என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எனக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்தினால், அது எங்கள் அணிக்குதான் சாதகமாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போது தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இவர் முறையான கிரிக்கெட் ஷாட்கள் அடிக்கவில்லை என்றாலும், கிரக்கெட் அல்லாத ஷாட்கள் அடித்து பந்து வீச்சாளர்களை திணறடித்து வருகிறார்.

    இவரை அவுட்டாக்க வேண்டுமென்றால் ஒரே வழி ‘ஷார்ட் பால்தான்’.  நியூசிலாந்து கடைசியாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வி்ளையாடியது. அப்போது நீல் வாக்னர் நான்கு முறை ஷார்ட் மூலம் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.

    தற்போது இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ளது. இந்தத் தொடரின்போது ஸ்மித்தை அவுட்டாக்க இந்திய பந்து வீச்சாளரும் ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

    ஸ்மித்

    இந்நிலையில் எனக்கு எதிராக அப்படி செய்தால் அது எங்கள் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘சில மாறுபட்ட எதிரணிகள் ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள் வாக்னர் போன்று சிறப்பாக செயல்படுத்த கஷ்டப்பட்டார்கள். அவரது வேகத்தை கூட்டி, குறைத்து அருமையாக பந்து வீசினார்.

    என்னை எதிரணிகள் இவ்வாறு அவுட்டாக்க விரும்பினார்கள், அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால், தொடர்ந்து ஷார்ட் பால் பவுன்சர் பந்து வீச்சாளர்களில் அதிகமான எனர்ஜியை எடுத்துக்கொள்ளும்.

    என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான ஷார்ட் பால்களை சந்தித்துவிட்டேன். அதனால் அதிக அளவில் விரக்தியடைய மாட்டேன். இந்தியா தொடரில் நாம் பொறத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து பேசினார்கள்.

    அப்போது சஞ்சய் பாங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வாய்ப்பில்லை. சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

    மேலும், ‘‘2011 உலக கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றினால், அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என கடுமையான தொடர் வரவிருக்கும் நேரத்தில், கேப்டன் பதவிக்கான நபர் தயாராகி விடமாட்டார் என்பதால், சுமையை குறைக்க சரியான நேரத்தில் விராட் கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும்.

    அந்த வகையில் எம்எஸ் அடுத்த வரும் சென்னை அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என உணர்கிறேன். வீரராக இடம் பிடித்து டு பிளிஸ்சிஸிடம் கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். அவரின் கீழ் மாற்றங்கள் நடக்கும்’’ என்றார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் பிளேஆஃப்ஸ் சுற்றின் குவாலிபையர் 1-ல் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்து வருகிறது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தத் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து பிளேஆஃப்ஸ் சுற்று தொடங்கும்போது கொரோனா தாண்டவம் ஆடியது.

    இதனால் தொடர் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் பிளேஆஃப்ஸ் சுற்று ஆட்டங்கள் நேற்றில் இருந்து மீண்டும் தொடங்கியது.

    குவாலிபயைர் 1-ல் முல்தான் சுல்தான் - கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 141 ரன்கள் அடித்தது. போபரா அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். அதன்பின் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கராச்சி கிங்ஸ் களம் இறங்கியது.

    தொடக்க வீரர் பாபர் அசாம் 65 ரன்கள் அடித்தார். இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் எடுக்க இறுதிக் கட்டத்தில் கராச்சி கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே அடித்தது. இதனால் போட்டி டை ஆனது.

    இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. கராச்சி கிங்ஸ் 13 ரன்கள் அடித்தது, பின்னர் முல்தான் சுல்தான் அணி 8 ரன்களே அடித்ததால் கராச்சி கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டர் 1-ல் லாகூர் குவாலண்டர்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் லாகூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எலிமினேட்டர் 2-க்கு முன்னேறியது. இதில் முல்தான் சுல்ததான் - லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    ரோகித் சர்மாவிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொடுத்திருந்தால் ஐந்தில் இரண்டு, மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பாரா? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளார்.

    இதனால் கவுதம் கம்பிர் உள்பட கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

    இந்நிலையில் இதுகுறித்த விவாத்திற்கு பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, ‘‘இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால், அது அணிக்கு துரதிருஷ்டம் என கம்பிர் நம்புகிறார். ஏனென்றால், ரோகித் சர்மா அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்றவர்.

    ஆனால் நான் கேட்கும் கேள்வி, ஆர்சிபி அணியை ரோகித் சர்மாவிடம் கொடுத்து, அந்த அணியில் விராட் கோலியும் இருந்திருந்தால், அவர் மும்பை இந்தியன்ஸ் வென்றதில் இரண்டு, மூன்று அல்லது நான்கு கோப்பையை வென்றிருப்பாரா?

    ரோகித் சர்மாவின் கேப்டன் செயல்பாடு அற்புதம். நான் அவரது பணியை விரும்புகிறேன். ஆனால், மும்பை இந்தியன்ஸ் வெற்றியை இந்திய அணியுடன் தொடர்பு படுத்த முடியுமா?. இதுதான் என்னுடைய கேள்வி. கோலியின் அணி சரியாக விளையாடவில்லை என்றால், அதற்கு அர்த்த, கோலி தவறு என்பதா?’’ என்றார்.
    ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப்போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இது தொடர்பாக ஒலிம்பிக் குழு அமைப்பினருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தது.

    ஐ.சி.சி. கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய சர்வேயில் 87 சதவீத ரசிகர்கள் ஒலிம்பிக்கில் 20 ஓவர் போட்டியை சேர்க்க ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டி சிறந்ததாகும். 75-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த போட்டியில் ஆடுகின்றன. இதனால் 20 ஓவர் போட்டியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கலாம்.

    ஐ.பி.எல். போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே ஒலிம்பிக்கில் 20 ஓவர் அறிமுகம் செய்யப்பட்டால் மிகவும் பிரபலம் அடையும். கிரிக்கெட்டுக்கு இது நல்லது.

    மைதான வசதிகள் சரியாக அமைந்து விட்டால் வெற்றிகரமாகிவிடும். இதனால் ஏதாவது ஒரு வகையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும். இதற்கு சிறிது காலம் தேவைப்படலாம். ஆனால் இடம்பெறாமல் இருக்க கூடாது.

    இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    47 வயதான அவர் தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக டெஸ்டில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் ஆவார். டிராவிட் 168 டெஸ்டில் விளையாடி 13,288 ரன் எடுத்துள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு அணியை அனுப்பும் ஆர்வம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) இல்லை.

    2010 மற்றும் 2014 ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டில் ஆட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அனுப்பவில்லை. ஐ.சி.சி.யில் உள்ள உறுப்பினர்களில் பணக்கார மற்றும் வலிமையான அமைப்பு பி.சி.சி.ஐ. என்பது குறிப்பிடத்தக்கது.

    ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பாராட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா 5 ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். இதையொட்டி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் காம்பீர் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா கேப்டன் பதவியில் அமைதியாக செயல்படுகிறார். அவர் கூல் கேப்டன். மேலும் அவர் ஜென்டில்மேன் ஆவார். ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு உலக நாடுகள் மற்றும் இந்திய வீரர்களை கொண்ட அணியை அவர் சிறப்பாக வழி நடத்தினார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கிறார்.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலக இதுவே சரியான நேரம். ரோகித் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும். அவரது சாதனைகள் இதை சொல்லும்.

    ரோகித் சர்மா திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவர் ஒருவராவார். 50 ஓவர் போட்டிகளில் சில இரட்டை சதங்களை அடித்துள்ளார்.

    20 ஒவர் போட்டிகளிலும் ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் முழு உடல் தகுதி இல்லாவிட்டாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    முன்னணி 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
    லண்டன்:

    ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டி முதல்முறையாக 1970-ம் ஆண்டு டோக்கியோவில் அரங்கேறியது. தற்போது லண்டனில் நடப்பது 50-வது ஆண்டு கொண்டாட்டமாகும். இதை மையப்படுத்தி இரண்டு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘டோக்கியோ 1970’ என்ற பெயரிலான குரூப்பில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டேனில் மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டியாகோ ஸ்வாட்ஸ்மேன் (ஜெர்மனி) ஆகியோரும், ‘லண்டன் 2020’ என்ற பிரிவில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா), நடப்பு சாம்பியன் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘ரவுண்ட்-ராபின்’ முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். அனைவரும் முன்னணி வீரர்கள் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும். ஆனால் கொரோனா அபாயத்தால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த சீசனில் 42 ஆட்டங்களில் 39-ல் வெற்றி கண்டுள்ள ஜோகோவிச் ஏற்கனவே இந்த பட்டத்தை 5 முறை வென்றிருக்கிறார். இந்த தடவையும் வாகை சூடினால், இந்த பட்டத்தை அதிக முறை ருசித்தவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (6 முறை) சாதனையை சமன் செய்து விடுவார்.

    சமீபத்தில் 13-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி வரலாறு படைத்த 34 வயதான ரபெல் நடாலுக்கு ஏனோ ஏ.டி.பி. இறுதிசுற்று கோப்பை மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் தொடர்ந்து 16-வது ஆண்டாக கால்பதிக்கும் நடால் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். அந்த கசப்பான அனுபவத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் காத்திருக்கிறார். 3-ம் நிலை வீரர் டொமினிக் திம், 4-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் ஆகியோரும் கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    கொரோனா பாதிப்பால் பரிசுத்தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏறக்குறைய 37 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.42½ கோடியாகும். இதில் போட்டி கட்டணம் ரூ. 1¼ கோடி, லீக் சுற்று வெற்றிக்கு ரூ.1¼ கோடி வீதம் கிடைக்கும். தோல்வியையே சந்திக்காமல் ஒரு வீரர் மகுடத்தை உச்சிமுகர்ந்தால் மொத்தம் ரூ.11½ கோடியை பரிசாக பெறுவார். ஒற்றையர் பிரிவு வீரர்களை போல் இரட்டையர் பிரிவிலும் டாப்-8 ஜோடிகள் களம் காண உள்ளன. இந்த போட்டி லண்டனில் தொடர்ந்து 12-வது ஆண்டாக நடக்கிறது. ஆனால் லண்டனில் நடக்க இருப்பது இதுவே கடைசியாகும். அடுத்த ஆண்டு இந்த போட்டி இத்தாலியின் துரின் நகருக்கு மாற்றப்படுகிறது.
    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியில் கோலி தாயகம் திரும்ப இருப்பதால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் கூறியுள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 27-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. ஒரு நாள், 20 ஓவர் தொடர் முடிந்ததும் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் டிசம்பர் 17-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

    தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனிப்பதற்காக முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். இதனால் கடைசி 3 டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்.

    ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல் டெஸ்ட் முடிந்ததும் கோலி நாடு திரும்ப இருப்பதால் அது நிச்சயம் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தும். கோலி இல்லாததால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் ரிச்மோன்ட் கால்பந்து கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் டஸ்டின் மார்ட்டினை எடுத்து விட்டால் எப்படி இருக்கும்? அது போன்று தான் கோலி இல்லாத நிலைமையும்.

    கடந்த முறை இந்திய அணி இங்கு வந்த போது எங்களை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. அவர்கள் மிகச்சிறந்த அணியாக உள்ளனர். அதனால் கோலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நொடி கூட நாங்கள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. தொடர் முழுவதும் எங்களது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். அதை செய்து காட்டுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்.

    அனேகமாக எனது வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலி தான். இவ்வாறு சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவரது பேட்டிங்குக்காக மட்டுமின்றி விளையாட்டு மீதான அவரது அதீத ஆர்வமும், உத்வேகமிக்க பீல்டிங்குக்காகவும் இதை குறிப்பிடுகிறேன். களத்தில் அவர் எல்லா வகையிலும் வெளிப்படுத்தும் துடிப்புமிக்க ஆற்றலை கண்டு வியப்படைகிறேன். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தன்னுடைய குழந்தையின் பிறப்புக்காக அவர் இந்தியா திரும்ப எடுத்த முடிவையும் உயர்வாக மதிக்கிறேன்.

    கோலியை போன்றே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் குழந்தை பிறப்புக்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டை தியாகம் செய்தார். என்னை கேட்டால், உங்களது குழந்தை பிறக்கும் அந்த பொன்னான தருணத்தை நீங்கள் வாழ்வில் ஒரு போதும் தவறவிடக்கூடாது என்பதே எந்த வீரர்களுக்கும் நான் வழங்கும் அறிவுரையாகும்.

    இவ்வாறு லாங்கர் கூறினார்.

    ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறுகையில், ‘கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி ஆடாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உலகின் மிகச்சிறந்த வீரருக்கு எதிராக விளையாடவே விரும்புகிறோம். ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோருடன் விராட் கோலியும் உலகின் சிறந்த வீரராக விளங்குகிறார். எனவே கோலி இல்லாதது ஏமாற்றமே. ஆனாலும் இந்திய அணியில் இன்னும் ‘சூப்பர் ஸ்டார்’கள் உள்ளனர்.

    ரஹானே, புஜாரா திறமையானவர்கள். இன்னும் சில இளம் வீரர்களும் வருகை தந்துள்ளனர். இதனால் இந்த தொடர் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது. கோலி இல்லை என்பதால் நாங்கள் எளிதாக கோப்பையை வென்று விட முடியும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.
    சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் இளம் வயதில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    சோபியா:

    சோபியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பல்கேரியா நாட்டில் நடந்தது.  இதில், இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் மற்றும் கனடா நாட்டின் வாசிக் பொஸ்பிசில் ஆகியோர் விளையாடினர்.  இதில், 6-4, 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார்.  இதனால் தனது 19-வது வயதில் முதன்முறையாக ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கடந்த 2008ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கெய் நிஷிகோரி தனது 18-வது வயதில் டெல்ரே பீச் ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார்.

    அதன்பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை படைத்த இளம் வீரராக சின்னர் உள்ளார்.  இந்த ஆண்டில் உகோ ஹம்பர்ட், கேஸ்பர் ரூட், தியாகோ செய்போத் வைல்ட், மியோமிர் கெக்மனோவிக் மற்றும் ஜான் மில்மேன் ஆகியோருக்கு அடுத்து முதன்முறையாக பட்டம் பெறும் 6-வது நபராக சின்னர் உள்ளார்.
    ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் கோரன்டைனில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.

    பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

    ஆஸ்திரேலியா சென்றள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒரு நாள் தொடரில் மட்டும் 1992-ம் ஆண்டில் இந்திய அணி அணிந்து விளையாடிய அதே வடிவமைப்புடன் கூடிய ஜெர்சியை இம்முறையும் இந்திய வீரர்கள் அணிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில் 10 ஆகவும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நீண்டகால திட்டம் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரான ராகுல் டிராவிட் கூறும்பொழுது, திறமை அடிப்படையில் விரிவாக்கத்திற்கு ஐ.பி.எல். தயாராகி வருகிறது என நான் உணர்கிறேன்.

    நிறைய திறமையான வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். நிறைய அணிகள் இருக்கும்பொழுது, அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள். தரத்திலும் குறைவு இருக்காது என கூறியுள்ளார்.
    மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் பேசுகிறார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை. ரோகித் சர்மா காயத்தால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அணியில் சேர்க்கப்பட்டார். சகா காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழும்பிய நிலையில் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல் மக்கள் தேவையற்று பேசுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘வீரர்கள் காயம் குறித்து யாருக்குத் தெரியும்?. எங்களுக்குத் தெரியும், இந்திய பிசியோவிற்குத் தெரியும். என்சிஏ-வுக்குத் தெரியும். பிசிசிஐ எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து மக்களுக்கு தெரியும். பிசிசிஐ டிரைனர்ஸ், பிசியோ, சகா ஆகியோருக்கு தெரியும். அவருக்கு இரண்டாம் நிலை ஹாம்ஸ்டிரிங் பிரச்சினை உள்ளது. மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளவில்லை. அதனால் தேவையில்லாமல் பேசுகிறார்கள்’’ என்றார்.
    ×