search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர்
    X
    சச்சின் தெண்டுல்கர்

    டெஸ்ட் போட்டியில் 45 முதல் 50 ஓவரில் பந்தை மாற்ற வேண்டும்: சச்சின் ஆலோசனை

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், சச்சின் தெண்டுல்கர் புது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்துள்ளது.

    இதனால் பந்தை உடனடியாக பளபளப்பை இழந்துவிடும். இதனால் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும். பந்தை ஸ்விங் செய்ய பந்து வீச்சாளர்கள் தடுமாறும் நிலை ஏற்படும்.

    இதனால் பந்து வீச்சு - பேட்டிங் இடையே சரியான பேலன்ஸ் இல்லாமல் போகும். இதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

    இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு 45 முதல் 50 ஓவர்கள் முடிந்ததும் பந்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு ஒருமுறை பந்து மாற்றப்படும்.
    Next Story
    ×