search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஷான் கிஷன்
    X
    இஷான் கிஷன்

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு இஷான் கிஷன் கடும் போட்டியாக இருப்பார்: எம்எஸ்கே பிரசாத்

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு கடும் போட்டியாக இருப்பார் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல இளம் வீரர்களை அடையாளம் காண வைத்துள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தார்.

    அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் யாரும் நம்ப முடியாத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதன்பின் கிடைத்த வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கொண்டார். 516 ரன்கள் விளாசி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த சீசனில் 30 சிக்சருக்கு மேல் விளாசி அதிக சிக்சர் அடித்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.

    ஏற்கனவே இந்திய அணியில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பதவிக்கு கடும் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் இஷான் கிஷனும் சிறந்த போட்டியாளராக திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் ஆட்டத்தை பார்க்க மிகவும் சிறப்பாக இருந்தது. நம்பர் 4 இடத்திலும், பின்னர் தொடக்க இடத்திலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு ஆடினார். அவருடைய திறமை இந்திய அணியின் தேவைக்கான போட்டிக்கு முக்கிய காரணமாக உயர்த்தியுள்ளது. சரியான நேரம் வரும்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் முக்கிய நபராக விளங்குவார்.

    அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஐபிஎல் போட்டியில் விளையாடியது போன்று சிறப்பாகவும் விளையாட முடியும். இந்திய கிரிக்கெட் அணிக்க கூடுதல் வரவேற்பாக இருப்பார்’’ என்றார்.
    Next Story
    ×