search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் டேம்பரிங்"

    ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் விராட் கோலி. அவரின் வருகைக்காக காத்திருக்க முடியாது என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுகின்றனர்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கியது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடைவிதித்தது.

    ஸ்மித் மீதான தடைக்காலம் சுமார் 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்மித், இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் விராட் கோலி என்று தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘ஸ்மித் அணிக்கு திரும்பும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் விராட் கோலி.

    கூடுதலாக சில ஓவர்களை வீசுவதற்காக இன்னொரு பந்து வீச்சாளர் இருந்தால், எங்கள் அணி மெல்போர்னில் சம அளவு பேலன்ஸ் கொண்ட அணியாக இருக்கும். மிட்செல் மார்ஷ் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் முக்கியமான நபராக திகழ்வார். மெல்போர்ன் ஆடுகளத்தில் லேசான ஈரப்பதம் உள்ளது. என்றாலும் அதன் வரலாறு எங்களுக்கு நன்றாகத் தெரியும்’’ என்றார்.
    ×