என் மலர்
விளையாட்டு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த போட்டிக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டித் தொடர் இப்போதைக்கு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், 'இந்திய கிரிக்கெட் அணி இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை. சர்வதேச பயண கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பது தெரியவில்லை. எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த போட்டி தொடரில் இந்திய அணி பங்கேற்க சாத்தியமில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். பின்னர் வரும் நாட்களில் இந்த போட்டி தொடரில் விளையாடுவதாக உறுதி அளித்துள்ளோம்' என்றார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகஸ்டு மாதத்தில் இந்த தொடரை நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சச்சினை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
மும்பை:
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆவதை நினைவுப்படுத்தி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் யுவராஜ்சிங்கின் சிக்சர் அடிக்கும் திறமையை புகழ்ந்து தள்ளிய தெண்டுல்கர் அவரால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து யுவராஜ்சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நன்றி சச்சின். நான் உங்களை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன். கடினமான காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்து என்னை வழிநடத்தினீர்கள். என் திறமை மீது நம்பிக்கை வைக்க கற்று கொடுத்தீர்கள். என்னை ஊக்கப்படுத்தி முன்னேற்றப் பாதைக்கு செல்ல நீங்கள் செய்த அனைத்து விஷயங்களையும், நானும் மற்ற இளைஞர்களுக்கு செய்வேன். உங்களுடன் இன்னும் பல மறக்க முடியாத அற்புதமான நினைவுகளை எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்று கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் டி20 உலக கோப்பை குறித்து முடிவு எடுக்க அடுத்த மாதம் வரை காத்திருப்போம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கு சிஎஸ்கே ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘எந்தவொரு ஐபிஎல் அணிக்கும் முதுகெலும்பாக இருப்பது இந்திய வீரர்கள். ஆனால், எங்களுடைய அணியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சுனில் நரைன், அந்த்ரே ரஸல், மோர்கன், தற்போது கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் மற்றும் அவர்கள் இணைந்து சிறந்த அணியை உருவாக்க முடியும். இந்த காம்பினேசன் சிறப்பை உருவாக்கும்’’ என்றார்.

ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.
நான்காவது ஊரடங்கு முடிவடைவதற்கு முன், வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் வீரர்கள் இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ் மும்பை நகருக்கு வெளியில் உள்ள கான்சோலி ரிலையன்ஸ் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயிற்சியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஆத்திய டரே, தவால் குல்கர்னி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், நிர்வாகம் எந்தவொரு வீரரையும் பயிற்சிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், சச்சின் தெண்டுல்கர் புது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்துள்ளது.
இதனால் பந்தை உடனடியாக பளபளப்பை இழந்துவிடும். இதனால் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும். பந்தை ஸ்விங் செய்ய பந்து வீச்சாளர்கள் தடுமாறும் நிலை ஏற்படும்.
இதனால் பந்து வீச்சு - பேட்டிங் இடையே சரியான பேலன்ஸ் இல்லாமல் போகும். இதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு 45 முதல் 50 ஓவர்கள் முடிந்ததும் பந்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு ஒருமுறை பந்து மாற்றப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் முதன்முறையாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

வீரர்கள் சமூக இடைவெளியுடன் வெளிப்புற மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஜூலை 8-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் பயிற்சி மேற்கொள்வார்கள். டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இன்றி நடத்தப்படும்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அதபோல் லங்காஷைர் கவுன்ட்டி கிரிக்கெட் அணியின் வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டனர்.
நாங்கள் பழிவாங்குவதில்லை, சம உரிமையை மட்டுமே கேட்கிறோம் என்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவா இனவெறி தொடர்பான கருத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கடந்த மே 25-ம் தேதி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அமெரிக்காவில் மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு உலகின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இனவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தானும் ஐபிஎல் போட்டியின்போது, இனவாதத்திற்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் பெராராவையும் சிலர் ‘கலு’ என்று அழைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது அந்த வார்த்தைக்கு அர்த்தம் ‘கருப்பு நிறத்தைச் சேர்ந்த வலுவான நபர்’ என நினைத்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அது கறுப்பினத்தைக் கிண்டல் செய்து கூறப்பட்ட வார்த்தை எனத் தெரிந்து வருந்தியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது இனவாதம் தொடர்பான கருத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெயின் பிராவோ கூறியிருக்கிறார் அதில் ‘‘உலகளவில் நடத்தப்படும் நிறவெறித் தாக்குதல்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. ஒரு கறுப்பின மனிதனாக, உலக வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியும்.
ஆனாலும் எப்போதும் நாங்கள் பழிவாங்க வேண்டும் என்று கேட்கவில்லை. எப்போதும் மரியாதைக்கும் சம உரிமைக்குமே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். ஆனால் எங்கள் மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது’’ என்றார்.
மேலும் ‘‘எனது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். நாங்களும் பலம் வாய்ந்தவர்களாகவும் அழகானவர்களாகவும் இருக்கிறோம். உலகளவிலும் மாபெரும் மனிதர்களைப் பாருங்கள். நெல்சன் மண்டேலா, முகமது அலி, மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்டவர்கள் எங்களின் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இதுவரை நடந்தது போதும். எங்களுக்குச் சம உரிமை வேண்டும். எங்களுக்குப் பழிக்குப் பழி வேண்டாம். போர் வேண்டாம். எங்களுக்கு மரியாதைதான் வேண்டும். ஒரு மனிதர் எப்படிப்பட்டவராக இருக்கிறாரோ, அவரை அப்படியே ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்த வேண்டும். அதுதான் மிக முக்கியமானது’’ என உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார்.

தன் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நீக்கப்பட்டதால் நடந்த தவறுக்காக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சஞ்சிதா சானு வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவு குறித்த அறிக்கையில் சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தான் ஒருபோதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்று மறுத்த சஞ்சிதா சானு தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து ஹங்கேரியில் உள்ள சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். இதற்கிடையில், ஊக்க மருந்து சோதனையின் போது சஞ்சிதா சானுவிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் நம்பர் நிர்வாக குளறுபடி காரணமாக மாறியதால் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக ஒப்புக்கொண்ட சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதத்தில் சஞ்சிதா சானுவின் இடைநீக்கத்தை ரத்து செய்தது. ஆனால் அவர் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நிலுவையில் இருந்து வந்தது. இதனால் சஞ்சிதா சானுவின் பெயர் அர்ஜூனா விருது தேர்வுக்கான பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு விவகாரம் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அதிகாரபூர்வமாக அவருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது. உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 26 வயதான சஞ்சிதா சானு கருத்து தெரிவிக்கையில், ‘ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து இறுதியாகவும், அதிகாரபூர்வமாகவும் நான் நீக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நான் இழந்த வாய்ப்புகளுக்கு பதில் என்ன?. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். இந்த தவறுக்கு காரணம் யார் என்று கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் கடுமையான நடவடிக்கையால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தேன். எனவே சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்பதுடன், நடந்த தவறுக்கு நியாயமான விளக்கம் அளிக்க வேண்டும். அத்துடன் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில் இதற்காக நான் உயர் அமைப்புகளை நாடுவேன்’ என்றார்.
2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவு குறித்த அறிக்கையில் சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு விவகாரம் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அதிகாரபூர்வமாக அவருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது. உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 26 வயதான சஞ்சிதா சானு கருத்து தெரிவிக்கையில், ‘ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து இறுதியாகவும், அதிகாரபூர்வமாகவும் நான் நீக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நான் இழந்த வாய்ப்புகளுக்கு பதில் என்ன?. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். இந்த தவறுக்கு காரணம் யார் என்று கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் கடுமையான நடவடிக்கையால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தேன். எனவே சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்பதுடன், நடந்த தவறுக்கு நியாயமான விளக்கம் அளிக்க வேண்டும். அத்துடன் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில் இதற்காக நான் உயர் அமைப்புகளை நாடுவேன்’ என்றார்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது விமான போக்குவரத்து தொடங்கி உள்ளதால், ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முடியுமா? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.
ரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் என அனைவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் கங்குலி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். எனவே, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக பி.சி.சி.ஐ விரைவில் முடிவு செய்யும்’ என்றும் கங்குலி தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், ஐபிஎல் நடைபெறாவிட்டால் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கங்குலி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் 5 வயது மகள் ஷிவா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பறவையிடம் பரிவு காட்டியது குறித்து பதிவிட்டுள்ளார்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் 5 வயது மகள் ஷிவாவுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. அதை டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் நிர்வகிக்கிறார்கள். இந்த நிலையில் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ஷிவா வெளியிட்ட ஒரு ருசிகர பதிவு வருமாறு:-
மாலை வேளையில் எங்கள் வீட்டு புல்வெளியில் ஒரு பறவை நினைவின்றி மயங்கி கிடப்பதை பார்த்தேன். உடனே எனது அப்பா, அம்மாவை அழைத்தேன். என்னுடைய அப்பா டோனி அந்த பறவையை கையில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அது கண் விழித்தது. இதனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். பிறகு அதை அங்கிருந்த சில இலைகளின் மீது கூடு போன்று அமைத்து உட்கார வைத்தோம். அதன் பெயர் ‘காப்பர்ஸ்மித் பார்பெட்’ (செம்மார்புக் குக்குறுவான் குருவி) என்று எனது தந்தை கூறினார்.
ஆனால் அழகான அந்த சிறிய பறவை திடீரென பறந்து சென்று விட்டது. அது என்னுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது அதன் அம்மாவிடம் சென்று விட்டதாக என் அம்மா என்னிடம் கூறினார். அந்த பறவையை மீண்டும் பார்ப்பேன் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

போட்டி அட்டவணைப்படி எங்களது திட்டம் தொடரும் என்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசி தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ந்தேதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. போர்டு நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐசிசி அதன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐசிசி டி20 உலக கோப்பை மற்றும் மகளிர் 50 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றிகான தற்செயல் திட்டங்களை தொடர்ந்து ஆராயும். போட்டி அட்டவணைப்படி இரண்டு தொடர்களுக்கான திட்டம் தொடரும்’’ எனப் பதிவிட்டுள்ளது.
இதனால் இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது சுகாதார நிலை மேம்பட்டு வருகிறது. ஆனால் பயண கட்டுப்பாடு, தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகள், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது போன்ற காரணங்களால் ஐ.சி.சி. திணறி வருகிறது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரைப்போன்று வளர முயற்சி செய்வேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்றிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அசாம். இவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.
தொடர்ச்சியாக இதுபோன்று விளையாடினால் விராட் கோலியை போன்ற சிறந்த வீரராக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். அவரைப்போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். நான் அவருக்கு பின்னால்தான் இருக்கிறேன். நான் இன்னும் அதிகமான சாதனைகளை எட்ட வேண்டியுள்ளது. அவரை போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன். பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து சாதனைப் படைக்க வேண்டும்’’ என்றார்.