என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக பெற்றிருக்கும் நியூசிலாந்து இரண்டாவது இடம் வகிக்கிறது.

    இந்நிலையில், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தொடர்ந்து நம்பர் ஒன் ஆக வலம் வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    நம்பர் ஒன் மகுடத்தை சூடுவதற்கு மனஉறுதிமிக்க போராட்டமும் இலக்கை நோக்கி நிலையான முழு கவனமும் தேவை. இவற்றை தற்போதைய இந்திய அணி செய்து காட்டியுள்ளது. நம்பர் ஒன் இடத்துக்கும், பாராட்டுக்கும் இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான விதிமுறைகளில் பாதியில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தடைகளையும் இந்திய அணி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. கடினமான நேரத்தில் நமது வீரர்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சூப்பராக பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சகா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்ரவர்த்தி உள்பட இருவர் பாதிக்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சகாவிற்கு மே 4-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினமே ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    சகா தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததாக செய்தி வெளியானது.

    விருத்திமான் சகா

    இந்த நிலையில் சாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘‘என்னுடைய கோரண்டடைன் காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வழக்கமான பரிசோதனையில், இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று நெகட்டிவ் எனவும், மற்றொன்று பாசிட்டிவ் எனவும் முடிவு வந்தது. மாற்றாக நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். முழுமையான தொகுப்பு இல்லாமல் தகவல்கள் மற்றும் செய்திகளை தவறாக பரப்ப வேண்டாம்’’  எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    கடந்த காலத்தில் விளையாடிய வீரரை தற்போதைய வீரர்களுடன் ஒப்பிடுவது நியாயமில்லை என பாகிஸ்தான் பேட்டிங் ஜாம்பவான் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிடுவது உண்டு.

    தற்போது பாகிஸ்தான் அணி கேப்டனாக இருக்கும் பாபர் அசாமும் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    விராட் கோலி மைதானத்திற்கு வெளியில் உடற்தகுதி, பயிற்சி ஆகியவற்றிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இந்த நிலையில் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த முகமது யூசுப் விராட் கோலி, பாபர் அசாமில் யார் சிறந்தவர்கள் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

    முகமது யூசுப் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் குறித்து கூறுகையில் ‘‘நான் விராட் கோலியின் பயிற்சியை பார்த்ததில்லை. ஆனால் சில பயிற்சி வீடியோக்களை டுவிட்டர் அல்லது சில இடங்களில் பார்த்துள்ளேன். இன்றைய காலக்கட்டத்தில், மாடர்ன் கிரிக்கெட் என்றால் என்ன? என்று என்னிடம் கேட்டால், பயிற்சி பற்றிதான் நான் சொல்வேன். வீரர்கள் இன்று கட்டுக்கோப்பாகவும், வேகமாகவும் உள்ளனர். வீராட் கோலியின் அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால் இதுதான் இருக்கிறது.

    சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை நெருங்கி வருகிறார். டி20 கிரிக்கெட்டிலும் அபாரமான சராசரி வைத்துள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் உயர்தர ஆட்டத்தை வைத்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் அவர்தான் நம்பர் ஒன் வீரர்.

    கடந்த கால வீரர்களை தற்போதைய வீரர்களுடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல என்பதை முன்னதாகவே நான் தெரிவித்துள்ளார். இருந்தாலும் விராட் கோலியின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் உள்ளது’’ என்றார்.
    இந்தியா அணியின் முக்கிய வீரரான பும்ரா, நியூசிலாந்தின் ஷேன் பாண்ட்தான் என்னுடைய பந்து வீச்சு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருபவர் பும்ரா. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக உள்ளார். கடைசி நேரத்தில் குறைந்த ரன்களின் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், இரு அணி கேப்டன்களும் அழைப்பது பும்ராவைத்தான்.

    அப்படிபட்ட பும்ரா, தனது பந்து வீச்சை சரி செய்வதற்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் முக்கிய பங்கு வகித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் ஷேன் பாண்ட்-ஐ முதன்முறயாக 2015-ம் ஆண்டு பார்த்தேன். நான் சிறுவனாக இருக்கும்போது, பாண்ட் பந்து வீச்சை பார்த்துள்ளேன். அவருக்கு நியூசிலாந்து அணிக்காக எப்படி பந்து வீசுகிறார், பந்தை எப்படி வீசுகிறார் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.

    ஷேன் பாண்ட், பும்ரா

    அவரை இங்கு பார்க்கும்போது சிறந்த அனுபவமாக இருந்தது. பல்வேறு விசயங்களில் எனக்கு வெளிப்படையாக உதவியுள்ளார். வருடத்திற்கு வருடம் அவருடனான நட்புணவர்வு சிறப்பாக இருந்து கொண்டே இருக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இல்லாமல், இந்திய அணியில் இருக்கும்போது கூட அவருடன் பேச முயற்சிப்பேன். சிறந்த பயணம் தொடர்ந்து தொடரும் என நம்புகிறேன். என்னுடைய பந்து வீச்சில் புதிய விசயங்கள் குறித்து கற்றுக் கொள்ள முயற்சி செய்வேன். என்னுடைய பந்து வீச்சில் மிகப்பெரிய பங்கு வகிப்பார்.’’ என்றார்.
    இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான பிரித்வி ஷா கோவாவில் தடுப்பூசி போடச் சென்றபோது, அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
    இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்கள் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்தது.

    இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்திய வீரரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா, தனது நண்பருடன் கோவா சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு செய்தார்.

    மும்பையில் இருந்து கோவா செல்லும்போது, எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவா மாநிலத்திற்குள் வேறு மாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு இ-பாஸ் தேவை என்பதை வலிறுத்தி அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர்.

    இதனால் செல்போன் மூலம் இ-பாஸ் பதிவு செய்து அனுமதி கிடைத்தபின், சுமார் ஒருமணி நேரம் கழித்து சென்றுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், உடல் பருமன் காரணமாக சேர்க்கப்படவில்லை. விக்கெட்டிற்கு இடையில் மெதுவாக ஓடுவதாலும், பீல்டிங்கில் குறைபாடு இருப்பதாலும் உடலை எடையை குறைக்க பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

    ரிஷப் பண்டிற்கும் இதே நிலை ஏற்பட்டது. அதன்பின் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களின் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களின் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    டேரில் மிட்சேல், கிளைன் பிலிப்ஸ் ஆகிய 2 வீரர்கள் புதிதாக ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மிட்சேல் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இருந்தார். பிலிப்ஸ் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதில் அவர் சதமும் அடித்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் பெயர் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.

    அதே போல் சுழற்பந்து வீச்சாளர் அஜஸ்பட்டேல் பெயரும் இடம் பெறவில்லை.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து சர்வதேச வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்படும்போது பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் கடந்த மாதம் தொடங்கி நடந்தது. இதற்கிடையே கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினார்கள்.

    இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. இதை மீண்டும் நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இடம் மற்றும் தேதியை தேர்வு செய்யவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்துவது மிகவும் சவாலானது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படேலே தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டித் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் ஊடகங்களை நெருக்கமாக பின் தொடருகிறோம். போட்டியை நடத்த காலண்டரில் ஒரு இடத்தை கண்டுபிடிப்பதே சவால் என்று நினைக்கிறேன்.

    வீரர்கள் ஏற்கனவே அதிக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனால் அனைத்து நாட்களிலும் சர்வதேச போட்டித்தொடர்கள் உள்ளன. குறிப்பாக கொரோனா வைரசுக்கு பிறகு இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் முடிந்தவரை பல போட்டிகளையும், பல டெஸ்ட் தொடர்களையும் நடத்த முயற்சிக்கின்றன.

    எனவே ஐ.பி.எல். போட்டியை நடத்துவது உண்மையான சவாலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சிறிய வாய்ப்பு உள்ளது. அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தவும் சில வாய்ப்பு இருக்கிறது. இது 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாகவோ அல்லது பிறகோ இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து சர்வதேச வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்படும்போது பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    சர்வதேச தொடரில் விளையாட இருப்பதால் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல்.லில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ந் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா, முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ‌ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் பும்ரா, முகமது ‌ஷமிக்கு பின்னால் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ‌ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும். இங்கிலாந்தில் கோடையின் முதல் பாதியில் முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மாவை ஆகியோரை விட ‌ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

    இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று விளையாடிய போது சரியான ஸ்விங் பந்து வீச்சாளரை தேர்வு செய்யாமல் தவற விட்டது. இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற ஒரு காரணம் இருந்தது. அது நியூசிலாந்தில் நிலவும் சீதோஷ்ன நிலைமையை பயன்படுத்தக்கூடிய சரியான ஸ்விங் பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருந்ததுதான் காரணம்.

    இங்கிலாந்தில் இப்போது கோடைக்காலத்தின் முதல் பாதியில் சூரியன் அவ்வளவாக வெளியே வராது. இது நியூசிலாந்தில் இருந்ததை போலவே இருக்கும். இதனால் நான் 3-வது பந்து வீச்சாளராக ‌ஷர்துல் தாகூரையே பரிந்துரைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் நேர் செட்டில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச்சை துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச்சை (ஸ்பெயின்) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார். முதல்முறையாக இந்த ஆட்டத்தில் 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாக ஆடியதாக ஜோகோவிச் குறிப்பிட்டார். ஜோகோவிச் கால்இறுதியில் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொள்கிறார். முன்னதாக சிட்சிபாஸ் 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் பெரேட்டினியை (இத்தாலி) வெளியேற்றினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 3-வது செட்டில் தோல்வியின் விளிம்புக்கு சென்ற நடால் அதன் பிறகு டைபிரேக்கர் வரை போராடி தப்பியிருக்கிறார். இந்த ஆட்டம் 3½ மணி நேரம் நீடித்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் குடெர்மிடோவாவை (ரஷியா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் மாட்ரிட் ஓபன் சாம்பியனான சபலென்கா (பெலாரஸ்) 5-7, 3-6 என்ற நேர் செட்டில் கோகோ காப்பிடம் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தாா். அதே சமயம் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஸ்வியாடெக் (போலந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜெஸ்சிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

    நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) எதிராக முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்று 2-வது செட்டில் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது காயமடைந்தார். இடது பின்னங்காலில் ஏற்பட்ட வலியால் ஹாலெப் பாதியிலேயே விலகினார்.
    கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார்.
    புதுடெல்லி:

    1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் அங்கம் வகித்த வீரர்களான ரவிந்தர் பால்சிங் (வயது 62), எம்.கே.கவுசிக் (வயது 66) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முறையே லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால்சிங் மற்றும் கவுசிக்கின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஆக்கியில் சிறந்து விளங்கிய ரவிந்தர் பால்சிங், கவுசிக் ஆகியோரை நாம் இழந்து இருக்கிறோம். அவர்கள் இந்திய விளையாட்டுக்கு அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்துடன் நாம் துணை நிற்போம்’ என்று கூறியுள்ளார்.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமனின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் மாதம் அறிவித்து இருந்தது. டபிள்யூ. வி.ராமன், முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார், முன்னாள் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா, தேர்வு குழு முன்னாள் தலைவர் ஹேமலதா கலா உள்பட 35 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து 8 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களிடம் மதன்லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தியது.

    இதன் முடிவில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான 42 வயது ரமேஷ் பவாரின் பெயர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

    இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரமேஷ் பவார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டி வரை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. உலக கோப்பை அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையாக வெடித்தது. இருவரும் ஒருவரை மாறி ஒருவர் புகார் தெரிவித்தனர். தன்னை அவமானப்படுத்தியதுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ் பவார் முயற்சிக்கிறார் என்று மிதாலி ராஜ் குற்றம் சாட்டினார். மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ரமேஷ் பவார் புகார் கூறினார். இந்த பிரச்சினையால் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

    அதனை தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டபிள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரிடம் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ரமேஷ் பவார் மீண்டும் பதவியை கைப்பற்றி இருக்கிறார். ரமேஷ் பவாரின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். அடுத்த மாதம் (ஜூன்) 16-ந் தேதி பிரிஸ்டலில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரமேஷ் பவார் தனது பணியை தொடங்க இருக்கிறார்.
    அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளித்தது பொறுப்பற்ற தன்மை என்று மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன்காரணமாக மார்ச் மாதம் இந்தியாவில் நாழு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.

    அதன்பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்த வருடம் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் முழுமையாக கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனாவை வென்று விட்டோம் என்று அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நினைத்தனர்.

    இதனால் அரசியல் கூட்டங்கள், திருமணங்கள், மதம் தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கவலையின்றி அளவிற்கு அதிகமாக கூடினர். இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின்போது அகமதாபாத் மைதானத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்றது.

    அப்போது இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமான அதிரிக்க தொடங்கியது. 

    ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த வீரர்கள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் விளையாடியபோது கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். அகமதாபாத்தில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது.

    கொரோனா அதிகரிக்கும் நேரத்தில் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பற்றத்தன்மை என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் பம்மென்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் பம்மென்ட் கூறுகையில் ‘‘நான் முன்னதாகவே (ஜனவரி மாதம்) பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்திற்கு இருக்கவில்லை. பொதுமக்களிடம் தொடர்பு கொள்ளும் சிறிய வாய்ப்புகள் இருந்தன. சில அரசியல் பேரணிகள், அது திருமணம் முடிப்பதற்கான காலம், மதம் தொடர்பான பண்டிகைகள் போன்றவற்றால், மக்கள் அதிக அளவில் கூடினர். மக்களிடையே அதிகமான தொடர்புகள் இருந்தன.

    இங்கிலாந்து தொடரின்போது சில போட்டிகளில் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்றன. அதன்பின் அகமதாபாத் மைதானத்தில் 70 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளித்தனர். என்னுடைய கண்ணோட்டத்தில் அது கொஞ்சம் பொறுப்பற்ற தன்மைதான். தற்போது அதிக கொரோனா பாதித்த இடமாக அகமதாபாத் மாறியுள்ளது’’ என்றார்.

    மே 4-ந்தேதி ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்த பின் கடந்த சனிக்கிழமை பம்மென்ட் நியூசிலாந்து சென்றடைந்துள்ளார்.
    ×