search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்ஸ் - மிட்சேல்
    X
    பிலிப்ஸ் - மிட்சேல்

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்தத்தில் மிட்சேல், பிலிப்ஸ் சேர்ப்பு

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களின் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களின் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    டேரில் மிட்சேல், கிளைன் பிலிப்ஸ் ஆகிய 2 வீரர்கள் புதிதாக ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மிட்சேல் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இருந்தார். பிலிப்ஸ் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதில் அவர் சதமும் அடித்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் பெயர் வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.

    அதே போல் சுழற்பந்து வீச்சாளர் அஜஸ்பட்டேல் பெயரும் இடம் பெறவில்லை.

    Next Story
    ×