search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனேஷ்வர் குமார்
    X
    புவனேஷ்வர் குமார்

    டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லையா?: காட்டத்துடன் புவனேஷ்வர் குமார் விளக்கம்

    காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்காமல் உள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில்  திறம்பட செயல்படக்கூடியவர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெறவில்லை.

    ஐந்து போட்டிகளில் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான உடற்குதியை அவர் இன்னும் பெறவில்லை. அடிக்கடி காயம் ஏற்படுகிறது என்பதால் அவரை எடுக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையில் புவேனஷ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை என்ற செய்திகள் வெளியாகின.

    ‘‘புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை. அருடைய உத்வேகம் போய்விட்டது. உண்மையச் சொல்ல வேண்டுமென்றால், 10 ஓவர்கள் வீசுவதைக் கூட அவரிடம் தேர்வாளர்கள் பார்க்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் மறந்துவிட்டது. இது இந்திய அணிக்கு இழப்புதான். அதில் சந்தேகம் இல்லை. ஒரு பந்து வீச்சாளர் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்துவார் என்றால், அது புவனேஷ்வர் குமாராகத்தான் இருக்க முடியும்’’ எனச் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் அந்த செய்திகளில் உண்மையில்லை புவனேஷ்வர் குமார் விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் போட்டி குறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அணிக்கான தேர்வை பொருட்படுத்தாமல் நான் தாமாகவே, மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் தயாராகிவருகிறேன். இனிமேலும் அதைத்தொடர்ந்து செய்வேன். தகவல் அடிப்படையில் உங்கள் அனுமானத்தை தயவு செய்து செய்தியாக்காதீர்கள்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 63 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 அரைசதங்களுடன் 552 ரன்கள் அடித்துள்ளார்.
    Next Story
    ×