search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித்
    X
    ஸ்மித்

    ஷார்ட் பால் வீச நினைத்தால் அது எங்கள் அணிக்குதான் பயனுள்ளதாக இருக்கும்: ஸ்டீவ் ஸ்மித்

    எனக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்தினால், அது எங்கள் அணிக்குதான் சாதகமாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போது தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இவர் முறையான கிரிக்கெட் ஷாட்கள் அடிக்கவில்லை என்றாலும், கிரக்கெட் அல்லாத ஷாட்கள் அடித்து பந்து வீச்சாளர்களை திணறடித்து வருகிறார்.

    இவரை அவுட்டாக்க வேண்டுமென்றால் ஒரே வழி ‘ஷார்ட் பால்தான்’.  நியூசிலாந்து கடைசியாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வி்ளையாடியது. அப்போது நீல் வாக்னர் நான்கு முறை ஷார்ட் மூலம் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.

    தற்போது இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ளது. இந்தத் தொடரின்போது ஸ்மித்தை அவுட்டாக்க இந்திய பந்து வீச்சாளரும் ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

    ஸ்மித்

    இந்நிலையில் எனக்கு எதிராக அப்படி செய்தால் அது எங்கள் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘சில மாறுபட்ட எதிரணிகள் ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள் வாக்னர் போன்று சிறப்பாக செயல்படுத்த கஷ்டப்பட்டார்கள். அவரது வேகத்தை கூட்டி, குறைத்து அருமையாக பந்து வீசினார்.

    என்னை எதிரணிகள் இவ்வாறு அவுட்டாக்க விரும்பினார்கள், அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால், தொடர்ந்து ஷார்ட் பால் பவுன்சர் பந்து வீச்சாளர்களில் அதிகமான எனர்ஜியை எடுத்துக்கொள்ளும்.

    என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான ஷார்ட் பால்களை சந்தித்துவிட்டேன். அதனால் அதிக அளவில் விரக்தியடைய மாட்டேன். இந்தியா தொடரில் நாம் பொறத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×