search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிகவும் மோசமான 2018-ம் ஆண்டை, 3-வது குழந்தை என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் முடித்த டேவிட் வார்னர்
    X

    மிகவும் மோசமான 2018-ம் ஆண்டை, 3-வது குழந்தை என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் முடித்த டேவிட் வார்னர்

    பால் டேம்பரிங் என்ற மிகவும் மோசமான சம்பவத்தை எதிர்கொண்ட வார்னர், 3-வது குழந்தை பிறக்கப்போகிறது என்ற செய்தியுடன் 2018-ம் ஆண்டை முடித்துள்ளார். #Warner
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், துணைக் கேப்டனாகவும் திகழ்ந்தவர் டேவிட் வார்னர். அதிரடி பேட்டிங்கால் உலகளவில் அதிக ரசிகர்கள் ஆதரவை பெற்றவர்.

    கடந்த மார்ச் மாதம் வார்னருக்கு கிரிக்கெட்டில் மறக்க முடியாத மிகவும் மோசமான சம்பவம் நடைபெற்றது. கேப்டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு துணைக்கேப்டனான டேவிட் வார்னர்தான் மூளையாக செயல்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்தது.

    இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடைவிதித்தது. விரைவில் தடைக்காலம் முடிவடைய இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

    வார்னர் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 2018-ம் ஆண்டு தொடக்கம் மிகவும் கடினமாக இருந்த நிலையில், அடுத்த வருடம் எங்கள் குடும்பத்தில் மேலும் ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தியோடு இந்த ஆண்டை மகிழ்ச்சியான செய்தியுடன் முடித்துள்ளனர்.

    இதுகுறித்து வார்னர் மனைவி கேண்டிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாங்கள் இந்த வருடத்தில் ஒவ்வொருவருடைய ஆதரவையும், அன்பையும் பெற்றோம். எங்கள் குடும்பத்தில் தற்போது நான்கு பேர் உள்ளோம். 2019-ல் மேலும் ஒருவர் வர இருக்கிறார். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    வார்னர் மனைவியை ரசிர்கள் கிண்டல் செய்த சம்பவம்தான், வார்னரை பால் டேம்பரிங் வரை கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×