புரிந்தார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் தனது மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.
முகமது ஷமியின் இந்த செயலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாராட்டியுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரணத்துக்கு நிதி உதவி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருந்தார்கள்.

இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் உயிர் இழந்தார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
கறுப்பின மக்கள்
இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:-
மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் உலகம் முழுக்க சுற்றியுள்ளேன். நான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்பதால், என் மீதும் இன வெறுப்பை மறைமுகமாகவும, நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள்.
இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு. அணி வீரர்களுக்குள் கறுப்பு இனத்தவர் என்பதால், கடைசி வாய்ப்புதான் கிடைக்கும். கறுப்பு சக்திமிக்கது. கறுப்பு எனது பெருமை.