என் மலர்
விளையாட்டு
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எலிமினேட்டர் 2-ல் முல்தான் சுல்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லாகூர் குவாலண்டர்ஸ்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 17-ந்தேதி நடைபெற இருந்த பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
அந்த ஆட்டங்கள் நேற்று முன்தினத்தில் இருந்து நடைபெற்று வருகின்றன. குவாலிபையர் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - முல்தான் சுல்தான் அணிகள் மோதின. இதில் கராச்சி கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் 1-ல் லாகூர் குவாலண்டர்ஸ் - பெஷாவர் ஜல்மி அணிகள் மோதின. இதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்று எலிமினேட்டர் 2-க்கு முன்னேறியது.
எலிமினேட்டர்-2 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குவாலிபையரில் தோற்ற முல்தான் சுல்தான் அணியும், எலிமினேட்டர்-1ல் வெற்றி பெற்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின.
முதலில் விளையாடிய லாகூர் குவாலண்டர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பஹர் ஜமான் 46 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய வீஸ் 48 (21 பந்தில்) ரன்கள் அடித்தனர்.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆடம் லித் 29 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். என்றாலும் மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க முல்தான் சுல்தான் 19.1. ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் லாகூர் குவாலண்டர்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாரிஸ் ரஃப், டேவிட் வீஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
சாவ் பாலோ:
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 2022-ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும். 5-வது இடத்தை பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதும். இதில் சாவ்பாலோ நகரில் நேற்று முன்தினம் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மார் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். ஆனால் அது ‘ஆப்-சைடு’ கோல் என்று நடுவர் அறிவித்து விட்டார். பந்து 74 சதவீதம் பிரேசில் பக்கமே சுற்றிக்கொண்டிருந்தாலும் அவ்வளவு எளிதில் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 40-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் டக்லஸ் லூயிஸ் பந்தை வலைக்குள் தள்ளினார். அந்த சமயத்தில் மற்றொரு பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் கோல் கீப்பரை ‘பவுல்’ செய்ததால் அந்த கோலும் மறுக்கப்பட்டது.
பிற்பாதியில் ஒரு வழியாக பிரேசில் கோல் போட்டது. அந்த அணியின் ராபர்ட்டோ பிர்மினோ 66-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பிறகு கோல் ஏதும் விழவில்லை. முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் பிரேசில் 9 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பிரேசில் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் உருகுவேயை இன்று சந்திக்கிறது. அதே சமயம் நடப்பு தொடரில் இன்னும் ஒரு கோல் கூட அடிக்காத ஒரே அணியான வெனிசுலாவுக்கு இது 3-வது தோல்வியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ், டார்வின் நுன்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதே போல் சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. சிலி அணியில் இரண்டு கோல்களையும் முன்னணி வீரர் அர்துரோ விடால் அடித்தார்.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 2022-ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும். 5-வது இடத்தை பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதும். இதில் சாவ்பாலோ நகரில் நேற்று முன்தினம் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மார் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். ஆனால் அது ‘ஆப்-சைடு’ கோல் என்று நடுவர் அறிவித்து விட்டார். பந்து 74 சதவீதம் பிரேசில் பக்கமே சுற்றிக்கொண்டிருந்தாலும் அவ்வளவு எளிதில் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 40-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் டக்லஸ் லூயிஸ் பந்தை வலைக்குள் தள்ளினார். அந்த சமயத்தில் மற்றொரு பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் கோல் கீப்பரை ‘பவுல்’ செய்ததால் அந்த கோலும் மறுக்கப்பட்டது.
பிற்பாதியில் ஒரு வழியாக பிரேசில் கோல் போட்டது. அந்த அணியின் ராபர்ட்டோ பிர்மினோ 66-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பிறகு கோல் ஏதும் விழவில்லை. முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் பிரேசில் 9 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பிரேசில் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் உருகுவேயை இன்று சந்திக்கிறது. அதே சமயம் நடப்பு தொடரில் இன்னும் ஒரு கோல் கூட அடிக்காத ஒரே அணியான வெனிசுலாவுக்கு இது 3-வது தோல்வியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ், டார்வின் நுன்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதே போல் சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. சிலி அணியில் இரண்டு கோல்களையும் முன்னணி வீரர் அர்துரோ விடால் அடித்தார்.
இந்திய அணியின் விராட் கோலி, பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன் என டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரராக உள்ளார். இந்த காலக்கட்டத்தின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் திகழ்கிறார்கள். தற்போது பாகிஸ்தானின் பாபர் அசாம் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
விராட் கோலியுடன் இணைத்து பேசப்படுகிறார். விராட் கோலி அளவிற்கு சாதனைகள் படைப்பார் என்று கருதப்படுகிறதுது.
தென்ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவருமான டு பிளிஸ்சிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் பாபர் அசாம், விராட் கோலி ஆகியோரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன் என டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் விராட் கோலி, பாபர் அசாம் குறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘பாபர் அசாம் - விராட் கோலி இடையே ஒற்றுமையை பார்க்கிறேன். அவர்கள் மிகவும் உயர்ந்து தர வீரர்கள். பாபர் அசாம் கடந்த ஒரு வருடமாக அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஆகவே, அவர் சிறப்பாக எதிர்காலத்தை பெற்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஏராளமானவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஏற்றபடி உடல் வலிமையை பெற்றிருக்கவில்லை என்று நினைத்திருப்பார்கள். அதன்பின் டி20-யில் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடுகிறார்’’ என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகள் விளையாடியதில் இந்த வருடம்தான் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது என அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. இந்த வருட சீசனுடன் 13 வருடங்கள் முடிவடைந்து விட்டன. இதில் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி உரிமையாளராக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றாலும், கடந்த 13 ஆண்டுகளில் இந்த வருடம்தான் சிறந்த ஆட்டம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் அம்பானி கூறுகையில் ‘‘எங்களுடைய வெற்றி மற்றும் தோல்வி கடந்த ஆண்டு சரி சமமாக இருந்தது. ஆனால், இந்த முறை தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதனால் நம்பமுடியாத சீசனாக அமைந்தது. எங்களுடைய திட்டத்தை சரியாக ஆடுகளத்தில் செயல்படுத்தினோம். 95 முதல் 98 சதவீதம் வரை சரியாக செயல்பட்டதாக தெரிவிப்பேன். நாங்கள் விளையாடியதில் இந்த சீசன்தான் மிகவம் சிறந்தது’’ என்றார்.
ஐபிஎல் போட்டியை நடத்தியதற்காக பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனது. ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருந்ததால் தொடர் முழுவதும் ஷார்ஜா, துபாய், அபு தாபியில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிசிசிஐ 100 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் போட்டி நடைபெறும்போது 8 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானங்களை பெற்றிருந்தாலும், அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு போட்டி கட்டணத்தை செலுத்த வேண்டும். சில மாநில அரசுகள் பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்யாவிடில் ஒரு போட்டிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
100 கோடி ரூபாயைத் தவிர, 14 ஐந்து நட்சத்திர ஓட்டல்களை மூன்று மாதத்திற்கு புக் செய்திருந்தது. இதன்மூலமும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை என்றாலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருமானம் போதுமான அளவு கிடைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு கடும் போட்டியாக இருப்பார் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல இளம் வீரர்களை அடையாளம் காண வைத்துள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தார்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் யாரும் நம்ப முடியாத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதன்பின் கிடைத்த வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கொண்டார். 516 ரன்கள் விளாசி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த சீசனில் 30 சிக்சருக்கு மேல் விளாசி அதிக சிக்சர் அடித்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.
ஏற்கனவே இந்திய அணியில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பதவிக்கு கடும் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் இஷான் கிஷனும் சிறந்த போட்டியாளராக திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் ஆட்டத்தை பார்க்க மிகவும் சிறப்பாக இருந்தது. நம்பர் 4 இடத்திலும், பின்னர் தொடக்க இடத்திலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு ஆடினார். அவருடைய திறமை இந்திய அணியின் தேவைக்கான போட்டிக்கு முக்கிய காரணமாக உயர்த்தியுள்ளது. சரியான நேரம் வரும்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் முக்கிய நபராக விளங்குவார்.
அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஐபிஎல் போட்டியில் விளையாடியது போன்று சிறப்பாகவும் விளையாட முடியும். இந்திய கிரிக்கெட் அணிக்க கூடுதல் வரவேற்பாக இருப்பார்’’ என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஏற்கனவே சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் ஆகியோர் முறையே தெற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் அஜித் அகர்கரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிகிறது. அவர் 231 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருடன் பலர் தலைமை பயிற்சியாளர் சுனில் ஜோஷியுடன் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளதால், தலைமை பதவிக்கு ஆபத்து ஏற்படலாம்.
லோதா பரிந்துரையைின்படி அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுனில் ஜோஷி 15 டெஸ்ட், 69 ஒருநாள் என 84 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சேத்தன் சர்மா விண்ணப்பம் செய்துள்ளதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து சேத்தன் சர்மா கூறுகையில் ‘‘ஆமாம், நான் தேர்வுக்குழுவிற்கு விண்ணப்பம் செய்துள்ளேன். தேர்வுக்குழுவில் வழக்கமான உறுப்பினராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய இலக்கு இந்திய அணிக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான். நான் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலிப் வெங்சர்க்கார் ஆகியோருடன் இணைந்து விளையாடியுள்ளேன்’’ என்றார்.
துருக்கி கிராண்ட் பிரியை வென்று இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 7-வது முறையாக F1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ஜெர்மனியின் மைக்கேல் ஷுமாக்கர். இவர் ஏழு முறை பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருந்தார்.
ஷுமாக்கர் பார்முலா ஒன்னில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்த நிலையில தற்போது மெர்சிடெஸ் அணிக்காக கலந்து கொண்டுள்ள இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் அனைத்து சாதனைகளைளும் உடைத்து வருகிறார்.
இன்று துருக்கி கிராண்ட் பிரி நடைபெற்றது. இதில் ஹாமில்டன் வெற்றி பெற்று பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார். இது அவருக்கு 7-வது சாம்பியன் பட்டமாகும். இதன்மூலம் ஷுமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
லீவிஸ் ஹாமில்டன் 2008, 2014, 2015, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்துள்ள டி நடராஜன், இன்று முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார்.
ஐபிஎல் 13-வது சீசன் கடந்த 10-ந்தேதி முடிவடைந்தது. இந்தத் தொடரில் மிகவும் உற்று கவனிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜனும் ஒருவர். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர்பெற்ற நடராஜன், இந்த சீசனில் டெத் ஓவர்களில் அசத்தினார். துல்லியமான யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
எலிமினேட்டர் சுற்றில் டி வில்லியர்ஸை துல்லியமான யார்க்கர்களால் வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனால் டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டி20 அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் நேற்று பயிற்சியை ஆரம்பித்தனர். இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
We have seen him bowl with a lot of success in the @IPL and here is @Natarajan_91 bowling in the #TeamIndia nets for the first time after his maiden India call-up! A dream come true moment. 👏 pic.twitter.com/WqrPI0Ab7I
— BCCI (@BCCI) November 15, 2020
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை வெறுக்க விரும்புகிறோம், ஆனால் அவரது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறோம் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக அவர்களுடைய நாட்டில் விளையாடும்போது எதிரணி வீரர்களின் பாடு திட்டாட்டம்தான். போதும்போதும் என்ற அளவிற்கு வைச்சு செய்து விடுவார்கள்.
இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரின் போது வாயை பொத்திக் கொண்டுதான் விளையாடுவார்கள். ஆனால் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சமமான அளவில் ஸ்லெட்ஜிங் ஈடுபடுகின்றனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் துவண்டு போகும் நிலைக்கு பதிலடி கொடுப்பார். அதுவும் வாயால் மட்டுமல்ல பேட்டிங்கிலும் ஜொலித்து அசத்தி விடுவார். இதனால் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிடிக்காது.
தற்போதைய ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்னுக்கு விராட் கோலி என்றாலே வேப்பங்காய்தான். விரைவில் டெஸ்ட் போட்டியில் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் விராட் கோலியை வெறுக்க விரும்புகிறோம். ஆனால். அவரது பேட்டிங்கை பார்க்க விரும்புவோம் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
‘‘விராட் கோலியுடன் விளையாடும்போது வேடிக்கையான ஒன்று. அவரை நாங்கள் வெறுக்க விரும்புகிறோம். ஆனால், அவரது பேட்டிங்கை பார்க்க விரும்கிறோம். அதுவும் ஒரு ரசிகராக..’’ என்றார் டிம் பெய்ன்
எனக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்தினால், அது எங்கள் அணிக்குதான் சாதகமாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போது தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இவர் முறையான கிரிக்கெட் ஷாட்கள் அடிக்கவில்லை என்றாலும், கிரக்கெட் அல்லாத ஷாட்கள் அடித்து பந்து வீச்சாளர்களை திணறடித்து வருகிறார்.
இவரை அவுட்டாக்க வேண்டுமென்றால் ஒரே வழி ‘ஷார்ட் பால்தான்’. நியூசிலாந்து கடைசியாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வி்ளையாடியது. அப்போது நீல் வாக்னர் நான்கு முறை ஷார்ட் மூலம் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.
தற்போது இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ளது. இந்தத் தொடரின்போது ஸ்மித்தை அவுட்டாக்க இந்திய பந்து வீச்சாளரும் ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் எனக்கு எதிராக அப்படி செய்தால் அது எங்கள் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘சில மாறுபட்ட எதிரணிகள் ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள் வாக்னர் போன்று சிறப்பாக செயல்படுத்த கஷ்டப்பட்டார்கள். அவரது வேகத்தை கூட்டி, குறைத்து அருமையாக பந்து வீசினார்.
என்னை எதிரணிகள் இவ்வாறு அவுட்டாக்க விரும்பினார்கள், அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால், தொடர்ந்து ஷார்ட் பால் பவுன்சர் பந்து வீச்சாளர்களில் அதிகமான எனர்ஜியை எடுத்துக்கொள்ளும்.
என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான ஷார்ட் பால்களை சந்தித்துவிட்டேன். அதனால் அதிக அளவில் விரக்தியடைய மாட்டேன். இந்தியா தொடரில் நாம் பொறத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து பேசினார்கள்.
அப்போது சஞ்சய் பாங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வாய்ப்பில்லை. சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், ‘‘2011 உலக கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றினால், அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என கடுமையான தொடர் வரவிருக்கும் நேரத்தில், கேப்டன் பதவிக்கான நபர் தயாராகி விடமாட்டார் என்பதால், சுமையை குறைக்க சரியான நேரத்தில் விராட் கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும்.
அந்த வகையில் எம்எஸ் அடுத்த வரும் சென்னை அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என உணர்கிறேன். வீரராக இடம் பிடித்து டு பிளிஸ்சிஸிடம் கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். அவரின் கீழ் மாற்றங்கள் நடக்கும்’’ என்றார்.






