search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை அணியில் வார்னர், ஸ்மித்: ஆஸ்திரேலியா
    X

    டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை அணியில் வார்னர், ஸ்மித்: ஆஸ்திரேலியா

    டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு இடம் கிடைக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்துள்ளது. இந்த தடைக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அவர்கள் மீதான தடைக்காலம் முடிவிற்கு வரும்.

    இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.

    விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.



    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’’ என்றார்.
    Next Story
    ×