என் மலர்
விளையாட்டு
There have been articles about me not wanting to play Test cricket. Just to clarify, I have always prepared myself for all three formats irrespective of the team selection and will continue to do the same.
— Bhuvneshwar Kumar (@BhuviOfficial) May 15, 2021
Suggestion - please don’t write your assumptions based on “sources”!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை ஒரு பக்கம் தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்தது கேமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்ததும், இதற்கு சூத்ரதாரியாக துணை கேப்டன் டேவிட் வார்னர் செயல்பட்டதும், இது விதிமுறைக்கு புறம்பானது என்று அறிந்திருந்தும் கேப்டன் ஸ்டீவன் சுமித் அதை கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. அவர்கள் தங்களது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும், சுமித், வார்னருக்கு ஓராண்டும் தடை விதித்தது. சுமித் கேப்டன் பதவியையும் இழந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் 28 வயதான பான் கிராப்ட் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள அவரிடம் நீங்கள் பந்தை சேதப்படுத்திய யுக்தி அணியின் மற்ற பவுலர்களுக்கு தெரியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நிச்சயமாக என்று பதில் அளித்தார். ‘நான் இவ்வாறு செய்தது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே அனேகமாக அவர்களுக்கு இது தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆனால் பவுலர்களின் பெயர் விவரத்தை அவர் வெளியிடவில்லை. அந்த டெஸ்டில் பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆடியது குறிப்பிடத்தக்கது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் புதிய தகவல்கள் இருந்தால் தங்களுக்கு அனுப்பலாம், இது குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ரெய்லி ஒபால்கா ஆகியோர் விளையாடினர்.
இதில், அதிரடியாக விளையாடிய ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலி ஓப்பன் இறுதிப்போட்டிக்கு 12வது முறையாக முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஷபாலி வர்மா சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி முறையே ஜூன் 27-ந் தேதி, ஜூன் 30-ந் தேதி, ஜூலை 3-ந் தேதிகளிலும், 20 ஓவர் போட்டி முறையே ஜூலை 9, 11, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

ஜார்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் இந்திராணி ராய் அறிமுக வீராங்கனையாக இடம் பெற்றுள்ளார். முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டுள்ள ஸ்னே ராணா 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். கொரோனா தொற்றுக்குள்ளான இடக்கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட், பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய பெண்கள் அணி வருமாறு:-
டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், பிரியா பூனியா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஸ்னே ராணா, தானியா பாட்டியா, இந்திராணி ராய், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ்.
20 ஓவர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹர்லீன் டியோல், ஸ்னே ராணா, தானியா பாட்டியா, இந்திராணி ராய், ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ், சிம்ரன் பகதூர்.
* இந்திய வீரர்கள் மே 19ந்தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
* பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.
* ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
* இந்தியா-நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ல் தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
வில்வித்தை: ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்பு. அணிகள் பிரிவில் இவர்கள் கூட்டாக கலந்து கொள்வார்கள். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி பங்கேற்பு.
தடகளம்: நீரஜ் சோப்ரா, சிவ்பால் சிங் ( ஈட்டி எறிதல்), பாவ்னா, பிரியங்கா கோஷ்வாமி (மகளிர் 20 கி.மீ நடை பந்தயம்), இர்பான் தோடி , ராகுல் , சந்தீப் குமார் (20 கி.மீ. நடைபந்தயம்), முகமது அனாஸ், வி.கே.விஷ்மயா, நிர்மல் நோவா, ஜிஷ்னா மேத்யூ (4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்)
எம்.ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்), கமல்பிரீத் கவுர் (மகளிர் வட்டு எறிதல்).
குத்துசண்டை: சதீஷ் குமார் (91 கிலா), ஆஷிஸ் குமார் (74 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (மகளிர் 69கிலோ), விகாஷ் கிருஷ்ணன் ( 69 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), அமித் பங்கால் ( 52 கிலோ), மேரி கோம் (மகளிர் 51 கிலோ), சிம்ரன்ஜி (மகளிர் 60 கிலோ), மணீஷ் கவுசிக் (63 கிலோ).
குதிரையேற்றம்: பவுத் மிர்சா ( தனிநபர் பிரிவு)
வாள்வீச்சு: பவானி தேவி (மகளிர் சேபர்)
ஜிம்னாஸ்டிக்: பிரணதி நாயக் (மகளிர் ஆர்ட்டிஸ்டிக்)
ஆக்கி: ஆண்கள், பெண்கள் அணி.
துடுப்பு படகு: அர்ஜுன் லால் ஜத், அர்விந்த் சிங் ( லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்)
பாய்மரபடகு: நேத்ரா குமணன் (மகளிர் லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டாண்டர்டு), கே.சி.கணபதி, வருண் தாக்குர் (ஸ்கீப் 49இஆர்)
துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர் பிரிவு): அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, இளவேனில் , மனு பாகர், யஷஸ்வினி தேஸ்வால், ராகி சர்னோபாத், திவ்யானேஷ் பன்வார், சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, தீபக் குமார், அங்கத் வீர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்.
(கலப்பு அணிகள் பிரிவு): திவ்யானேஷ் சிங் பன்வார், இளவேனில் மற்றும் தீபக் குமார், அஞ்சும் மவுத்கில். சவுரப் சவுத்ரி, மனு பாகர் மற்றும் அபிஷேக் வர்மா, யஷஸ்வினி சிங் தேஸ்வால்.
டேபிள் டென்னிஸ்: சரத் கமல், சத்யன் ( ஒற்றையர்), மணிகா பத்ரா சுதிர்தா முகர்ஜி (மகளிர் ஒற்றையர்). சரத்கமல், மணிகா பத்ரா (கலப்பு இரட்டையர் பிரிவு)
மல்யுத்தம்: ரவி தகியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, வினேஷ் போகத், அன்ஷு மாலிக் (மகளிர் 57 கிலோ), சோனம் மாலிக் (மகளிர் 62 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), சீமா பிஸ்லா (மகளிர் 50 கிலோ).






