search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேகேஆர் சிஇஓ வெங்கி மைசூர்
    X
    கேகேஆர் சிஇஓ வெங்கி மைசூர்

    ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்: கேகேஆர் சிஇஓ சொல்கிறார்

    ஐபிஎல் தொடர் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்று கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் டி20 உலக கோப்பை குறித்து முடிவு எடுக்க அடுத்த மாதம் வரை காத்திருப்போம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    ஒருவேளை வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கு சிஎஸ்கே ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘எந்தவொரு ஐபிஎல் அணிக்கும் முதுகெலும்பாக இருப்பது இந்திய வீரர்கள். ஆனால், எங்களுடைய அணியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சுனில் நரைன், அந்த்ரே ரஸல், மோர்கன், தற்போது கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் மற்றும் அவர்கள் இணைந்து சிறந்த அணியை உருவாக்க முடியும். இந்த காம்பினேசன் சிறப்பை உருவாக்கும்’’ என்றார்.
    Next Story
    ×