search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட்
    X
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட்

    பான்கிராப்ட் பேச்சால், பால் டேம்பரிங் விவகாரத்தை மீண்டும் விசாரிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர்கள் பால் டேம்பரிங்கில் ஈடுபட்ட விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 2018-ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் உப்புத்தாள் வைத்து பந்தை சேதப்படுத்தியது தெளிவாக தெரிந்தது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு விசாரணை நடத்தியது. அப்போது கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு இந்த விவகாரம் தெரியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதத் தடையும் வார்னர், ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

    மேலும், இந்த விவகாரம் குறித்து வீரர்கள் புதுத்தகவல்களை தெரிவித்தால் அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பான்கிராப்ட் பால் டேம்பரிங் விவகாரம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இதுகுறித்து புதிததாக விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் சிக்கலில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்போது மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
    Next Story
    ×