என் மலர்

  செய்திகள்

  ஏபி டி வில்லியர்ஸ்
  X
  ஏபி டி வில்லியர்ஸ்

  உலகின் சிறந்த பீல்டர் டி வில்லியர்ஸ் ஆவார்: ஜான்டி ரோட்ஸ் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நான் பார்த்தவரையில் ஏபி டி வில்லியர்ஸ்-தான் சிறந்த பீல்டர் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
  தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ். அவர் உலகின் தலைசிறந்த பீல்டராக ஜொலித்தார். இந்த நிலையில் உலகின் சிறந்த பீல்டர் டி வில்லியர்ஸ் என்று ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் உரையாடலில் அவர் கூறியதாவது:-

  உலகின் மிகச்சிறந்த பீல்டர் யார் என்று கேட்கிறீர்கள். டி வில்லியர்ஸ் ஒரு விக்கெட் கீப்பர். ஸ்லிப் பீல்டர். மிட் ஆப், லாங் ஆன் என எல்லா இடங்களிலும் சிறப்பாக பீல்டிங் செய்வார். உலகின் மிக சிறந்த பீல்டர் அவர்தான்.

  கிரிக்கெட் மைதானத்தின் எல்லா இடங்களிலும் பீல்டிங் செய்பவராக முதலில் நான் பார்த்தது ஆண்ட்ரூ சைமன்ட்சைதான். பலமான புஜம் உள்ளதால் பவுண்டரி எல்லைக் கோட்டின் அருகே நின்றும் பீல்டிங் செய்வார்.

  ஏபி டி வில்லியர்ஸ், ஜான்டி ரோட்ஸ்


  பெரிய மனிதரான சைமண்ட்ஸ் பாய்ந்து பந்தை பிடிப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படும். என் காலத்துக்குப் பிறகு பார்த்த சிறந்த பீல்டராக டி வில்லியர்சை சொல்வேன். ஆட்டத்தை நன்கு கவனிப்பார். பந்தை துரத்தி நன்றாக ஓடுவார். பேட்ஸ்மேனாகவும் உள்ளதால் ஆட்டத்தின் போக்கை அவரால் அறிந்து கொள்ள முடியும்.

  இவ்வாறு ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

  டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு மே 23-ம்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

  அவரை தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் இடமபெற வைத்து 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  Next Story
  ×